வட கிழக்கு இந்தியா, இயற்கை வளங்கள் மற்றும் கலாச்சாரம் செழித்தோங்கும் நிலம் ஆகும். இருப்பினும், பிரதமர் நரேந்திர மோடி இந்த பகுதியை வளர்ச்சி திட்டங்களில் மைய பகுதியாக சேர்க்கும் வரை, அரசியல் வட்டாரங்களில் தனித்து விடப்பட்ட நிலையிலேயே இந்த பகுதி இருந்தது.
வட கிழக்கு இந்தியாவின் ஒட்டு மொத்த வளர்ச்சி, இந்தியா, ACT East கொள்கையின் கீழ், ஆசியா-பசபிக் நாடுகளுடன் தன் ராஜ்ஜீய மற்றும் யுக்தி அடிப்படையிலான உறவுகளை விரிவு படுத்துவதுடன் பிணைந்து உள்ளது. கலாச்சார உறவுகளை வளர்ப்பதிலிருந்து, இரு நாட்டு மக்களுக்கிடையே தொடர்பு ஏற்படுத்துவதிலிருந்து, ராணுவ ஒத்துழைப்பை எல்லையில் உள்ள நாடுகளுடன் ஏற்படுத்துவதன் மூலம், இந்தியாவின் பாதுகாப்பு அம்சங்களுக்கு துணிவூட்டுதல் வரை, “தென்கிழக்கு ஆசியாவின் நுழைவு வாயில்” என்ற அடிப்படையில் இந்த பிராந்தியத்தின் உள்ளாற்றலை முழுமையாக பயன்படுத்துவதை, வெளிநாடுகளை அணுகுதல் நோக்கமாக கொண்டது.
இந்த பகுதிக்கு உள்ளும், நாட்டின் பிற பகுதிகளுடனும், உலகத்துடனும் போதுமான இணைப்பு வசதி இல்லாதது, வட கிழக்கு பிராந்தியத்தின் வளர்ச்சி அமைவுக்கு தடையாக உள்ளது என அடிக்கடி குறிப்பிடப்படுகிறது. இந்த பிராந்தியத்தின் சிக்கல் இல்லாத இணைப்புக்கு, ரெயில்வே, விமான சேவை, ஹைவே, நீர்வழி மற்றும் i-வே தொடர்பான உள்கட்டமைப்பு வளர்ச்சி செயல்திட்டங்களை வேகப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்
பிரபல இசை கலைஞர், பாடலாசிரியர் மற்றும் கவிஞர், பூபென் அஜாரிகாவின் பெயர் சூட்டப்பட்ட, ப்ரஹ்மபுத்ரா நதியின் மீது அஸ்ஸாமில் கட்டப்பட்டு, சமீபத்தில் திறக்கப்பட்ட தோலா-ஸாடியா பாலம், இந்தியாவின் மிக நீளமான பாலம் ஆகும். நீண்ட நாள் நிலுவையில் இருந்த இந்த செயல்திட்டம், பிரதமர் மோடி 2014-ல் ஆட்சி பொறுப்புக்கு வந்த பின் உந்துதல் பெற்றது. 2011 ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த பாலம் செயல்திட்டம், திட்டமிட்டதை தாண்டி அதிக செலவினங்கள் ஏற்பட்டு, காலதாமதம் அடைந்தது. புதிய அரசு இதற்கு முன்னுரிமை அளித்து, பாலம் கட்டும் பணியை விரைவு படுத்தி, இந்த செயல்திட்டத்தை இரண்டு-மூன்று ஆண்டுகளில் நிறைவேற்றியது.
மாறுபட்ட தன்மையுடைய உலக பகுதிகளுள் ஒன்றான, ஏழு மாநிலங்களை உள்ளடக்கிய இந்த பிராந்தியம், பல சமூக பிரிவினர் மற்றும் கலாச்சாரங்களை, தொன்றுதொட்டு கொண்டுள்ளது. சுத்தம் மற்றும் இணைப்புடன், சேர்ந்து பிராந்தியத்தின் மனதை கவரும் இயற்கை நிலகாட்சிகள், தாவர வகைகள் மற்றும் விலங்கினங்கள், வண்ணமயமான பாரம்பரியம், போன்ற அம்சங்கள், வட-கிழக்கு இந்தியாவை ஆசியாவின் சுற்றுலா தளமாக மாற்றுவதற்கு, முக்கிய கருவிகளாக விளங்கும்.
அவருடைய வருகைகளின் போது, பிரதமர் நரேந்திர மோடி, இந்த பிராந்தியத்தின் கலாச்சார முக்கியத்துவம் சிறப்பாக அடையாளப்படுத்தப்படுவதை உறுதிபடுத்துகிறார். நாகாலாந்தின் ’ஹார்ன்பில் திருவிழா’ மற்றும் மணிபூரின் ‘ஸங்கை திருவிழாக்களை’ அவர் தொடங்கி வைத்து, இந்த பிராந்தியத்தின் பலவகையான கலாச்சார முறைகளை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி, காட்சிப்படுத்தினார்.
