The country is today filled with confidence, it is scaling new heights: PM Modi
The Constitution given to us by Dr. Babasaheb Ambedkar speaks about justice for all. We have to ensure social justice for all and create an India that is developing rapidly: PM Modi
The recently concluded Parliament session was one devoted to social justice. The Parliament session witnessed the passage of the Bill to create an OBC Commission: PM
On behalf of the people of India, I bow to all those great women and men who sacrificed themselves for the nation during the freedom movement: PM Modi
We are proud of what we have achieved and at the same time, we also have to look at where we have come from. That is when we will realised the remarkable strides the nation has made: PM
The demand for higher MSP was pending for years. With the blessings of the farmers, the decision on MSP was taken by our Government: PM
Last year GST became a reality. I want to thank the business community for the success of the GST: PM Modi
The OROP demand was pending for decades. The people of India, our brave army personnel had faith in us and we were able to take a decision on OROP: PM
We can take tough decisions as interests of the nation are supreme for us: PM Modi
From being seen as among the fragile five, India is now the land of reform, perform and transform. We are poised for record economic growth: PM
India's voice is being heard effectively at the world stage. We are integral parts of forums whose doors were earlier closed for us: PM
Northeast is witnessing unprecedented development today: PM Modi
India is proud of our scientists, who are excelling in their research and are at the forefront of innovation: PM
Our focus is on farmer welfare, we are modernising the agriculture sector: PM Modi
With a 'Beej Se Bazar Tak' approach, we are bringing remarkable changes in the agriculture sector. The aim is to double farmer incomes by 2022: PM
Mahatma Gandhi led the Satyagrahis to freedom. Today, the Swachhagrahis have to ensure a Swachh Bharat: PM Modi
PM Jan Arogya Abhiyaan will be launched on 25th September this year. It is high time we ensure that the poor of India get access to good quality and affordable healthcare: PM
The honest taxpayer of India has a major role in the progress of the nation, says Prime Minister Modi
We will not forgive the corrupt and those who have black money. They have ruined the nation. Delhi's streets are free from power brokers. The voice of the poor is heard: PM
The practice of Triple Talaq has caused great injustice among Muslim women. I ensure the Muslim women that we will work to ensure justice is done to them: PM
From 126, Left Wing Extremism is restricted to 90 districts. We are working to ensure peace across the nation: PM
Atal Ji gave the mantra of Insaniyat, Kashmiriyat and Jamhuriyat. We stand shoulder-to-shoulder with people of J&K in the state’s development: PM Modi
We want to progress more. There is no question of stopping or getting tired on the way: PM Modi

எனது அருமை நாட்டுமக்களே, இந்த புனிதமான சுதந்திர தினத்தன்று உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இன்று நமது நாட்டில் தன்னம்பிக்கை முழுமையான அளவில் உள்ளது. புதிய உயரங்களை எட்டும் உறுதியுடன், கடின உழைப்புடன் நாடு புதிய உயரங்களை எட்டி வருகிறது. இன்றைய புது விடியல் நமக்கு புதிய உத்வேகத்தையும், நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும், புதிய சக்தியையும் கொண்டு வந்துள்ளது.

எனது அருமை நாட்டுமக்களே, நமது நாட்டில் 12 வருடங்களுக்கு ஒரு முறை பூக்கும் நீல குறிஞ்சி மலர் உண்டு. நமது சுதந்திர தினமான இன்று மூவர்ணத்தில் அசோக சக்கரத்தை போல தென் நீலகிரி மலைகளில் நீல குறிஞ்சி மலர் பூத்து குலுங்குகிறது.

எனது அருமை நாட்டு மக்களே, உத்தராகண்ட், இமாச்சல், மணிப்பூர், தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தை சேர்ந்த நம் மகள்கள் ஏழு கடல்களை சுற்றி வந்துள்ள நிலையில் இந்த சுதந்திர தின கொண்டாட்டத்தை நாம் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். அவர்கள் ஏழு கடல்களின் நிறத்தை நமது மூவர்ணத்திற்கு மாற்றி (ஏழு கடல்களிலும் மூவர்ணக்கொடியை ஏற்றி) நம்மிடையே வீரத்துடன் திரும்பி வந்துள்ளனர்.

எனது அருமை நாட்டு மக்களே,

உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி பலமுறை  சாதனை புரிந்துள்ள சூழ்நிலையில் இந்த சுதந்திர தினத்தை நாம் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். நமது துணிவு மிக்க மகளிர் பலரும் எவரெஸ்ட் சிகரத்தில் மூவர்ண கொடியை  ஏற்றியிருக்கிறார்கள்.

   நமது வனப்பகுதிகளில் கடைக்கோடி பகுதிகளில் வாழும் பழங்குடி இன குழந்தைகள் நமது மூவர்ண கொடியை இமயமலை சிகரத்தில் ஏற்றியதன் மூலம் அவர்களின் புகழை விரிவுபடுத்தி உள்ளனர் என்பதை இந்த சுதந்திர தின விழாவில் நான் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

எனது அருமை நாட்டு மக்களே,  சமீபத்தில் நிறைவடைந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை கூட்டத்தொடர் மிகவும் சீரான  முறையில் நடைபெற்றது. இந்த கூட்டத் தொடர் சமூக நீதி நோக்கத்திற்காக அர்ப்பணிக்கப்பட்டதாக அமைந்தது

தலித் அல்லது வஞ்சிக்கப்பட்ட அல்லது சுரண்டப்பட்ட யாரேனும் அல்லது இழப்பை சந்தித்த நபர் அல்லது மகளிர் என யாராக இருந்தாலும் அவர்களுக்காக நமது நாடாளுமன்றம் அவர்களது விருப்பங்களைப் பாதுகாக்கும் உணர்வு மற்றும் விழிப்புணர்வுடன் சமூக நீதியை கூடுதல் வலிமையாக்கியுள்ளது.

இதர பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அரசியல் சட்ட அந்தஸ்து அளிக்க வேண்டும் என கோரிக்கை பல ஆண்டுகளாக எழுப்பப்பட்டது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் விருப்பங்களை பூர்த்தி செய்யும் வகையில் இதர பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அரசியல் சாசன அந்தஸ்து அளிக்கும் முயற்சியை நமது நாடாளுமன்றம் மேற்கொண்டுள்ளது

நமது நாட்டில் செய்தி அறிக்கைகள் புதிய எண்ணங்களை உருவாக்கியுள்ள இந்த தருணத்தில் நாம் இன்று சுதந்திர தின விழாவை கொண்டாடிக்கொண்டு இருக்கிறோம். இன்று, உலகத்தின் ஒவ்வொரு மூலையில் உள்ள இந்தியரும் இந்தியா தற்போது உலகின் ஆறாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுத்துள்ளதுஎன்பதை கண்டு பெருமை அடைகிறார்கள். பல்வேறு தொடர் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருவதால் நல்ல சூழ்நிலையில்  நாம் சுதந்திர தின விழாவை கொண்டாடிக்கொண்டு இருக்கிறோம்.

நமது நாடு சுதந்திரம் அடைவதற்காக நமது தேச தந்தையின் தலைமையில் பல லட்சம் மக்கள் தங்களின் வாழ்க்கையை  அர்ப்பணித்து தங்களின் இளமை காலத்தை சிறையில் கழித்துள்ளனர். பல மாபெரும் புரட்சியாளர்கள் தூக்கு மேடையை தைரியமாக கட்டி தழுவியுள்ளனர். எனது நாட்டு மக்களின் சார்பில் துடிப்புமிக்க சுதந்திர போராட்ட வீரர்களை எனது இதயத்தின் மையத்தில் இருந்து வணங்குகிறேன்.

தேசியக் கொடியான மூவர்ணக் கொடியின் பெருமையையும் கண்ணியத்தையும்காக்கவும், மக்களுக்கு சேவை அளிக்கவும் நாள்தோறும் நமது ராணுவ, துணை ராணுவ மற்றும் காவல்துறை வீரர்கள் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்து வருகின்றனர். எனது வாழ்த்துக்கள் என்றும் அவர்களோடு இருக்கும்.

நமது நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கடும் மழை  மற்றும் வெள்ளம் குறித்த செய்திகளை கேட்டு வருகிறோம். வெள்ளம் காரணமாக தங்களது அன்புக்குரியவர்களை இழந்ததுடன் ஏராளமான துயரங்களை சந்தித்த மக்களுடன் இந்த நாடு இருக்கிறது என்பதையும் அவர்களுக்கு உதவும் வகையில் முழுமையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது என்பதையும் மறு உறுதிசெய்ய விரும்புகிறேன். தங்களது அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது இதயபூர்வமான் இரங்கல்கள்.

