வளர்ச்சியடைந்த பாரதம் லட்சியப் பயணத்தின் பயனாளிகளுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடினார். நாடு முழுவதிலும் இருந்து வளர்ச்சியடைந்த பாரதம் லட்சியப் பயணத்தில் ஆயிரக்கணக்கான பயனாளிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூர் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
கிராமின் அஜீவிகா இயக்கத்தின் கீழ் சுயதொழில் செய்து வருபவரும், சுய உதவிக் குழுவைச் சேர்ந்தவருமான ராஜஸ்தான் மாநிலம் துங்கர்பூரைச் சேர்ந்த திருமதி மம்தா திந்தோருடன் பிரதமர் கலந்துரையாடினார். அவருக்கு குஜராத்தி மொழியும் நன்கு தெரியும் என்று பிரதமர் குறிப்பிட்டார். 5 பேர் கொண்ட கூட்டுக் குடும்பத்தைச் சேர்ந்த இவர், 150 குழுக்களில் 7500 பெண்களுடன் பணியாற்றுகிறார். அவர் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார், குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி, கடன் பெறுவதற்கு உதவுகிறார்.
தானே ஆழ்துளைக் கிணறு தோண்டக் கடன் பெற்று, காய்கறி விவசாயத்தில் ஈடுபட்டு காய்கறிக் கடை நடத்தி வருகிறார். அவர் பலருக்கு வேலை வாய்ப்பு அளித்து வருகிறார். பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் மூலம் திருமதி மம்தாவிடம் அடிப்படை வசதிகள் கொண்ட வீடு குறித்த அவரது கனவை நிறைவேற்றியதாகத் தெரிவிக்கப்பட்டது. அரசின் உதவிகளை பெறுவதற்கான தொகை, ஊழலற்ற சுமூகமான நடைமுறை குறித்து அவர் பிரதமரிடம் எடுத்துரைத்தார். மோடி உத்தரவாத வாகனம் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் அவர் முன்னணியில் உள்ளார், மேலும் அவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும், திட்டங்களின் கீழ் பயனடைவது உறுதி என்றும் அவர் மக்களிடம் கூறுகிறார்.
நவீன உலகத்தைப் பற்றிய அவரது விழிப்புணர்வைப் பாராட்டிய பிரதமர் திரு மோடி, அவரது குழுவைச் சேர்ந்த பெண்கள் பின்னணியில் காணொலி பதிவு செய்வதைக் குறிப்பிட்டு, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண் தொழில்முனைவோரை கவர்ந்தார். "துங்கர்பூரின் ஒரு சிறிய கிராமத்தில் எனது தாய்மார்களும், சகோதரிகளும் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதுடன், என்னை ஆசீர்வதிப்பவர்களாகவும் உள்ளது குறித்து மகிழ்ச்சியடைகிறேன்" என்று பிரதமர் தெரிவித்தார். மற்ற பெண்களையும் உடன் அழைத்துச் செல்வதில் அவரது ஆர்வத்தை திரு மோடி பாராட்டினார். கடந்த 9 ஆண்டுகளாக சுய உதவிக் குழுக்கள் மூலம் பெண்களுக்கு அதிகாரம் அளிக்க அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாக பிரதமர் தெரிவித்தார். 2 கோடி லட்சாதிபதி மகளிரை உருவாக்கும் திட்டத்தை மீண்டும் சுட்டிக்காட்டிய அந்தப் பெண், இந்தத் திட்டத்தில் தன்னைப் போன்ற சுய உதவிக் குழு உறுப்பினர்களின் பங்கை வலியுறுத்தினார்.