சமமான வளர்ச்சி என்ற இலக்கு, இந்தியாவின் பிற பகுதிகளில் ஏற்படும் முன்னேற்றங்களுக்கு சமமாக வட-கிழக்கு இந்தியாவின் முன்னேற்றங்கள் அமைவதில் கவனமாக உள்ளது. இது உள்கட்டமைப்பு வளர்ச்சி மட்டுமின்றி, விவசாய உற்பத்தியை பெருக்குவதிலும் கவனமையம் கொண்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, பசுமை புரட்சியை ஒட்டி என்றும் மாறாத பசுமை புரட்சிக்கு அழைப்பு விடுத்தார். இந்த இயக்கத்துக்கு, வட கிழக்கு முன்னணி வகிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
விவசாய துறையை நவீனமயமாக்குதல், உணவு பதனிடுதல், விவசாய ஆராய்ச்சி மற்றும் பிற மறைமுகமான சேவைகள் மூலம் விவசாயிகளின் வருவாயை 2022-க்குள் இரட்டிப்பாக்குவதை வலியுறுத்தி, இயற்கை மற்றும் நீடித்து நிலைக்கும் விவசாயம், வட கிழக்கின் விவசாய வளர்ச்சியின் மையமாக ஆக்க மத்திய அரசு இலக்கு கொண்டுள்ளது.
இந்த பகுதியின் வளர்ச்சிக்கு, தடைகளாக உள்ள நிர்வாக, உட்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு இடர்ப்பாடுகளை நீக்கும் அரசாங்கத்தின் தீர்மான நடவடிக்கைகளால், வளர்ச்சியின் புற எல்லையில் இருந்த வட கிழக்கு பகுதிகள், இப்போது தன் சொந்த உரிமையுடன் ஒரு சக்தியாக உருமாறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து இந்த பகுதிகளுக்கு வருவதால், வளர்ச்சி செயல்திட்டங்கள் உத்வேகம் அடைந்துள்ளன.
வாழ்வாதாரங்கள், தொழில்முனைவு, புது தொழில் முதலீடுகள், ஸ்டார்-அப்கள், மற்றும் திறன் மேம்பாடு போன்றவற்றில் வட-கிழக்கு இந்திய மக்களுக்கு மேலும் வாய்ப்புகள் கிடைக்க செய்து, இந்த பிராந்தியம், நாட்டின் பிற பகுதிகளுக்கு இணையாக வீறுநடை போடுவதை உறுதி செய்ய, அனைத்து தரப்புகளின் முயற்சிகளையும் ஒன்றிணைக்க பிரதமர் நரேந்திர மோடி செயல்படுகிறார்
ஒத்துழைப்புடன் கூடிய கூட்டாட்சி முறைமையின் மிக உயர்ந்த குறிக்கோள்களை கருத்தில் கொண்டு, வட கிழக்கு இந்தியாவில் இருக்கும் அனைத்து மாநிலங்களுக்கும், மனிதாபிமானம் மற்றும் வளர்ச்சிக்கு உந்தும் தலைமையாக, மக்களால், மக்களுக்காக, மக்களுடைய, மத்திய அரசு அமைந்துள்ளது. அந்த குறிக்கோளை ஒட்டி, பிரதமர் நரேந்திர மோடி, மாநில அரசுகள் உடனான அனைத்து விதமான தகவல் தொடர்பு தளங்களையும் திறந்துள்ளார். வட கிழக்கு தொடர்பான பிரச்சினைகள் மீது சிறப்பு கவனம் செலுத்துமாறு மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.
கடந்த மூன்று வருடங்களில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ் செயல்படும் மத்திய அரசு, வட-கிழக்கு பகுதிகள் மீதான “அமைதி குலைந்த பகுதிகள்” என்ற கண்ணோட்டத்தை மாற்றி, அவற்றை நிரந்தர வளர்ச்சி பாதையில் பயணப்பட வைத்துள்ளது.
வட-கிழக்கு பகுதி மக்கள் சரியாக ஒன்றுபட்டு இணையவும், இந்தியாவின் வளர்ச்சி பாதையில் தலைவர்களாக உருவாகவும், இந்த பகுதியில் உள்ள பல்வேறு தரப்பினருடன் மேற்கொள்ளப்படும் இணைப்பு மற்றும் பேச்சுவார்த்தைகளை பலப்படுத்த, பிரதமர் தானே முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்.
வடகிழக்கு இந்தியாவின் ‘அஷ்ட லக்ஷ்மி’. இணைப்பை மேம்படுத்த ரெயில்வே, ஹைவே, வான்வழி, நீர்வழி மற்றும் i-வே பஞ்ச தத்துவங்கள் ஆகும். வட கிழக்கு பிராந்திய மக்கள் நலனை உறுதிபடுத்த இந்த ஐந்து அம்சங்கள் மூலம் அரசாங்கம் செயலாற்றி வருகிறது.
- பிரதமர் நரேந்திர மோடி
(அஸ்ஸாம் கோகமுக், 26 மே 2017)