எனது அருமை நாட்டு மக்களே,

அடுத்த ஆண்டு ஜாலியன்வாலா பாக் படுகொலையின் 100 ஆண்டை குறிப்பதாகும். நாட்டின் விடுதலைக்காக ஏராளமானோர் தங்களது இன்னுயிரைத் தியாகம் செய்துள்ளனர் ஜாலியன்வாலாபாக் சம்பவத்தில் அந்த துடிப்பான இதயங்கள் செய்த தியாகங்கள் நமக்கு ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது. அந்த துடிப்புமிக்க இதயங்களை எனது இதயத்தின் ஆழத்தில் இருந்து வணக்குகிறேன்.

எனது அருமை நாட்டு மக்களே,

நமது சுதந்திரத்திற்காக நாம் பெரும் விலை கொடுத்திருக்கிறோம். நமது தேசப்பிதா மற்றும் புரட்சியாளர்கள் தலைமையில் நடைபெற்ற சத்யா கிரகம் போன்ற பல்வேறு போராட்டத்தில் பல்வேறு மக்கள் துணிச்சலாக போராடியுள்ளனர்.  இந்த போராட்டத்தின் போது சிறைத் தண்டனை போன்ற பல்வேறு துயரங்களை சந்தித்தனர். இருந்தும் மகத்தான இந்தியா  எனும் கனவினை நனவாக்கினார்.

பல ஆண்டுகளுக்கு முன்பே மகாகவி சுப்பிரமணிய பாரதி நமது நாட்டின் நோக்கத்தை வார்த்தைகளாக கூறினார்:

அனைத்து விதமான கட்டுப்பாடுகளில் இருந்தும் விடுதலை பெறுவதற்கான வழியை உலகத்திற்கு இந்தியா காண்பிக்கும் என்றார் மகாகவி சுப்பிரமணிய பாரதி.

எனது அருமை நாட்டு மக்களே,

சுதந்திரத்திற்கு பின்னர் அனைத்தையும் உள்ளடக்கிய அரசியல் சாசனம் பாபா சாஹேப் அம்பேத்கர் தலைமையில் உருவாக்கப்பட்டது. ஏழைகளுக்கு நீதியும், அனைவரின் முன்னேற்றத்திற்கான சமவாய்ப்புகளும் கொண்ட தேசத்தின் கனவை நனவாக்கும் வகையில் இந்த அரசியல் சட்டத்தை பாபாசாஹேப் அம்பேத்கர் உருவாக்கினார்.

எனது சகோதர சகோதரிகளே,

ஏழைகளுக்கான நீதியை உறுதி செய்ய வேண்டும். மாற்றுத்திறனாளிகள், பெண்கள், பழங்குடியினவாசிகள் என அனைவருக்கும் சம வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். அனைத்து நடுத்தர மக்களும் தங்களின் வாழ்க்கை முன்னேற்றத்தில் எந்த தடையையும் சந்திக்கக் கூடாது. இதைதான் நமது அரசியலமைப்பு சாசனம் கூறியுள்ளது.

எனது அருமை நாட்டு மக்களே,

நான் ஏற்கனவே டீம் இந்தியாவின் நோக்கம் குறித்து பகிர்ந்துள்ளேன். 125 கோடி மக்களின் கனவுகள், கடின உழைப்பு மற்றும் விருப்பங்கள் ஒன்றாக வரும்போது, சாதிக்க முடியாதது எது?

எனது சகோதர சகோதரிகளே,  

125 கோடி இந்தியர்கள் 2014ம் ஆண்டு அரசை அமைத்ததுடன் மட்டும் நிற்காமல், இந்த நாட்டை சிறப்பானதாக ஆக்க அவர்கள் பாடுபட்டனர். இதுதான் இந்தியாவின் வலிமை.

இன்று நாம் ஸ்ரீஅரவிந்தர் சுவாமிகளின் பிறந்த தினத்தை கொண்டாடி வருகிறோம்.  அவர் சில முக்கியமான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.   நாடு என்றால் என்ன?  நமது தாய்நாடு என்றால் என்ன?  இது ஒரு சிறிய நிலப்பகுதியோ, அல்லது ஒரு அடையாளமோ அல்லது கற்பனையோ அல்ல. நாடு என்பது பல்வேறு அமைப்புகளின் மிகச்சிறந்த சக்தியினால் உறுதியான வடிவில் அமைக்கப்பட்ட களஞ்சியம்.  ஸ்ரீஅரவிந்தர் சுவாமிகளின் இந்த சிந்தனைதான் நமது நாட்டை ஒருங்கிணைத்து முன்னெடுத்துச் செல்கிறது என்று பிரதமர் கூறினார்.

2013ம் ஆண்டு வேகத்தில் நாம் செயல்பட்டிருந்தால், இந்தியாவை 100 சதவீதம் திறந்தவெளிக் கழிப்பிடம் அற்றதாகவும், ஒவ்வொரு பகுதியை மின்மயமாக்குவதும் அல்லது ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் அனைத்து மகளிருக்கும் இலவச சமையல் எரிவாயு இணைப்பு அளிப்பதற்கும் நூற்றாண்டுகள் ஆகியிருக்கும். 2013ம் ஆண்டில் இருந்த வேகத்தில் நாம் செயல்பட்டிருந்தால் நாடு முழுவதும் கண்ணாடி இழை கேபிள் பதிக்க ஒட்டுமொத்தமாக ஒரு தலைமுறை தேவைப்பட்டிருக்கும். இந்த இலக்குகள் அனைத்தையும் எட்டுவதற்கு உண்டான வேகத்தில் நாம் செல்வோம்.

சகோதர சகோதரிகளே,

கடந்த நான்காண்டுகளில் நாடு ஒரு மாற்றத்தை அனுபவித்து வருகிறது. புதிய ஆர்வம், உற்சாகம் மற்றும் தைரியத்துடன் நாடு முன்னேறி வருகிறது. இன்றைய தினம் நமது நாட்டில் நெடுஞ்சாலைகள் இரண்டு மடங்கு கூடுதலாகவும் கிராமங்களில் நான்கு மடங்கு கூடுதல் வீடுகளும் கட்டப்பட்டு வருகிறது.    இந்த நாடு சாதனை அளவு உணவு தானியங்களை உற்பத்தி செய்வதுடன் சாதனை அளவு கைப்பேசிகளை தயாரித்து வருகிறது. டிராக்டர்கள் விற்பனை புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

சுதந்திரத்திற்கு பின்னர் நாடு அதிக எண்ணிக்கையிலான விமானங்களை வாங்கிவருகிறது.    நாட்டில் புதிய இந்திய மேலாண்மை நிறுவனங்கள், இந்திய தொழில்நுட்ப மையங்கள்  மற்றும் அகில இந்திய மருத்துவ விஞ்ஞான மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.    சிறு இடங்களிலும் புதிய திறன் மையங்களை உருவாக்குவதன் மூலம் திறன் மேம்பாடு இயக்கத்திற்கு ஊக்கம் அளிக்கப்படுகிறது. இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களிலும் புதிய தொழில்கள் பெருமளவு தொடங்கப்பட்டுள்ளது.

சகோதர சகோதரிகளே,

டிஜிட்டல் இந்தியா திட்டம் கிராமங்களிலும் தனது தடங்களை பதிக்க தொடங்கிவிட்டது. மக்களின் தேவையை முழுமையாக பூர்த்தி செய்யும் நோக்கமுடைய அரசு டிஜிட்டல் இந்தியா திட்டத்தை நனவாக்க வழிவகுத்து வருகிறது. அதேசமயம், மாற்றுத் திறனாளிகளுக்கான ‘பொதுவான குறியீடு’களைக் கொண்ட அகராதியைத் தொகுக்கும் பணியை விரைவுப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.  வேளாண் துறையில் நவீனமயமாக்கல் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நமது விவசாயிகள் நுண்ணீர் பாசனம், சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர் பாசன முறைகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.   நமது ராணுவ வீரர்கள் பேரழிவில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு அனுதாபத்துடனும் இரக்க உணர்வுடனும் உதவி செய்யும் வேளையில், மறுபுறம், எதிரிகளைக் குறி வைத்து துல்லியமான தாக்குதல் நடத்தும் வல்லமையும் பெற்றுள்ளனர்

நீங்கள் கூர்ந்து கவனித்தால், புதிய குறிக்கோளுடன் செயல்பட்டு நாம் வளர்ச்சி அடைந்து வருவதை காணலாம். நான் குஜராத்தை சேர்ந்தவன். குஜராத்தியில் ஒரு வாசகம் உண்டு “நிஷான் சுக் மாஃப் லெக்னி நஹி மாஃப் நிச்சு நிஷான்” அதாவது ஒருவருக்கு பெரிய நோக்கமும் கனவும் இருக்க வேண்டும் என்பதுதான் அதன் பொருள். அதேசமயம்,  நமது நோக்கம் தெளிவாக இல்லாவிட்டால், வளர்ச்சி அடைய முடியாது. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் முடியாது. ஆகையினால் நம் நாட்டின் வளர்ச்சி தொடர நமக்கு பெரிய கனவுகளும், நோக்கங்களும் வேண்டும்.

