டிஜிட்டல் இந்தியா திட்டம் ஓய்வூதியம் பெறும் நடைமுறையை எளிதாக்கியுள்ளது என்றும், நாடு முழுவதும் உள்ள மூத்த குடிமக்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக உள்ளது என்பதை நிரூபித்துள்ளது என்றும் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று திருப்தி தெரிவித்துள்ளார்.
பத்திரிகையாளர் அஜய் குமாரின் பதிவுக்கு திரு மோடி பதிலளித்திருப்பதாவது:
"முதலில், @AjayKumarJourno, உங்கள் தாய்க்கு எனது வணக்கம்!
அவர்களின் ஓய்வூதிய நடைமுறையை டிஜிட்டல் இந்தியா எளிதாக்கியுள்ளதுடன், நாடு முழுவதும் உள்ள முதியோர்களுக்கு பெரிதும் உதவுகிறது என்பதில் நான் திருப்தி அடைகிறேன். இதுதான் இந்த திட்டத்தின் சிறப்பம்சமாகும்."
सबसे पहले @AjayKumarJourno जी, आपकी माता जी को मेरा प्रणाम!
— Narendra Modi (@narendramodi) October 9, 2024
मुझे इस बात का संतोष है कि डिजिटल इंडिया ने उनकी पेंशन की राह आसान की है और यह देशभर के बुजुर्ग नागरिकों के बहुत काम आ रहा है। यही तो इस कार्यक्रम की बहुत बड़ी विशेषता है। https://t.co/XCJPAgOPjO