1980-லும், 1990 தொடக்கத்திலும், திரு.நரேந்திர மோடி, ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கத்தினிரிடையே(ஆர்.எஸ்.எஸ்.) உயர்ந்து, பின்னர் பாரதீய ஜனதா கட்சியில் (பா.ஜ.க.) இணைந்த தருணம், சுதந்திர இந்தியா வரலாற்றின் மிக கடினமான காலகட்டமாகவும் இருந்தது. நாடு முழுதும் மோதல்கள் நிகழ்ந்து வந்த வேளையில், மத்திய அரசு இந்த ஒற்றுமையின்மையை ஒன்றும் செய்ய இயலாமல் கண்ணுற்றுவந்தது. பஞ்சாப் மற்றும் அசாம் மாநிலங்களில் மோதல்கள் ஏற்பட்டு, தாய்நாட்டின் ஒற்றுமை மற்றும் பாதுகாப்பிற்கு சவாலாக அமைந்தது. உள்நாட்டிலும், பிரித்தாளும் அரசியல் நடைபெற்று வந்தது. குஜராத்தில், “ஊரடங்கு உத்தரவு’ என்பது பொதுவான வார்த்தையாக வீட்டு அகராதியில் மாறியது. வாக்கு-வங்கி அரசியல் என்பது நடைமுறையானதால், சகோதர், சகோதரருக்கு எதிராகவும், சமூகங்கள் சமூகங்களுக்கு எதிராகவும் மோதல் உண்டாக்கப்பட்டது,
ஜனநாயகம் மற்றும் சுதந்திர பேச்சுரிமை போன்ற பண்புகளுக்கு உறுதிகொண்ட ஒன்றுபட்ட மற்றும் வலிமையான பாரதம் என்ற பார்வை கொண்ட திரு.சர்தார் பட்டேலின் கனவிற்கேற்ப, இந்த தருணத்தில் எழுந்த மனிதர் தான் திரு. நரேந்திர மோடி. இந்த மாண்புகளுக்கு எதிரான போரில், நாட்டில் நிலவிய இருண்ட நிலையில், ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க.விற்காக சிறந்தமுறையிலும், கடுமையாகவும் உழைத்த திரு.நரேந்திர மோடியிடம் இருந்த நாட்டுப்பற்றை வெளிக்கொண்டு வந்தது. அது போன்று, இளவயதிலேயே அவர் ஒரு சிறந்த அர்ப்பணிப்பான செயல்வீரர் என்பதையும், மிகச் சிறந்த ஏற்பாட்டாளர் என்பதையும் நிருபித்தார். இத்தருணத்தில் உயர்ந்து வந்த அவர், ஆரோக்கியமற்ற நிலைக்கு சவலாகவும் விளங்கினார்.
அகமாதபாத்தில் ஒற்றுமை யாத்திரையின்போது திரு.நரேந்திர மோடி
1980-களின் முடிவில், ஒரு காலத்தில் ‘பூமியின் சொர்க்கம்’ என்றழைக்கப்பட்ட நாட்டின் வட மாநிலமான ஜம்மு மற்றும் காஷ்மீர், முழுமையான யுத்தகளமாக மாறியது. மத்திய அரசின் சந்தர்ப்பவாத அரசியலுடன், ஜனநாயகத்திற்கு மாறாக 1987-களில் நடைபெற்ற மாநில தேர்தல்களும் சேர்ந்து, ஜம்மு மற்றும் காஷ்மீர், இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கைகளுக்கான எளியதளமாக மாறியது. ஒரு காலத்தில் பூமியின் மிக அழகிய இடம் என்றழைக்கப்பட்ட பள்ளத்தாக்கு, தெருக்களில் சிந்திய ரத்தத்துளிகளால் யுத்த களமாக விரைவாக மாறிபோனது. காஷ்மீரில் மூவர்ண தேசியக் கொடியை ஏற்றுவது கூட தடை செய்யப்படும் அளவிற்கு நிலைமை கீழுக்கு போனது. தீர்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பதிலாக, மத்திய அரசு ஒன்றும் செய்ய இயலாது கைகட்டி வேடிக்கை பார்த்தது.
1989-ல், மத்திய உள்துறை அமைச்சர் திரு.முப்தி முகமது சையத்தின் மகள், செல்வி.ரூபையா சையத் சில தேசத்திற்கு எதிரான சக்திகளால் கடத்தப்பட்டார். ஆனால், உறுதியான நடவடிக்கை மேற்கொள்வதற்கு பதிலாக, புதுதில்லியில் இருந்த அரசு, இந்தியாவிற்கு எதிரான தீவிரவாதிகளை விடுவிக்கும் எளிதான முயற்சியை மேற்கொண்டதன் மூலம் நாட்டிற்கு எதிரான சக்திகளுக்கு ஊக்கத்தை அளிப்பதாக அமைந்தது.
இவ்வாறு இந்தியாவின் சுதந்திரத்தை படிப்படியாக குறைத்து வருவதை கண்டு பா.ஜ.க. மவுனமான பார்வையாளராக இருக்க முடியாது. இதை கூறிய திரு.ஷியாமா பிரசாத் முகர்ஜி காஷ்மீருக்கு சென்றபோது தான் தனது உயிரை இழந்தார். அதன் பின்னர் பத்தாண்டுகளுக்கு பிறகு, நாட்டின் ஒற்றுமை குறித்து பேசும் பொறுப்பு பா.ஜ.க.வின் மீது விழுந்தது. எதிர்பாராத சூழலுக்கு தீர்வாக, அப்போதைய கட்சித் தலைவர் டாக்டர்.முரளி மனோகர் ஜோஷி, நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தும் வண்ணம் ‘ஒற்றுமை யாத்திரை’ நடத்திட முடிவு செய்தார். இந்த யாத்திரை, சுவாமி விவேகானந்தர் வாழ்வின் அர்த்தத்தை உணர்ந்த கன்னியாகுமரியில் துவங்கி, ஸ்ரீநகரில் மூவர்ண கொடியை ஏற்றுவதோடு நிறைவு பெறுவதாக இருந்தது.