விவசாயிகளின் விளைபொருட்களுக்கு கட்டுப்படியாகக்கூடிய விலை கிடைக்கச் செய்ய உறுதிபூண்டுள்ளோம். பல்வேறு பயிர்களுக்கு, அவற்றின் இடுபொருள் செலவை விட 1.5 மடங்கு அளவிற்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்பட்டுள்ளது.

ஜி.எஸ்.டி. விவகாரத்தில் ஒருமித்த கருத்து இருந்தது. சிறு வணிகர்கள் உதவியுடன், அவர்களது வெளிப்படைத் தன்மை மற்றும் புதுமைகளை ஏற்றுக் கொள்ளும் மனோபாவம் காரணமாகவே ஜி.எஸ்.டி. வரி விதிப்பு நாட்டில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இது வணிகர்களிடையே புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

 

கம்பெனி கலைப்பு மற்றும் திவால் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பினாமி சொத்து ஒழிப்புச் சட்டம் மிகுந்த துணிச்சலுடனும் நாட்டின் நலன் கருதியும் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. இராணுவ வீரர்களின் நீண்ட கால கோரிக்கையான ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

எனது அருமை சகோதர சகோதரிகளே

நாங்கள் கட்சியின் நலனை மட்டுமே மனதில் கொண்டு செயல் படுபவர்கள் அல்ல. தேச நலனுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பவர்கள் அதனால்தான் பல கடுமையான முடிவுகளை நாங்கள் எடுத்துள்ளோம்.

எனது அருமை சகோதர சகோதரிகளே,

ஒரு காலத்தில் இந்தியப் பொருளாதாரம் மோசமான நிலையில் உள்ளதாக உலக நாடுகள் கூறி வந்தன. ஆனால், 2013ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் சர்வதேச அமைப்புகள் மற்றும் முகமைகள் இந்தியாவை மாறுபட்ட கண்ணோட்டத்துடன் பார்க்கின்றன. தற்போது, அந்த அமைப்புகளும் நாம் மேற்கொண்ட சீர்திருத்தங்கள் நமது கட்டமைப்புக்களை பலப்படுத்தியுள்ளதாக மிகுந்த நம்பிக்கையுடன் கூறுகின்றனர். இந்தியாவில் தொழில் தொடங்குவது கடினமான காரியம் என்று கூறி வந்த காலமும் மாறி விட்டது. தற்போது நாம் மேற்கொண்டு வரும் சீர்திருத்தங்களைப் பற்றியே விவாதிக்கின்றனர். தொழில் தொடங்குவதை எளிமையாக்குவதில் இந்தியா 100-வது இடத்தை எட்டியுள்ளது. நமது சாதனைகளைக் கண்டு உலகம் மிகுந்த பெருமிதத்துடன் பார்க்கிறது. கொள்கை சீரழிந்த நிலையில் இருந்த நாடு தற்போது சீர்திருத்தம், செயல்பாடு, மாற்றம் என்ற நிலைக்கு மாறியுள்ளது.

எனது அருமை சகோதர சகோதரிகளே,

இந்திய பொருளாதாரத்தைக் குறிப்பிடும்போது, “தூங்கிக்கொண்டிருந்த யானை” விழித்துக்கொண்டு பந்தயத்தில் ஓடத் தொடங்கி விட்டதாக கூறுகின்றனர். அடுத்த 30 ஆண்டுகளுக்கு உலகப் பொருளாதார வலிமைக்கு இந்தியா உத்வேகம் அளிக்கும் என்று உலகப் பொருளாதார நிபுணர்களும், அமைப்புகளும் கூறுகின்றன. சர்வதேச அமைப்புகளில் இந்தியாவின் கவுரவமும் உயர்ந்துள்ளது. அது போன்ற அமைப்புகளில்  இந்தியா தனது கருத்துக்களை வலிமையாக எடுத்துரைத்து வருகிறது.

எனது அருமை நாட்டு மக்களே,

முன்பு உலக அமைப்புகளில் உறுப்பினராக ஆவதற்கு இந்தியா பல ஆண்டுகள் காத்திருந்தது. ஆனால் இன்று, இந்தியா பல்வேறு சர்வதேச அமைப்புகளில் உறுப்பினராக உள்ளது. மேலும், சர்வதேச சூரியமின்சக்தி கூட்டணியில் முதன்மை இடத்தில் உள்ளது. முன்பு, பலவீனமான ஐந்து நாடுகளில் ஒன்றாக இந்தியாவை உலகம் கருதி வந்தது. ஆனால் தற்போது, பல்லாயிரம் கோடி டாலர் முதலீட்டுக்கு உகந்த இடம் இந்தியா என உலக நாடுகள் கூறுகின்றன

எனது அருமை நாட்டு மக்களே,

உலகின் எந்த பகுதிகளிலும் ஒரு இந்தியனுக்கு பிரச்சனை என்றால், அவனை காக்க அவனது  நாடு எல்லா முயற்சிகளும் எடுக்கும் என்று அவன் உறுதியோடு இருக்கலாம். இதற்கு பல சமீபத்திய நிகழ்வுகள் சான்றாக உள்ளது.

எனது அருமை நாட்டு மக்களே,

முன்பு, வடகிழக்கு மாநிலங்களில் உள்ள மக்கள் அந்த மாநிலத்தில் தான் இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்ற மனப்பான்மையுடன் இருந்தது. ஆனால் இன்று அது மாறிவருகிறது. வடகிழக்கு மாநிலத்தில் உள்ள எனது சகோதர சகோதரிகள் விளையாட்டுத் துறையில் மிளிர்கிறார்கள்.

எனது அருமை நாட்டு மக்களே,

வடகிழக்கு மாநிலத்தில் உள்ள கடைசி கிராமும் மின் இணைப்புப் பெற்றுள்ளது. நெடுஞ்சாலை, ரயில்வே, விமானப் போக்குவரத்து, நீர் வழி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளிலும்  வடகிழக்கு மாநிலங்கள் முன்னேற்றம் அடைவதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள், அவர்களது பகுதியில், வெளிப் பணி  மையங்களை ஏற்படுத்தி வருகின்றனர். வடகிழக்கு மண்டலம், இயற்கை வேளாண் பகுதியாக மாறி வருகிறது. வடகிழக்கு மாநிலத்தில் விளையாட்டு பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டு வருகிறது.

ஒரு காலத்தில்  தில்லி வெகு தொலைவில் இருப்பதாக வடகிழக்கு மாநிலங்கள் கருதி வந்தன. ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளில், தில்லி வடகிழக்கு மாநிலங்களுக்கு ஆதரவாக உள்ளது என்ற நிலையை ஏற்படுத்தி இருக்கிறோம்.

