நமோ புத்யாய..!
நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தூபா அவர்களே, மதிப்புக்குரிய திருமதி அர்சு தூபா அவர்களே, ஜி, நிகழ்ச்சிக்கு வந்துள்ள நேபாள அமைச்சர்களே, புத்த துறவிகளே, பிற நாடுகளிலிருந்து வந்துள்ள விருந்தினர்களே.. மற்றும் சகோதர சகோதரிகளே..
உங்கள் அனைவருக்கும் புத்த பூர்ணிமா வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
லும்பினியில் புத்தர் பிறந்த இடமான மாயாவதி கோயிலுக்கு சென்று வந்தது என் வாழ்வில் மறக்க முடியாத நாள். அங்கு சென்றபோது புத்தரின் சக்தியையும், அமைதியான உணர்வும் எனக்கு ஏற்பட்டது. 2014-ம் ஆண்டு என்னால் வழங்கப்பட்ட மகாபோதி மரம் தற்போது நன்றாக வளர்ந்திருப்பதை கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.
நண்பர்களே..
நேபாளம் என்றால் உலகின் உயர்ந்த மலை சிகரங்களும், பல்வேறு சிறப்பு வாய்ந்த புண்ணிய தலங்களும், நமக்கு நினைவுக்கு வரும்.
நண்பர்களே..
உலகில் அசாதாரணமான சூழல்கள் நிலவினாலும் இரு நாடுகளிடையே நல்லுறவு தொடர்ந்து வருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
சகோதர, சகோதரிகளே..
புத்தரின் சிந்தனைகள் வெறும் தத்துவங்களை மட்டும் கொண்டதாக இல்லால், மாறாக மனித சமூகம் குறிந்து நாம் அறிந்து கொள்வதற்கான அடிப்படைகளை கொண்டதாக உள்ளது.
நண்பர்களே..
குஜராத் மாநிலத்தில் நான் பிறந்த வத்நகர், பல ஆண்டுகளுக்கு முன் புத்த துறவிகள் ஏராளமானோர் தங்கியிருந்த புண்ணிய இடமாக விளங்கியது. இந்தியாவின் சாரநாத் அருகிலுள்ள காசி, புத்தகயா மற்றும் குஷிநகரும், நேபாளத்தின் லும்பினியும் இரு நாடுகளிடையேயான பரஸ்பர கலாச்சார தொடர்பை மேலு்ம் வலுப்படுத்துகின்றன.
நண்பர்களே..
நேபாளம், இந்தியா இரு நாடுகளுக்கிடையோ நீண்ட காலமாக உள்ள நல்லுறவு இமயமலையை போல் பலமாக உள்ளது. நேபாளம், இந்தியா இடையே தொழில்நுட்பம், அறிவியல், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது உள்ளிட்ட விஷயங்களில் உள்ள நல்லுறவானது மிகவும் திருப்திகரமாக இருக்கிறது.
உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை புத்த பூர்ணிமா வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.