மகிழ்ச்சியாக வேலை செய்தல்

Published By : Admin | September 16, 2016 | 23:51 IST

பிரதமர் திரு. மோடி எப்படி எப்போதும் சோர்வடையாமல் இருக்கிறார்? இவ்வளவு பரபரப்பான சூழலிலும் ஒரு இயந்திரத்தைப் போல தொடர்ந்து சிறப்பாக இயங்க முடிந்த அவரது ஆற்றலின் மூலம் எது?  இந்த கேள்வியை அவரது ஆதரவாளர்களும் சரி, அவரை விமர்சிப்பவர்களும் சரி அவரிடம் எப்போதும் கேட்கிறார்கள்.  

புதுதில்லி சார்ந்த தொலைக்காட்சி ஒன்று பிரதமரின் முதல் டவுன்ஹால் உரையாடலை ஒளிபரப்பிய போது இந்த கேள்வி அவரிடம் முன்வைக்கப்பட்டது.  அவர் அதற்கு அளித்த பதில் நடைமுறைக்கு ஒத்துவருவதாகவும், ஆழ்ந்த தத்துவங்களை உள்ளடக்கியதாகவும் இருந்தது.  சோர்வு என்பது ஒரு நோக்கத்தை நோக்கி வேலை செய்யும்போது ஏற்படுவதல்ல.  இன்னும் மீதமிருக்கும் வேலைகளை எண்ணியே ஏற்படுவது.  மோடியின் வார்த்தைகளிலேயே சொல்ல வேண்டுமானால், “வேலை செய்யாமல் இருக்கும்போதுதான் நம் சோர்வடைகிறோம்.  வேலை நமக்கு திருப்தியளிக்கிறது. அந்த திருப்திதான் நமக்கு ஆற்றலை அளிக்கிறது. இதை நான் பலமுறை உணர்ந்து என் இளம் நண்பர்களிடமும் சொல்லியிருக்கிறேன்.  சோர்வு என்பது மனம் சார்ந்தது.  எல்லோரிடமும் ஏராளமான வேலைகளைச் செய்ய தெம்பு இருக்கிறது.  புதிய சவால்களை ஏற்றால், உங்கள் உள்மனம் உங்களுக்கு துணை நிற்கும்.  நம் இயல்பிலேயே அது இருக்கிறது,”

அவரது தத்துவம் எளிமையானது என்றாலும் ஆழமானது.  உங்கள் வேலையை நீங்கள் மகிழ்ச்சியுடன் செய்யும்போது சோர்வடையவே மாட்டீர்கள்.  ஏனெனில் நீங்கள் செய்யும் வேலையின் மூலம் உங்களுக்கு மகிழ்ச்சி கிடைக்கிறது.

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Annual malaria cases at 2 mn in 2023, down 97% since 1947: Health ministry

Media Coverage

Annual malaria cases at 2 mn in 2023, down 97% since 1947: Health ministry
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
பிரதமர் மோடியின் இதயத்தைத் தொடும் கடிதம்
December 03, 2024

திவ்யாங் (ஊனமுற்றோர்) கலைஞர் தியா கோசாய்க்கு, படைப்பாற்றலின் ஒரு தருணம் வாழ்க்கையை மாற்றும் அனுபவமாக மாறியது. அக்டோபர் 29 அன்று பிரதமர் மோடியின் வதோதரா ரோட்ஷோவின் போது, அவர் பிரதமர் மோடி மற்றும் ஸ்பெயின் அரசாங்கத்தின் தலைவரான மாண்புமிகு திரு. பெட்ரோ சான்செஸ் ஆகியோரின் ஓவியங்களை வழங்கினார். இரு தலைவர்களும் அவரது இதயப்பூர்வமான பரிசை தனிப்பட்ட முறையில் ஏற்றுக்கொண்டு, அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்கள்.

பல வாரங்களுக்குப் பிறகு, நவம்பர் 6 ஆம் தேதி, தியா தனது கலைப்படைப்பைப் பாராட்டி, ஸ்பெயின் ஜனாதிபதி மாண்புமிகு திரு. சான்செஸ் கூட அதை எப்படிப் பாராட்டினார் என்பதைப் பகிர்ந்து கொண்ட கடிதத்தைப் பிரதமர் மோடியிடம் இருந்து பெற்றார். "விக்சித் பாரத்" (வளர்ந்த பாரதம்) அமைப்பதில் இளைஞர்களின் பங்கில் நம்பிக்கையை வெளிப்படுத்தி, அர்ப்பணிப்புடன் நுண்கலைகளைத் தொடர பிரதமர் மோடி அவரை ஊக்குவித்தார். அவர் தனது தனிப்பட்ட தொடர்பை வெளிப்படுத்தி, அவரது குடும்பத்தினருக்கு அன்பான தீபாவளி மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

மகிழ்ச்சியில் திளைத்த தியா, அந்தக் கடிதத்தை தனது பெற்றோரிடம் காட்டினார், அவர்கள் குடும்பத்திற்கு இவ்வளவு பெரிய கௌரவத்தைக் கொண்டு வந்ததற்காக மகிழ்ச்சியடைந்தனர். "எங்கள் நாட்டின் சிறிய பகுதியாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன். மோடி ஜி, உங்கள் அன்பையும் ஆசிர்வாதத்தையும் எனக்கு வழங்கியதற்கு நன்றி," என்று கூறிய தியா, பிரதமரின் கடிதம் வாழ்க்கையில் தைரியமான செயல்களைச் செய்ய தன்னை ஆழமாகத் தூண்டியது, மற்றவர்களுக்கும் அவ்வாறு செய்ய அதிகாரம் அளிக்கும் என்று தெரிவித்தார்.

திவ்யாங்களுக்கு (ஊனமுற்றோர்) அதிகாரம் அளிப்பதிலும் அவர்களின் பங்களிப்பை அங்கீகரிப்பதிலும் பிரதமர் மோடியின் இந்தச் செய்கை அவரது உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. சுகம்யா பாரத் அபியான் (இந்தியாவில் அணுகல்தன்மையை மேம்படுத்துவதற்கான பிரச்சாரம்) போன்ற பல முயற்சிகள் முதல் தியா போன்ற தனிப்பட்ட தொடர்புகள் வரை, அவர் தொடர்ந்து ஊக்கமளித்து மேம்படுத்துகிறார். இந்த ஒவ்வொரு முயற்சியும் பிரகாசமான எதிர்காலத்தை வடிவமைப்பதில் முக்கியமானது என்பதை நிரூபிக்கிறது.