சகோதர சகோதரிகளே,

இன்று, நம் நாட்டின் மக்கள் தொகையில் 65% பேர் 35 வயது இளைஞர்களாக உள்ளனர். இவர்கள் வேலைவாய்ப்பு தன்மையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர். புதிய தொழில் தொடங்குவது, வெளிப் பணி மையங்கள்  அல்லது மின்னணு வர்த்தகம் அல்லது போக்குவரத்து போன்ற துறைகளில் நமது இளைஞர்கள் புதிய பிரிவுகளுக்குள் நுழைந்துள்ளனர். தற்போது, நாட்டை புதிய உச்சத்திற்கு அழைத்துச் செல்ல நமது இளைஞர்கள் உறுதிபூண்டுள்ளனர்

எனது அருமை நாட்டு மக்களே,

முத்ரா கடன் உதவியை 13 கோடி பேர் பெற்றிருப்பது மாபெரும் சாதனையாகும். இவர்களில் நான்கு கோடி இளைஞர்கள் முதன்முறையாக கடன் உதவி பெற்று சுய வேலைவாய்ப்பு பெற்றிருப்பதுடன் சுயமாக முன்னேற்றம் அடைந்துள்ளனர். சூழ்நிலை மாறிவருவதற்கு இதுவே சிறந்த உதாரணம் ஆகும். நமது இளைஞர்கள், தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, 3 லட்சம் கிராமங்களில் பொது சேவை மையங்களை நிர்வகிப்பதுடன், அனைத்து கிராமங்கள் மற்றும் மக்களுக்கு உலகின் பிற பகுதிகளுடன் சில விநாடிகளிலேயே இணைப்பை ஏற்படுத்துகின்றனர்

சகோதர சகோதரிகளே,

புதுமைகளைக் கண்டுபிடிக்கும் உத்வேகத்துடன் உள்ள நமது விஞ்ஞானிகளின் முயற்சியால், மீனவர்கள் மற்றும் இதர தரப்பினருக்கு பயனளிக்கக் கூடிய “நேவிக்” என்ற செயற்கைக் கோளை செலுத்தவிருக்கிறோம்.  நமது விஞ்ஞானிகள் ஒரே சமயத்தில் 100 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தியுள்ளனர். இது நம் அனைவருக்கும் பெரும் கவுரவத்தை அளித்துள்ளது.   2022ஆம் ஆண்டுக்குள் விண்வெளிக்கு மனிதர்களுடன் கூடிய விண்கலத்தைச் செலுத்த இந்தியா உறுதிபூண்டுள்ளது. இந்த சாதனையைப் புரியும் 4ஆவது நாடாக இந்தியா திகழும்.

எனது அருமை சகோதர சகோதரிகளே,

நமது விஞ்ஞானிகளும் தொழில்நுட்ப உதவியாளர்களும் பெரும் சாதனையை படைத்துள்ளனர். நமது கிடங்குகள் அனைத்தும் உணவு தானியங்களால் நிரப்பப்பட்டுள்ளன. இதற்காக நான் அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். ஆனால், காலம் மாறிவிட்டது. தற்போது நமது விவசாயிகள் உலகளாவிய போட்டிகள் மற்றும் சவால்களை சந்திக்க வேண்டும். நமது வேளாண் முறைகளை தொழிநுட்ப உதவியுடன் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இதற்காக நமது அரசு வேளாண் துறையில் நவீன தொழில்நுட்ப முறைகளை புகுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.

தற்போது நாம் வேளாண் துறையை  நவீனமயமாக்குவதில்  கவனம் செலுத்தி வருகிறோம். 75ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும்போது, விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க தீர்மானித்துள்ளோம். அதனால், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க விவசாயிகளுடன் நாங்களும் ஒன்றிணைந்து பணிபுரிந்து வருகிறோம். நாங்கள் என்றும் எங்களது வாக்கை காப்போம்.

நவீனமயமாக்கல் மூலம் வேளாண் துறையில் பங்களிப்பை அதிகரிக்க விரும்புகிறோம். “வேளாண் விதை வழங்குவது முதல் சந்தைப்படுத்துதல் வரை” மதிப்புக்கூட்டு நடைமுறையை பின்பற்றவும் விரும்புகிறோம். முதன்முறையாக, வேளாண் ஏற்றுமதி கொள்கைப் பாதையில் முன்னேற்றம் கண்டிருப்பதன் மூலம், உலக சந்தையில் நமது விவசாயிகள் வலுவான சக்தியாக திகழ்வதற்கான வழிவகைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இயற்கை வேளாண்மை, நீலப் புரட்சி, இனிப்பு புரட்சி எனப்படும் தேனீ வளர்ப்பு, சூரிய சக்தி வேளாண்மை போன்ற புதிய துறைகளில், மேலும் முன்னோக்கிச் செல்ல முடிவு செய்திருக்கிறோம்.

நமக்கு மிகவும் பெருமை அளிப்பது என்னவென்றால், மீன் வளத்தைப் பொறுத்தவரை, இந்தியா உலகின் இரண்டாவது பெரிய நாடாக உருவெடுத்துள்ளது. தேன் ஏற்றுமதி இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. எத்தனால் உற்பத்தி மூன்று மடங்கு அதிகரித்திருப்பது கரும்பு விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கிராமப்புற பொருளாதாரத்தைப் பொறுத்தவரை மற்ற துறைகளும் முக்கியமானவையாகக் கருதப்படுகிறது. கிராமப்புறங்களுக்கான ஆதாரங்களை அதிகரிப்பதுடன், மகளிர் சுயஉதவிக்குழுக்களை உருவாக்கி, பல நூறு கோடி ரூபாய் கிடைக்கச் செய்துள்ளோம். கிராமங்களின் செயல்திறனை மேம்படுத்துவதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம்.

கதர் நமது தேசத் தந்தையுடன் இணைந்திருப்பது. கதர் துணி விற்பனையும் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது என்பதை நான் பெருமையுடன் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இது ஏழைகளுக்கு வேலைவாய்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

எனது சகோதர சகோதரிகளே,

தற்போது நமது விவசாயிகள் சூரிய சக்தி விவசாயத்தில் கவனம் செலுத்துகின்றனர். இதன் காரணமாக விவசாயிகள் வேளாண்துறைக்கு உரிய பங்களிப்பை வழங்குவதுடன் சூரிய மின் சக்தியை விற்பனை செய்வதன் மூலம் வருவாய்  ஈட்டவும் வகை செய்யப்பட்டுள்ளது

எனது சகோதர சகோதரிகளே,

பொருளாதார முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியுடன், மனித வாழ்க்கை கண்ணியமானதாக அமைய வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்த விரும்புகிறோம். எனவே, இதுபோன்ற திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்துவதன் மூலம், சாதாரண குடிமகனும் தனது வாழ்க்கையை பெருமிதம் கொண்டதாகவும், மரியாதை மற்றும் கண்ணியமான முறையிலும் மேற்கொள்ள முடியும்.

உஜ்வாலா திட்டத்தின் மூலம் ஏழைகளுக்கு இலவச எரிவாயு இணைப்பு அளித்துள்ளோம். சௌபாக்யா திட்டம் மூலம் ஏழைகளுக்கு இலவச மின்சார இணைப்பு அளித்துள்ளோம். இப்போது, ‘ஷ்ராமவே ஜெயதே’ (பல்வேறு துறைகளின் வேலை சூழலை மேம்படுத்துதல்) எனும் நோக்கத்தை நோக்கி நாம் நடைபோடுகிறோம். 

சகோதர சகோதரிகளே,

     உலக சுகாதார அமைப்பின் அறிக்கைப்படி, தூய்மை இயக்கம் மூலம், மூன்று லட்சம் குழந்தைகள் காப்பாற்றப்பட்டுள்ளனர். காந்தியடிகள் மேற்கொண்ட சத்தியாகிரகம் அளித்துள்ள உத்வேகத்தின் அடிப்படையில், தூய்மைப் பணியாளர்களை ஒன்று திரட்டுவதில் நாம் வெற்றியடைந்துள்ளோம். தூய்மை இந்தியா இயக்கத்தின் மூலம், காந்தியடிகளின் 150ஆவது பிறந்தநாளின்போது, கோடிக்கணக்கான தூய்மைப் பணியாளர்கள் அவருக்கு மரியாதை செலுத்த திட்டமிட்டுள்ளனர்.

சகோதர சகோதரிகளே,

ஏழைகளுக்கு இலவச சுகாதார சேவைகளை வழங்குவதற்காக, மத்திய அரசு பிரதமரின் ஜன் ஆரோக்கிய யோஜனா என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளது. தற்போது இந்தத் திட்டத்தின் மூலம், எந்த ஒரு நபரும்  நல்ல மருத்துவமனைகளுக்குச் சென்று சிகிச்சைப் பெற வழிவகை ஏற்பட்டுள்ளது.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், பத்துக்கோடி குடும்பங்கள் சுகாதார காப்பீட்டு பலன்களை பெற முடியும். அதாவது, 50 கோடி மக்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடையவுள்ளனர். ஒவ்வொரு குடும்பத்திற்கும், ஆண்டுக்கு ஐந்து லட்சம் ரூபாய் வரை சுகாதார காப்பீடு கிடைக்கும்.

இதற்காக ஒரு தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. அடுத்த ஐந்து, ஆறு வாரங்களில் இந்த தொழில்நுட்பம் நாடு முழுவதும் சோதித்து பார்க்கப்படும். இந்த திட்டத்தில் எந்தவித தவறும் ஏற்படாமல் இருப்பதை இது உறுதி செய்யும்.

