பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள், நெட்வொர்க் 18 ஏற்பாடு செய்திருந்த உதயமாகும் இந்தியா உச்சி மாநாட்டில் இன்று உரையாற்றினார்.
நாம் எழுச்சியை குறித்து, ஒரு தேசத்தின் அடிப்படையில், பேசும்போது அது மிகுந்த பரந்த பொருளை கொண்டிருக்கிறது. பொருளாதார எழுச்சிக்கு அப்பால், இந்திய மக்களிடையே எழுந்துள்ள சுயமரியாதை எழுச்சியை உதயமாகும் இந்தியா குறிக்கிறது என தான் கருதுவதாக அவர் கூறினார். மக்களின் கூட்டு மனஉறுதியுடன், சாத்தியமற்றதை கூட அடையலாம். இன்று, இந்த கூட்டு மனஉறுதி, புதிய இந்தியாவின் தீர்மானத்தை அடையவேண்டும் என்பதற்காக செயல்பட்டு வருகிறது என அவர் கூறினார்.
அரசுகள் வளர்ச்சி மற்றும் மாற்றத்திற்கு வழிநடத்துகின்றன, அதனை குடிமக்கள் பின்பற்றுகின்றனர் என்று பல நாடுகளில் உள்ள பொதுவான கருத்திற்கு மாறாக; கடந்த நான்கு ஆண்டுகளில் இந்தியாவில் இப்போக்கு மாற்றப்பட்டுள்ளது என பிரதமர் தெரிவித்தார். தற்போது குடிமக்கள் வழிநடத்துகின்றனர், அரசு பின்பற்றுகிறது என்று மேலும் அவர் கூறினார்.
தூய்மையான பாரதம் இயக்கம் குறுகிய காலத்தில் மிகப்பெரும் மக்கள் இயக்கமாக உருவாகியுள்ளது என அவர் கூறினார். மேலும் அவர், குடிமக்கள் ஊழல் மற்றும் கருப்புப்பணத்திற்கு எதிரான ஆயுதமாக டிஜிட்டல் முறை கட்டணங்களை பயன்படுத்துகிறார்கள் என்றார். அரசு பெரும் முடிவுகளை எடுக்கவும், அவற்றை செயல்படுத்தவும் நாட்டின் குடிமக்கள் உணர்வூட்டியுள்ளார்கள் எனவும் அவர் தெரிவித்தார். இந்தியாவில் இம்மாற்றம், மக்களின் தீர்மானத்தால் ஏற்பட்டதாகும் என்றார் அவர். தேசிய அளவில் ஏற்றதாழ்வு உணர்வினை குறைப்பதற்காக அரசு உழைத்து வருகிறது என அவர் கூறினார். படக்காட்சி உதவியுடன், அவர் எவ்வாறு உஜ்வாலா திட்டம் வெறும் சமையலறையை மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த குடும்பத்தையும் மாற்றியுள்ளது என்பதை விளக்கினார். இது நமது சமூக அமைப்பில் நிலவி வந்த மிகப் பெரிய ஏற்றத்தாழ்விற்கு தீர்வாக அமைந்துள்ளது எனவும் அவர் கூறினார்.
அறிவியல் மாநாட்டை துவக்கி வைத்தும், விளையாட்டுகள் பல்கலைக்கழகத்திற்கான அடிக்கலை நாட்டியும் மற்றும் வட-கிழக்கு பகுதிக்கான பல முக்கியமான திட்டங்களை துவக்கி வைத்தும் என நாள் முழுவதையும் மணிப்பூரில் செலவழித்துவிட்டு தான் திரும்பியுள்ளதாக அவர் கூறினார். கிழக்கு இந்தியாவின் உணர்வுமிக்க ஒருங்கிணைப்பையும், ஒட்டு மொத்த மக்கள்தொகையில் அப்பகுதி மக்களின் பங்களிப்பையும் நாம் மனதில் கொள்ள வேண்டும் என்றார் அவர். ‘கிழக்கிற்கான செயல்பாட்டுக் கொள்கை; இந்தியாவின் கிழக்கிற்கான அதிவேக செயல்பாட்டுக் கொள்கை’ என்ற மந்திரத்துடன் அரசு செயல்பட்டு வருவதாக அவர் கூறினார். இது வெறும் வட-கிழக்கை மட்டும் உள்ளடக்கியதல்ல என்றும், இதில் கிழக்கு உத்திரபிரதேசம், பீகார், மேற்கு வங்காளம் மற்றும் ஒதிசா போன்றவையும் அடங்கும் என்றார் அவர்.
