மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் மற்றும் கல்யாணியில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓவின் 250 படுக்கை வசதிகள் கொண்ட இரண்டு தற்காலிக மருத்துவமனைகளை உருவாக்குவதற்கு அவசர கால சூழ்நிலையில், பிரதம மந்திரியின் குடிமக்களுக்கான உதவி மற்றும் நிவாரணம் (பிஎம் கேர்ஸ்) நிதி அறக்கட்டளை ரூ. 41.62 கோடியை ஒதுக்கீடு செய்ய முடிவு செய்துள்ளது.
இதற்காக, குறிப்பிட்ட உள்கட்டமைப்பு ஆதரவை மாநில அரசும், மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகமும் வழங்கும்.
மேற்கு வங்கத்தில் கொவிட் நிலைமையை திறம்பட கையாளுவதற்குத் தேவையான மருத்துவ உள்கட்டமைப்பை இந்தத் திட்டம் மேம்படுத்தும்.
மருத்துவ உள்கட்டமைப்பை அதிகரிப்பதற்கு ஆதரவளிக்கும் வகையில், பிஎம் கேர்ஸ் அறக்கட்டளை, பிகார், தில்லி, ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் கொவிட் மருத்துவமனைகளை உருவாக்கவும் உதவிகளை வழங்கியுள்ளது.