பண்டித தீன் தயாள் உபாத்யாயா அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு 2018 செப்டம்பர் 25 அன்று பிரதமரின் ஜன் ஆரோக்ய அபியான் திட்டம் தொடங்கப்படுவதன் மூலம்,  சாமானிய குடிமகனும் கொடிய நோய்கள் காரணமாக அவதிப்படுவது தவிர்க்கப்படும். நடுத்தர குடும்பத்தினர் மற்றும் இளைஞர்களுக்கு சுகாதாரத்துறையில் புதிய வாய்ப்புக்கள் உருவாகியுள்ளது. இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களிலும் புதிய மருத்துவமனைகள் கட்டப்படும். அதில், மருத்துவ பணியாளர்கள் அதிக அளவில் நியமிக்கப்படுவார்கள். இதன் மூலம், வரும் ஆண்டுகளில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாகும்.

நடுத்தர குடும்பத்தினர் மற்றும் இளைஞர்களுக்கு சுகாதாரத்துறையில் புதிய வாய்ப்புக்கள் உருவாகியுள்ளது. 2ஆம் நிலை மற்றும் 3ஆம் நிலை நகரங்களிலும் புதிய மருத்துவமனைகள் கட்டப்படும். மருத்துவ பணியாளர்கள் அதிக அளவில் நியமிக்கப்படுவார்கள். வரும் ஆண்டுகளில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாகும்.

சகோதர, சகோதரிகளே, எந்த ஒரு ஏழையும், வறுமையான வாழ்க்கையை விரும்ப மாட்டார். எந்த ஒரு ஏழையும், ஏழையாகவே உயிரிழக்கவும் விரும்ப மாட்டார்.தங்களது குழந்தைகளுக்கும் ஏழ்மை தொடருவதை அவர்கள் விரும்ப மாட்டார்கள்.வறுமையிலிருந்து விடுபட வாழ்நாள் முழுவதும் போராடுவார்கள். ஏழைகளுக்கு அதிகாரம் அளிப்பதன் மூலமே இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்.

கடந்த நான்காண்டுகளில் ஏழைகளுக்கு அதிகாரம் அளிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறோம். கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும், ஐந்து கோடி ஏழை மக்கள் வறுமைக் கோட்டை தாண்டி விட்டதாக சர்வதேச அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது. ஏழைகளுக்கு அதிகாரம் அளிப்பதற்காக பல்வேறு திட்டங்கள் உள்ளன.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், பத்துக்கோடி குடும்பங்கள் சுகாதார காப்பீட்டு பலன்களை பெற முடியும். அதாவது, 50 கோடி மக்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடையவுள்ளனர். ஒவ்வொரு குடும்பத்திற்கும், ஆண்டுக்கு ஐந்து லட்சம் ரூபாய் வரை சுகாதார காப்பீடு கிடைக்கும்.

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகொ நாட்டின் மக்கள் தொகைக்கு இணையான நபர்கள் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்மூலம் பயனடைய உள்ளனர். இது ஒட்டு மொத்த ஐரோப்பிய மக்கள் தொகைக்கும் இணையான எண்ணிக்கை உடையதாக இருக்கும்.

அரசிடமிருந்து பணம் செலவழிக்கப்படும் போதிலும் சில திட்டங்கள் ஏட்டளவிலேயே இருக்கும். ஆனால் அரசின் பணம் சுரண்டப்படும். இதைப் பார்த்தபிறகும், அரசால் கண்மூடிக்கொண்டிருக்க முடியாது. குறைந்தபட்சம் என்னால் என் கண்களை மூடிக்கொண்டிருக்க முடியாது.

சகோதர, சகோதரிகளே, நமது நடைமுறையில் உள்ள குறைபாடுகளை ஒழிப்பதற்கு முன்பாக சாமானிய மக்களின் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டியது அவசியம். மாநில அரசாக இருந்தாலும் அல்லது மத்திய அரசாக இருந்தாலும் அல்லது உள்ளாட்சி அமைப்பாக இருந்தாலும், அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம். ஊழல் முறைகேடுகளை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை தொடங்குவதற்கு முன்பு, ஆறு கோடி போலி பயனாளிகள்,பலனடைந்து வந்தனர். இவர்களில் பலர், போலியான ரேஷன் கார்டுகள் மூலம்,போலியான பெயர்களில் சமையல் எரிவாயு இணைப்பு பெற்று சலுகைகளை அனுபவித்து வந்தனர். சிலர் போலி பெயர்களில் கல்வி நிதி உதவி மற்றும் ஓய்வூதியங்களைப் பெற்று வந்தனர். இதுபோன்று போலியான பெயர்களில் சலுகையைப் பெற்றவர்கள் இந்த நாட்டில் புதிதாகப் பிறக்கவும் இல்லை,ஏற்கெனவே பிறந்தவரும் அல்ல.

ஊழலுக்கான அனைத்து வாய்ப்புகளையும் அடைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. லஞ்ச ஊழலையும், கருப்புப் பணத்தையும் முற்றிலுமாக அகற்றும் முயற்சியில் நாங்கள் இறங்கியிருக்கிறோம் இந்தமுயற்சிகள் காரணமாக அரசின் கருவூலத்திற்கு 90,000 கோடி ரூபாய் திரட்ட முடிந்தது.

நாணயமானவர்கள் முறைப்படி வரியை செலுத்தி விடுகிறார்கள். அவர்களின் பங்களிப்பால் கிடைக்கும் வருவாய் மூலம், திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. இந்த பெருமை வரிசெலுத்துவோரை சாருமே அன்றி அரசுக்கல்ல.

சகோதர, சகோதரிகளே, ஏழை மக்களுக்கு கவுரவத்தையும், பெருமையையும் ஏற்படுத்த அரசு பாடுபட்டு வரும் வேளையில், இடைத்தரகர்களுக்கு என்ன வேலை?வெளிச் சந்தையில் ஒரு கிலோ 24-25 ரூபாய்க்கு விற்கப்படும் கோதுமையை,ஏழைகளுக்கு அரசு 2 ரூபாய்க்கு ரேஷன் கார்டுகள் மூலம் விற்பனை செய்கிறது. ரூ. 30-32 விலையுள்ள அரிசி, 3 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. எனவே, போலி ரேஷன் கார்டுகள் மூலம், இந்த சலுகையை அனுபவிப்பவருக்கு ஒரு கிலோ கோதுமைக்கு ரூ.25 வரையிலும், ஒரு கிலோ அரிசிக்கு ரூ.35 வரையிலும் லாபம் கிடைத்தது. அதே வேளையில் ஒரு ஏழை தமது ரேஷன் கார்டுடன் நியாய விலைக் கடைகளுக்குச் சென்று பொருட்களைக் கேட்டால், அங்கிருக்கும் பணியாளர் பொருட்கள் இருப்பு தீர்ந்து விட்டதாகக் கூறுவார். அதன்பின் அந்த பொருட்கள் கடத்தப்பட்டு கடைகளில் விற்பனை செய்யப்படும்போது, நியாய விலைக்கடையில் பொருட்களை வாங்க முடியாத ஏழை, வெளிச் சந்தையில் அதிக விலைக் கொடுத்து வாங்க வேண்டியிருந்தது. எனவேதான், இதுபோன்ற கள்ளச்சந்தை முறை தற்போது ஒழிக்கப்பட்டுள்ளது.

ஏழைகளுக்கு அதிகாரம் அளிப்பதற்காக பல்வேறு திட்டங்கள் உள்ளன. ஆனால்,இடைத்தரகர்கள் அந்த பலன்களை பறித்துச் செல்வதால், ஏழைகளால் அந்த பலன்களை அடையாத முடியாத நிலை உள்ளது.

சகோதர, சகோதரிகளே, நம் நாட்டில் உள்ள ஏழை மக்கள் ரூ.2 மற்றும் ரூ.3விலையில் உணவுப் பொருட்களை பெற்று வருகின்றனர். இதற்காக அரசு பெருந்தன்மையுடன் செலவிட்டு வரும் வேளையில் அதற்குரிய அங்கீகாரம் அரசுக்கு கிடைப்பதில்லை. நேர்மையாக வரி செலுத்துவோருக்கு நான் வணக்கம் தெரிவிக்க விரும்புகிறேன். நீங்கள் செலுத்தும் வரி பணத்தின் மூலம்தான் அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. எனவே, நீங்கள் நேர்மையாக வரி செலுத்துவதன் மூலம், நீங்கள் உங்கள் குடும்பத்தாருடன் சாப்பிடும் வேளையில்,மூன்று ஏழை குடும்பங்களும் பசியாற சாப்பிட முடியும்.