அசாமில் உள்ள எரிவாயு எடுத்தல் திட்டம், கோரக்பூர், பாராவுனி மற்றும் சிந்த்ரி ஆகியவற்றில் உர தொழிற்சாலைகள் புத்துயிரளிப்பு, ஜகதீஷ்பூர் ஹால்தியா எரிவாயு குழாய்; மற்றும் தோலா சாடியா பாலம் போன்றவற்றை உதாரணங்களாக எடுத்துக்காட்டி இப்பகுதியில் திட்டங்கள் மேற்கொள்ளப்பட எவ்வாறு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்பதை அவர் விளக்கினார். கிழக்கு இந்தியாவில் 12 புதிய விமான நிலையங்கள் கட்டப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
மின்வசதியற்ற 18,000 கிராமங்களில், கிழக்கு இந்தியாவில் சுமார் 13,000 கிராமங்களும் மற்றும் வட-கிழக்கில் 5,000 கிராமங்களும் உள்ளன என பிரதமர் கூறினார். இக்கிராமங்கள் மின்மயமாக்கப்பட வேண்டும் என்ற இலக்கு விரைவில் எட்டப்படும் என்றார் அவர். சௌபாக்யா திட்டம் ஒவ்வொரு வீட்டிற்கும் மின் இணைப்பை அளிக்கும் என அவர் கூறினார். தனிமையிலிருந்து, ஒருங்கிணைப்பை நோக்கிய கிழக்கு இந்தியாவின் இப்பயணம், “உதயமாகும் இந்தியா”விற்கு வலு சேர்க்கும் என்றார் அவர்.
சுகாதாரத் துறை குறித்து, பிரதமர் அவர்கள், இப்பிரிவில் நான்கு தூண்களின் மீது அரசு கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்தார்.
• தடுப்பு சுகாதாரம்
• அணுகக்கூடிய உடல்நல கவனிப்பு
• வழங்கல் தரப்பு தலையீடுகள்
• இயக்க முறை தலையீடுகள்
தடுப்பு சுகாதாரம் குறித்து பிரதமர் அவர்கள், 2014-ல் 6.5 கோடி வீடுகளில் இருந்த கழிப்பறைகளை ஒப்பிடும்போது இன்று 13 கோடி வீடுகளில் கழிப்பறைகள் உள்ளன என்றார். 38 சதவீதமாக இருந்த சுகாதார இலக்கு சுமார் 80 சதவீதமாக உயர்ந்துள்ளது என்றார் அவர். யோகா மிகப்பெரும் மக்கள் இயக்கமாக உருவாகியுள்ளது என அவர் கூறினார். சமீபத்திய மத்திய அரசு வரவு-செலவுத் திட்டத்தில் குறீப்பிடப்பட்டுள்ள உடல்நல மையங்கள் குறித்த அறிவிப்பையும் அவர் குறிப்பிட்டார். மேலும் அவர் நோய் தடுப்பு குறித்தும் பேசினார்.
குறைந்த விலையில் 800-க்கும் அதிகமான மருந்துகள் குறைவான விலையில் கிடைக்கக்கூடிய 3000-க்கும் அதிகமான ஜன் ஓளஷாதி மையங்கள் நாடு முழுவதும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் கூறினார். ஸ்டெண்ட்கள் மற்றும் மூட்டு உட்பொருட்களின் விலைகள் வரையறுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
ஆயுஷ்மான் பாரத் திட்டம், ஏறக்குறைய 10 கோடி குடும்பங்களுக்கு உடல்நல உத்தரவாதம் அளிக்கும் என்றார் அவர்.