இந்த யாத்திரைக்கு தயார் செய்யும் பணி, ஏற்பாட்டு திறன்களுக்கு பெயர் பெற்ற திரு.நரேந்திர மோடியின் தோள்களில் விழுந்தது; தனது அறிவு, ஏற்பாட்டு வலிமை மற்றும் பொறுப்புணர்வு ஆகியவற்றின் மூலம், அவர் குறுகிய காலத்தில், பெரிய சவால்களையும் மீறி, மிகப் பெரிய அளவில் ஏற்பாடுகளை செய்தார். அவர் துணிச்சலாக, யாத்திரை செல்லக்கூடிய இடங்களுக்கு சென்று, கட்சியினரை சந்தித்தார்.
அவர் கட்சியினருக்கு உணர்வூட்டி, அவர்களிடையே நாட்டுப்பற்று உணர்வை ஏற்படுத்தியதன் மூலம் யாத்திரையின் வெற்றிக்கான அடித்தளத்தை அமைத்தார். இதில், அவர் சிறந்த ஒருங்கிணைப்பாளர் என்பதை மட்டுமல்லாமல், இன்றைய பொதுவாழ்வில் மிக அரிதாக காணப்படும், எந்த சூழலிலும் விரைவாக செயல்படும் திறமையையும் வெளிப்படுத்தினார். கடினமான சூழ்நிலைகளிலும் விரைவான முடிவுகளை எடுக்கும் திறனை திரு.மோடி பெற்றதோடு, தாம் முடிவெடுத்ததை செயல்படுத்தும் திறன் கொண்ட ஒருவராகவும் விளங்கினார்
ஒற்றுமை யாத்திரையின்போது திரு.நரேந்திர மோடி
சுப்பிரமணிய பாரதியின் பிறந்த நாள் மற்றும் குரு தேக் பகதூரின் ‘தியாக தினம்’ ஆன 1991, டிசம்பர், 11 அன்று ஒற்றுமை யாத்திரை துவங்கியது. பிரித்தாளும் மற்றும் வன்முறை அரசியலுக்கு எதிராகவும், காஷ்மீரில் தீவிரவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவது போன்ற முக்கிய பிரச்சினைகள் நாடு முழுவதிலும் எழுப்பப்பட்டது.
சென்ற இடங்களில் எல்லாம் திரு.மோடி அவர்கள், திரு.ஷியாமா பிரசாத் முகர்ஜியின் செய்தியை எதிரொலிக்கும் வண்ணம், அனைத்திற்கும் மேலாக நாட்டின் ஒற்றுமை மேலானது என்றும், சமூகத்தில் பல்வேறு பிரிவுகளுக்கு பல்வேறு நடைமுறைகள் என்பதில் நம்பிக்கையில்லை என்றும் தெரிவித்தார். தற்போது நாட்டிற்கு எதிரான சக்திகளுக்கு தகுந்த பக்க அளிப்பதே தேவையாகும். அந்நேரம் வரும்போது திரு.மோடி அதற்கு தலைமையேற்பார்! ஒற்றுமை யாத்திரை சென்ற இடம் எங்கும் மிகுந்த வரவேற்பை பெற்றது. டாக்டர். ஜோஷி நாட்டின் மீள்உருவாக்கத்திற்கான தேவையை வலியுறுத்தியது, இந்திய மக்களிடம் நெருக்கமான உறவை ஏற்படுத்தியது.
தில்லியில் கண்டு கொள்ளாமல் இருந்த காங்கிரஸ் அரசிற்கு ஒற்றுமை யாத்திரை போன்ற கண்ணை திறக்க வைத்ததாக வேறு ஏதும் இருந்திருக்க முடியாது. யாத்திரையின் முன்னேற்றம், ஒருங்கிணைப்பு திறனை வெளிப்படும் வகையில் அமைந்ததால், யாத்திரையின் வெற்றி திரு.நரேந்திர மோடிக்கு முக்கிய மைல்கல்லாக அமைந்தது என்பதை கூறவே தேவையில்லை. திரு.மோடி அவர்கள், போலி-மதசார்பின்மை மற்றும் வாக்கு-வங்கி அரசியலுக்கு எதிராக இந்திய மக்கள் போராடுமாறு வலியுறுத்தினார். 1992, ஜனவரி, 26 அன்று ஸ்ரீநகரில் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டதை உணர்ச்சியுற்ற திரு.நரேந்திர மோடி மகிழ்வுடன் கண்டுகளித்தார்! இந்த அரிய தேசிய இயக்கத்தை மிகுந்த சவாலான தருணங்களை எதிர்கொண்டு வெற்றிகரமான நிறைவேற்றியது திரு.மோடி அவர்கள் நாட்டிற்கு எதிரான சக்திகளுக்கு எதிராக தன்னிகரற்ற வீரம், பார்வை, திறன் ஆகியவற்றுக்கு சான்றாக விளங்கியது, பாரத மாதாவிற்கு எதிரான சக்திகளை முயற்சிகளை அழிக்கும் ஆற்றலை வெளிப்படுத்தியது போல் அமைந்தது.