நண்பர்களே, நேர்மையாக வரி செலுத்தும் ஒருவர், அவர் குளிர்சாதன அறையில் வசிப்பவராக இருந்தால் கூட, அவர் செலுத்தும் வரி மூலம் 3 ஏழைக் குடும்பங்கள் பயனடைகிறார்கள் என்பது அவரது மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கும். சகோதர,சகோதரிகளே, நாடு தற்போது நேர்மை திருவிழாவைக் கொண்டாடும் நிலையை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது. 2013ஆம் ஆண்டு வரை கடந்த 70ஆண்டுகளில் நான்கு கோடி பேர் மட்டுமே நேரடி வரி செலுத்தி வந்தனர். ஆனால் தற்போது இந்த எண்ணிக்கை 6.75 கோடியாக அதிகரித்துள்ளது. இந்த வித்தியாசத்தை நீங்கள் எண்ணிப்பாருங்கள். கடந்த 70 ஆண்டுகளில் 70 லட்சம் தொழில் நிறுவனங்கள் மட்டுமே மறைமுக வரி செலுத்தி வந்தன. ஆனால், ஜி.எஸ்.டி.அமல்படுத்தப்பட்ட பிறகு கடந்த ஓராண்டில் மட்டும் இந்த எண்ணிக்கை ஒரு கோடியே 16 லட்சமாக அதிகரித்துள்ளது. வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மையை ஏற்றுக் கொள்ளும் அனைவரையும் நான் வணங்குகிறேன். கருப்பு பணத்தையும், ஊழலையும் ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது. தில்லி அதிகார வட்டத்தில் தற்போது, அதிகார தரகர்கள் யாரையும் நீங்கள் பார்க்க முடியாது.

எனது அருமை நாட்டு மக்களே, காலம் மாறி விட்டது. மூடிய அறைக்குள் இருந்து கொண்டு, அரசின் கொள்கைகளை மாற்றப் போவதாக கூறி வந்தவர்கள் தற்போது ஓரங்கட்டப்பட்டுள்ளனர். வேண்டியவர்களுக்கு மட்டும் சலுகை அளிக்கும் நிலை ஒழிக்கப்பட்டு விட்டது. ஊழல் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 3 லட்சத்திற்கும் மேற்பட்ட போலி நிறுவனங்கள் மூடப்பட்டு,அவற்றின் நிர்வாகிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.ஆன்லைன் பரிவர்த்தனைகளில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யவும் வருமானவரித்துறையின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதில் பெருமளவு முறைகேடு நடைபெற்று வந்ததால், தற்போது அந்த நடைமுறைகள் வெளிப்படையாகவும், ஆன்லைன் மூலமாகவும் மேற்கொள்ளப்படுகிறது.  நாட்டின் இயற்கை வளங்கள் நியாயமான முறையில் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் அரசு பணியாற்றி வருகிறது.உச்சநீதிமன்றத்தில் பணியாற்றும் 3 பெண் நீதிபதிகள் நாட்டிற்கு நீதி வழங்குவது,இந்திய பெண்களுக்கு கவுரவத்தை ஏற்படுத்தி உள்ளது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு மத்திய அமைச்சரவையிலும் தற்போதுதான் பெண் அமைச்சர்களுக்கு அதிக அளவில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

எனது அருமை நாட்டு மக்களே, ராணுவத்தில் குறுகிய கால பணிக்கு தேர்வு செய்யப்பட்ட பெண் அதிகாரிகளுக்கு, ஆண்களுக்கு இணையாக நிரந்தர பணி வழங்க திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம், நாட்டிற்காக தங்களது இன்னுயிரை அர்ப்பணித்துள்ள பெண் வீராங்கனைகளுக்கு பரிசளிக்க நான் விரும்புகிறேன். வலிமையான இந்தியாவை உருவாக்குவதில் நமது இளம் பெண்களும் சம பங்களிப்பை வழங்கி வருவது பெருமிதத்திற்கு உரியது.

                             வயல் வெளிகள்  முதல் விளையாட்டு அரங்கு வரை நமது மகளிர் இந்திய மூவண்ணக் கொடியை உயர்த்திப் பிடிக்கிறார்கள். கிராம தலைவி முதல் நாடாளுமன்றம் வரை நாட்டின் வளர்ச்சிக்கு அவர்கள்  பங்களிக்கிறார்கள். பள்ளி முதல் ஆயுதப்படைகள் வரை எல்லா இடத்திலும் அவர்கள் பீடு நடை போடுகிறார்கள் இப்படி எல்லாத் துறைகளிலும் பெருவாரியாக அவர்கள் முன்னேறிச் செல்லும் போது சிலர் கொடூரமான சம்பவங்களையும் நாம் சந்திக்கிறோம். அரக்கத்தனமான சில சக்திகள் மகளிர் சக்திக்கு சவாலை உருவாக்குகின்றன.

பாலினவன் கொடுமை வேதனைக்குரியது.அந்த கொடுமைக்கு உள்ளாகிறவர் அனுபவிக்கும் துன்பம் அதைவிட கொடுமையானது. இதனை நாட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் இந்த வேதனையின் தன்மையை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.

சகோதர சகோதரிகளே, இந்த அரக்கத்தனமான மனப்போக்கிலிருந்து சமுதாயத்தை நாம் விடுவித்தாக வேண்’டும். அண்மையில் மத்தியபிரதேசம் மாநிலம் காந்தினி நகரில், பாலின வன்கொடுமையில் ஈடுபட்டவர்கள் ஐந்து நாள் நீதிமன்ற விசாரணைக்குப்பின் மரணதண்டனை விதிக்கப்பட்டார்கள். இதேபோல் ராஜஸ்தானில்  மேலும் சில இது போன்ற பாலின வன்கொடுமைக்காக  சில நாள் விசாரணைக்குப் பின் மரணதண்டனை விதிக்கப்பட்டார்கள்.  இது போன்ற செய்திகள் மேலும் வரும் போது இத்தகைய அரக்கத்தனமான மனம் படைத்தவர்கள் அச்சம் கொள்வார்கள். இத்தகைய செய்திகளை நாம் வெளிப்படுத்த வேண்டும்.  பாலின வன்செயலில் ஈடுபடுவோர் தூக்குமேடைக்கு அனுப்ப்ப்படுகிறார்கள் என்பது மக்களுக்கு தெரியவேண்டும். இத்தகைய  மனப்போக்கை முறியடிப்பது அவசியமாகிறது, அத்தகைய சிந்தனையையே களையெடுக்க வேண்டும், இது போன்ற  சபலங்கள் தடுத்து நிறுத்தப்படவேண்டும். சகோதர்ர்  சகோதரிகளே, இந்த அரக்கத்தனமான மனோநிலைதான் மன்னிக்க முடியாத குற்றங்களுக்கு விட்டுச்செல்கிறது.  சட்டத்தின் ஆட்சிதான் நமக்கு பிரதானம். அதில் எந்த சமரசத்திற்கு இடமில்லை. சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்ள யாரும் அனுமதிக்கப்படக் கூடாது. குடும்பத்தில் பள்ளிகளில், கல்லரிகளில் புதிய தலைமுறையான நமது குழந்தைகள்,  மாசற்ற அந்த சின்னஞ்சிறிசுகள் நமது பண்புகளை கற்றுக்கொள்ளும் சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும். அத்தகைய சூழ்நிலை அவர்களுக்கு புதிய விழுமியங்களை கற்றுத்தரும். பெண்களை மதிப்பதற்கு அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். இதுவே சரியான வாழ்க்கை நெறி என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். நமது குடும்பங்களின் பண்பாடுகள் அவர்கள் மனதில் பதிய வைக்கப்பட வேண்டும்.

