மேதகு அதிபர் ஜோகோ விடோடோ அவர்களே,
மேதகு தலைவர்களே,
வணக்கம்
நமது கூட்டாண்மை அதன் நான்காவது தசாப்தத்தில் நுழைகிறது.
இந்த வகையில், இந்தியா-ஆசியான் உச்சி மாநாட்டுக்கு இணைத் தலைமை தாங்குவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
இந்த உச்சிமாநாட்டை சிறப்பாக ஏற்பாடு செய்ததற்காக, அதிபர் விடோடோவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆசியான் குழுவின் திறமையான தலைமைக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அண்மையில் பதவியேற்றுள்ள கம்போடியாவின் பிரதமர் மேதகு ஹுன் மானெட் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இக்கூட்டத்தில் பார்வையாளராக கலந்து கொண்டுள்ள கிழக்கு தைமூர் நாட்டின் பிரதமர் மேதகு சனானா குஸ்மாவோவையும் நான் வரவேற்கிறேன்.
மேதகு தலைவர்களே,
நமது வரலாறும், புவியியலும் இந்தியாவையும் ஆசியான் அமைப்பையும் இணைக்கின்றன.
பகிரப்பட்ட விழுமியங்கள், பிராந்திய ஒற்றுமையுடன்,
அமைதி, செழிப்பு மற்றும் ஒரு பன்முக உலகில் பகிரப்பட்ட நம்பிக்கை ஆகியவையும் நம்மை ஒன்றிணைக்கின்றன.
ஆசியான், இந்தியாவின் கிழக்கு நோக்கிய கொள்கையின் மையத் தூணாக உள்ளது.
ஆசியான் மையப்படுத்தல் மற்றும் இந்தோ-பசிபிக் குறித்த ஆசியான் கண்ணோட்டத்தை இந்தியா முழுமையாக ஆதரிக்கிறது.
இந்தியாவின் இந்தோ-பசிபிக் முன்முயற்சியில் ஆசியான் முக்கிய இடத்தை வகிக்கிறது.
கடந்த ஆண்டு, நாம் இந்தியா-ஆசியான் நட்புறவு ஆண்டைக் கொண்டாடினோம், மேலும் நமது உறவை ஒரு 'விரிவான உத்திபூர்வ கூட்டாண்மைக்கு' உயர்த்தினோம்.
மேதகு தலைவர்களே,
இன்று, உலகளாவிய நிச்சயமற்ற சூழலில் கூட, நமது பரஸ்பர ஒத்துழைப்பில் ஒவ்வொரு துறையிலும் தொடர்ச்சியான முன்னேற்றம் உள்ளது.
இது நமது உறவின் வலிமை மற்றும் மீள்திறனுக்கு ஒரு சான்றாகும்.
இந்த ஆண்டு ஆசியான் உச்சிமாநாட்டின் கருப்பொருள் 'ஆசியான் விஷயங்கள்: வளர்ச்சியின் மையம்' என்பதாகும்.
ஆசியான் முக்கியமானது, ஏனென்றால் இங்கு அனைவரின் குரலும் கேட்கப்படுகிறது, ஆசியான் வளர்ச்சியின் மையமாக உள்ளது, ஏனெனில் ஆசியான் பிராந்தியம் உலகளாவிய வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
'வசுதைவ குடும்பகம்' - 'ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்', இந்த உணர்வுதான் இந்தியாவின் ஜி-20 தலைமைத்துவத்தின் கருப்பொருளாகும்.
மேதகு தலைவர்களே,
21-ம் நூற்றாண்டு ஆசியாவின் நூற்றாண்டு. இது நமது நூற்றாண்டு.
இதற்காக, கொரோனாவுக்கு பிந்தைய உலக ஒழுங்கையும், மனித நலனுக்கான அனைவரின் முயற்சிகளையும் உருவாக்க வேண்டியது அவசியம் ஆகும்.
சுதந்திரமான மற்றும் வெளிப்படையான இந்தோ-பசிபிக் முன்னேற்றம், உலகளாவிய தெற்கின் குரலை உயர்த்துவது ஆகியவை அனைவரின் பொதுவான நலனுக்கும் உகந்ததாகும்.
இன்றைய விவாதங்கள் இந்தியா மற்றும் ஆசியான் பிராந்தியத்தின் எதிர்காலத்தை வலுப்படுத்துவதற்கான புதிய தீர்மானங்களுக்கு வழிவகுக்கும் என்று நான் நம்புகிறேன்.
சிங்கப்பூர் நாட்டின் ஒருங்கிணைப்பாளர், வரவிருக்கும் தலைமை பொறுப்பு ஏற்கவிருக்கும் தலைவர் லாவோ பி.டி.ஆர், மற்றும் உங்கள் அனைவருடனும், தோளோடு தோள் நின்று பணியாற்ற இந்தியா உறுதிபூண்டுள்ளது.
நன்றி.