மருத்துவர்களின் பற்றாக்குறைக்கு தீர்வுகாணும் வகையில், மருத்துவக் கல்லூரிகளின் இடங்கள் வெகுவாக உயர்த்தப்பட்டுள்ளதாக பிரதமர் கூறினார். சர்வதேச மகளிர் தினத்தன்று தேசிய ஊட்டச்சத்து இயக்கம் துவங்கப்பட்டுள்ளதையும் அவர் குறிப்பிட்டார்.
ஒவ்வொரு துறையிலும் தனித்துவ வளர்ச்சி மாதிரியில் எவ்வாறு மத்திய அரசு செயல்பட்டு வருகிறது என்பதை பிரதமர் விளக்கினார்.
எரிசக்தி துறையில் தடைகளை உடைத்து, தீர்வுகள் காண்பதன் முக்கியத்துவம் குறித்து பிரதமர் வலியுறுத்தினார். எரிசக்தி அமைச்சகம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் மற்றும் நிலக்கரி அமைச்சகம் ஆகியவை தற்போது ஒரே அலகாக செயல்படுவதாக அவர் கூறினார். இந்தியா, மின் பற்றாக்குறை என்பதிலிருந்து மின்மிகையை நோக்கியும், இணைப்பு துண்டிப்பு என்பதிலிருந்து நிகர ஏற்றுமதியாளர் என்பதை நோக்கியும் நடைபோட்டு வருகிறது என்றார் அவர்.
இந்தியா அதன் பலவீனங்களை பின்னுக்கு தள்ளிவிட்டு, முன்நோக்கி நடைபோடும் என மக்கள் இன்று நம்புவதாக பிரதமர் கூறினார். அத்தகைய நம்பிக்கையே உதயமாகும் இந்தியாவிற்கான அடித்தளமாகும் என்றார் அவர். இன்று, ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவின் எழுச்சியை அங்கீகரித்துள்ளன. தனது சொந்த வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த உலகின் வளர்ச்சிக்கான புதிய திசையை இந்தியா அளித்து வருகிறது என்றார் அவர். சமீபத்தில் நடைபெற்ற சர்வதேச சூரியயியல் கூட்டணி மாநாட்டில் வெளிப்படுத்தியவாறு, சூரியயியல் புரட்சியில் இந்தியா முன்னெடுத்து வருகிறது என்றார் அவர். ஜி-20 மற்றும் ஐக்கிய நாடுகள் போன்ற சர்வதேச தளங்களில், ஒட்டுமொத்த உலகையும் பாதிக்கக்கூடிய பயங்கரவாதம், கருப்புபணம் மற்றும் ஊழல் போன்ற பிரச்சினைகளை இந்தியா எழுப்பியுள்ளது என அவர் கூறினார்.
பொருளாதாரத் துறையில், கடந்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளில், உலகளாவிய பொருளாதார முன்னேற்றத்திற்கான சக்தியை இந்தியா அளித்துள்ளது என பிரதமர் கூறினார். அனைத்து பெரும்-பொருளாதார அளவீடுகளிலும் நாடு சிறப்பாக செயல்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். தரமதிப்பீடு முகமைகள் இந்தியாவின் தரத்தை திருத்தியமைத்து, உயர்த்தி எழுதிவருவதாகவும் அவர் கூறினார்.
ஏழை, குறைந்த-நடுத்தர மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் உணர்வுகளை மனதில் கொண்டு முழுமையான அணுகுமுறையில் அரசு செயல்பட்டு வருகிறது என பிரதமர் கூறினார். இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கக்கூடியதாக பிரதம மந்திரி முத்ரா திட்டம் உருவாகியுள்ளது என்றார் அவர்.
Read Full Presentation Here