 

முத்தலாக் முறை முஸ்லிம் பெண்களின் வாழ்க்கையில் ஆபத்தை உருவாக்குகிறது. தலாக் பெறாதவர்களும் அதே சூழ்நிலையைத்தான் சந்திக்கிறார்கள். முஸ்லிம் பெண்களின் இந்த துயரத்தை போக்குவதற்காகத்தான் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் ஒரு சட்டத்தை கொண்டுவர முனைந்தோம். இப்போதுகூட இந்த மசோதா நிறைவேறக் கூடாது என்று கருதுவோர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

 

சகோதர சகோதரிகளே, எனது முஸ்லிம் சகோதரிகளுக்கு நான் உறுதி அளிக்க விரும்புகிறேன். நமது நாட்டு மகளிர் வாழ்வை முத்தலாக்  சீரழித்துவிட்டது. தலாக் முறையை சந்திக்காதவர்களின் வாழ்க்கை துயரமாக மாறிவிடும். இந்த  தீமையான  பழக்கத்திலிருந்து முஸ்லிம் பெண்களை விடுவிப்பதற்காக நாடாளுமன்றத்தில் இந்த்க் கூட்டத்தொடரிலேயே சட்டம் கொண்டுவர நாங்கள் விரும்பினோம். ஆனாலும், இந்தச்சட்டம் நிறைவேறவிடாமல் சிலர் தடுத்துக் கொண்டிருக்கிறார்கள். எனதருமை முஸ்லிம் தாய்மார்கள். சகோதரிகள், மகள்கள் அனைவருக்கும் ஒரு உறுதியை தர விரும்புகிறேன். அவர்களுக்கு நீதி கிடைக்கும்வரை நான் ஓயப்போவதில்லை. அவர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றியே தீருவேன்.

 

எனதருமை நாட்டு மக்களே நமது ராணுவமும்,துணை ராணுவப் படைகளும், காவல் துறையும், புலனாய்வுப்பிரிவுகளும்தான் நமது உள்நாட்டுப் பாதுகாப்புக்கு அடிப்படை பலமாகும். நமக்கு பாதுகாப்பு உணர்வை தருவது அவர்கள்தான். அமைதியான சூழ்நிலையை அவர்கள்தான் உறுதி செய்கிறார்கள். அவர்களின் தியாகமும், அர்ப்பணிப்பும் கடின உழைப்பும், புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

 

சகோதர சகோதரிகளே, வடகிழக்குப் பகுதியிலிருந்து  அவ்வப்போது வன்முறைச் செய்திகளை நாம் அறிகிறோம். உள்நாட்டு கிளர்ச்சிகள் பற்றிய தகவலும் வந்துகொண்டிருக்கிறது.  வெடிகுண்டு வீச்சு, துப்பாக்கிச்சூடு சம்பவங்களும் நடக்கின்றன.  ஆனால் இன்று வடகிழக்கு மாநிலங்களான  மேகாலயா, திரிபுராவில் கடந்த முப்பது நாற்பது ஆண்டுகளாக அமலில் இருந்த ஆயுதப்படைகள் பிரத்யேக அதிகார சட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

பாதுகாப்புப்படைகளும், மாநில அரசுகளும் மேற்கொண்ட முயற்சிகள், மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றும் வளர்ச்சித் திட்டங்கள், மக்களின் ஈடுபாடு ஆகியவை காரணமாக திரிபுராவும், மேகாலயாவும் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

    அருணாசலப்பிரதேசத்தின் பல மாவட்டங்களில் இந்த ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. சில மாவட்டங்களில் மட்டுமே அது அமலில் இருக்கிறது.

    இடதுசாரி தீவிரவாதமும்  மாவோயிசமும் நாட்டின் ரத்தக்களரியை  ஏற்படுத்துகின்றன. வன்முறைச் சம்பவங்களும் மக்கள் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறி காடுகளில் ஒளிந்துகொள்வதும் அன்றாட நிகழ்ச்சிகளாக உள்ளன. என்றாலும் 126 மாவட்டங்களில் பரவியிருந்த   இடதுசாரி தீவிரவாதம்,  நமது பாதுகாப்புப் படை வீர்ர்கள் எடுத்துள்ள தொடர் முயற்சிகள் காரணமாகவும், அரசு தொடங்கியுள்ள வளர்ச்சித் திட்டங்கள் காரணமாகவும், அந்த மக்களை தேசிய நீரோட்டத்துடன் இணைக்கும்  முயற்சி காரணமாகவும்,  90 மாவட்டங்கள் அளவுக்கு சுருங்கிவிட்டது. இந்த மாவட்டங்களிலும் இடதுசாரி தீவிரவாதத்திற்கு முடிவு கட்டி தீர்வுகாண்பதற்கான நடவடிக்கைகள் வேகமாக முன்னேறி வருகின்றன.

    ஜம்மு- காஷ்மீரை பொறுத்தவரை அடல்பிஹாரிவாஜ்பாய் காட்டிய வழிதான் சாலச்சிறந்தது.  அதே பாதையில் நாமும் பயணிக்க விரும்புகிறோம்.  துப்பாக்கிக்குண்டுகள் மூலமாக அல்ல, காஷ்மீரின் தேசபக்தமக்களுடன் நேச உணர்வு கொண்டு இதில் நடைபோட விரும்புகிறோம். வரவிருக்கும் மாதங்களில் ஜம்மு காஷ்மீரின் ஊரகப்பகுதி மக்கள் தங்கள் உரிமையை அனுபவிக்க உள்ளார்கள். தங்களைத் தாங்களே பேணிக்கொள்ளும் நிலையை எய்துவார்கள். வளர்ச்சிக்குத் தேவைப்படும்போது மானநிதியை, இந்திய அரசு அங்குள்ள ஊராட்சி மன்றங்களுக்கு வழங்குகிறது.  அங்கு ஊராட்சி மற்றும் உள்ளாட்சி தேர்தல்களை நடத்தநாம் வழிவகுக்க வேண்டும். அதில் நாம் முன்னேறி வருகிறோம்.

 

சகோதர சகோதரிகளே, நீர்ப்பாசன திட்டங்கள் வேகமாக முன்னேறி வருகின்றன. ஐ ஐ டி, ஐ ஐ எம், ஏ ஐ எம் எஸ் ஆகிய உயர்கல்வி நிறுவனங்கள் வேகமாக உருவாகின்றன. தல் ஏரியை  சுத்தப்படுத்தும் பணி நடக்கிறது. கடந்த ஓராண்டுக் காலத்தில் ஜம்மு காஷ்மீர்

கிராமத்தலைவர்கள்  என்னை கூட்டம் கூட்டமாக சந்தித்து ஊராட்சித் தேர்தலை நடத்தும்படி கோருவது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.  ஏதோ  காரணத்தால் தேர்தல்கள் நடக்கவில்லை.  ஜம்மு காஷ்மீர் கிராம மக்களின் விருப்பம் அடுத்த சில மாதங்களில் நிறைவேறப் போகிறது. தங்கள் கிராமத்தை தாங்களே நிர்வகித்துக் கொள்ளும் ஆட்சிமுறை வரப்போகிறது. தற்போது இந்திய அரசு அளிக்கும் பெரும் தொகை நேரடியாக கிராமங்களுக்கே சென்றடைவதால் , கிராமத்தலைவர்கள் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த முடிகிறது.  அதன் காரணமாகத்தான்  ஊராட்சிகளுக்கும், நகராட்சிகளுக்கும் தேர்தல் நடத்துவதில் நாங்கள்  முனைப்பாக இருக்கிறோம்.

சகோதர சகோதரிகளே, நமது நாட்டை மேலும் மேலும் உச்சத்திற்கு நாம் கொண்டு செல்ல வேண்டியிருக்கிறது. அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம் என்பதே நமது தாரக மந்திரம்.  உங்களுடையது, என்னுடையது என்ற பாரபட்சமோ,

வேண்டியவர்களுக்கு சலுகை  என்பதோ இல்லை. அதனால்தான் நமது இலட்சியங்கள் நிறைவேற்ற எந்தத் தியாகத்திற்கும் தயார் என்று இந்த மூவண்ணக் கொடியின் கீழ் மீண்டும் நாம் உறுதி எடுத்துக் கொள்கிறோம்.

ஒவ்வொரு இந்தியனின் கனவும் ஒரு சொந்த வீடு வேண்டும் என்பதுதான். அதற்காகத்தான் அனைவருக்கும் வீடு திட்டத்தை அறிவித்திருக்கிறோம். வீடு வேண்டும் என்று விரும்புவோர் அந்த வீட்டில் மின் இணைப்பு வேண்டும் என்றும் விழைகிறார்கள். அதனால் கிராமம் தோறும் மின்மயமாக்கல் திட்டத்தை தொடங்கியுள்ளோம். சமையல்அறையில், புகைமூட்டத்தை யாரும் விரும்புவதில்லை. அதற்காகத்தான் அனைவருக்கும் சமையல் எரிவாயு திட்டத்தை தொடங்கியுள்ளோம்.  பாதுகாக்கப் பட்ட குடிநீர் வேண்டும் என்பதே ஒவ்வொரு இந்தியனின் விருப்பம். அனைவரும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் பெறச் செய்வதே நமது விருப்பம். கழிப்பறை வேண்டும் என்பது ஒவ்வொருவரின் விருப்பம். அதனை நிறைவேற்றி வைக்கும் நடவடிக்கையில்ஈடுபட்டுள்ளோம்.  ஒவ்வொருவருக்கும் தேவைப்படும் திறன் வளர்ப்பு நடவடிக்கையை நாம் மேற்கொண்டுள்ளோம். இதன் மூலம் அனைவருக்கும் உரிய திறன் கிடைக்கும். தரமான சுகாதாரச் சேவை வேண்டும் என்பதும் ஒவ்வொரு இந்தியரின் ஏக்கம். அதைப் பூர்த்தி செய்வதற்காக அனைவருக்கும் ஆரோக்கியம் திட்டத்தை தொடங்கியுள்ளோம். இந்தியர்கள் விரும்பும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக காப்பீடு திட்டத்தை கொண்டு வந்துள்ளோம். இணையதள சேவை என்பது இன்று ஒவ்வொருவரின் ஏக்கமாகஉள்ளது. அதற்காகத்தான் அனைவரும் இணையதள இணைப்பை பெறும் திட்டத்தை தொடங்கியுள்ளோம். இணைப்பு என்ற தாரக மந்திரத்தை பின்பற்றி நமது நாட்டை வளர்ச்சிப் பாதையில் செலுத்த விரும்புகிறோம்.

எனதருமை சகோதர சகோதரிகளே, என்னைப் பற்றியும், நான் பேசுவதைப் பற்றியும் பலரும் பலவிதமாக பேசுகிறார்கள். அவர்கள் என்ன சொன்னாலும் நான் பகிரங்கமாக  சிலவற்றை இன்று ஒப்புக்கொள்கிறேன். பல நாடுகள் நம்மைவிட முந்திக்கொண்டு செல்வதைப் பார்த்து நான்  பொறுமை இழக்கிறேன், பதற்றம் அடைகிறேன்.

 

எனதருமை நாட்டு மக்களே, நமது நாட்டின் குழந்தைகள் உரிய  போஷாக்கு இன்மையால் அவர்களின் வளர்ச்சி தடைபடுவது கண்டு நான் பதறுகிறேன். அது ஒரு மிகப்பெரிய தடையாக உள்ளது. அந்த சிரமத்திலிருந்து நாட்டை மீட்க வேண்டும் என்ற தாகம் எனக்கு இருக்கிறது.

 

எனதருமை நாட்டு மக்களே, ஏழைக்குமகன் தேவையான ஆரோக்கியத்தை பெறும் வரை எனது மனது தவிக்கிறது. சமானிய மக்களும் பிணிகளை வென்று ஆரோக்கியமாக வாழ்வதே எனக்கு நிம்மதி அளிக்கும்.

சகோதர சகோதரிகளே, நம்நாட்டு குடிமக்கள் தரமான வாழ்க்கை பெறவேண்டும் என்று என் மனம் தவிக்கிறது. தரமான வாழ்வு பெறுவதன் மூலம் தான் அவர்களுக்கு சுமுக வாழ்வும் முன்னேற்றமும் ஏற்பட வாய்ப்புக்கிட்டும்.

எனதருமை நாட்டு மக்களே, நான் பதற்றத்துடன் இருக்கிறேன், நமது நாடு தகவல் தொழில்நுட்ப அறிவாற்றலைப் பயன்படுத்தி  நான்காவது தொழில் புரட்சியில் பீடுநடைபோட வேண்டும் என்று என் மனம் தவிக்கிறது.

எனதருமை நாட்டு மக்களே, நமது நாட்டின் ஆதார வளங்களையும் அறிவாற்றலையும், திறனையும் பயன்படுத்தி உலக அரங்கில் பெருமைமிக்க நாடாக ஒளிரவேண்டும் என்று என் மனம் ஏங்குகிறது.

எனதருமை நாட்டு மக்களே, நாம் முன்னேறிச் செல்ல விழைகிறோம், தேக்கநிலையை ஏற்க முடியாது. அப்படி ஏற்றுக்கொள்வது நமது இயற்கை குணமல்ல. ஒருபோதும் இந்த  நாடு தேக்கநிலையை ஏற்றுக் கொள்ளாது. வளைந்து கொடுப்பதும், சோர்வடைவதும் நமது குணமல்ல.

சகோதர சகோதரிகளே, தொன்மையான  வேதங்களின் பாரம்பரிய மரபுகளை நாம் பெற்றுள்ளோம். அந்த மரபு நமக்கு தன்னம்பிக்கையை ஊட்டுகிறது.அதனை முன்னெடுத்துச் செல்ல விரும்புகிறோம்.

எனதருமை நாட்டு மக்களே,  வெறும் கனவுகளில் மட்டுமே நாம் மிதக்க விரும்பவில்லை. எதிர்காலத்தில் புதிய உச்சத்தை தொடுவதே நமது லட்சியம். மிக உயர்ந்த நிலைக்கு செல்ல வேண்டும் என்றுநாம் கனவு காண்கிறோம். எனவேதான் நாட்டு மக்களே ஒரு புதிய நம்பிக்கையை உங்கள் உள்ளத்தில் நான் பதிக்க விரும்புகிறேன். உங்கள் உள்ளத்தில் கொழுந்துவிட்டு எரியும் ஆர்வமும்,  நம்பிக்கையும் அந்தக் கனவை நிச்சயம் நிறைவேற்றும். எனவேதான் இந்நாட்டு மக்களே

अपने मन में एक लक्ष्‍य लिए,

अपने मन में एक लक्ष्‍य लिए,

मंजिल अपनी प्रत्‍यक्ष लिए,

अपने मन में एक लक्ष्‍य लिए,

मंजिल अपनी प्रत्‍यक्ष लिए हम तोड़ रहे है जंजीरें,

हम तोड़ रहे हैं जंजीरें,

हम बदल रहे हैंतस्वीरें,

ये नवयुग है, ये नवयुग है,

ये नवभारत है, ये नवयुग है,

ये नवभारत है।

“खुद लिखेंगे अपनी तकदीर, हम बदल रहे हैं तस्वीर,

खुद लिखेंगे अपनी तकदीर, ये नवयुग है, नवभारत है,

हम निकल पड़े हैं, हम निकल पड़े हैं प्रण करके,

हम निकल पड़े हैं प्रण करके, अपना तनमन अर्पण करके,

अपना तनमन अर्पण करके, ज़िद है, ज़िद है, ज़िद है,

एक सूर्य उगाना है, ज़िद है एक सूर्य उगाना है,

अम्बर से ऊंचा जाना है, अम्बर से ऊंचा जाना है,

एक भारत नया बनाना है, एक भारत नया बनाना है।।”

எனது அருமை சகோதர சகோதரிகளே,

இந்த புனிதமான சுதந்திர தினத்தில் உங்களுக்கு எனது நல்வாழ்த்துக்கள். வாருங்கள் நான் ஒருங்கிணைந்து உரத்த குரலில் ஜெய்ஹிந்த் கோஷத்தை முழக்குவோம்.

ஜெய்ஹிந்த், ஜெய்ஹிந்த், ஜெய்ஹிந்த்

பாரத் மாதாகி ஜே

பாரத் மாதாகி ஜே

பாரத் மாதாகி ஜே

வந்தே மாதரம், வந்தே மாதரம், வந்தே மாதரம் 

 
Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Waqf Law Has No Place In The Constitution, Says PM Modi

Media Coverage

Waqf Law Has No Place In The Constitution, Says PM Modi
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
PM to participate in ‘Odisha Parba 2024’ on 24 November
November 24, 2024

Prime Minister Shri Narendra Modi will participate in the ‘Odisha Parba 2024’ programme on 24 November at around 5:30 PM at Jawaharlal Nehru Stadium, New Delhi. He will also address the gathering on the occasion.

Odisha Parba is a flagship event conducted by Odia Samaj, a trust in New Delhi. Through it, they have been engaged in providing valuable support towards preservation and promotion of Odia heritage. Continuing with the tradition, this year Odisha Parba is being organised from 22nd to 24th November. It will showcase the rich heritage of Odisha displaying colourful cultural forms and will exhibit the vibrant social, cultural and political ethos of the State. A National Seminar or Conclave led by prominent experts and distinguished professionals across various domains will also be conducted.