பிரதமர் திரு. நரேந்திர மோடியை ரஷ்ய துணைப் பிரதமர் திரு.டிமிட்ரி ரோகோசின் புது தில்லியில் இன்று பிற்பகல் சந்தித்துப் பேசினார்.
இந்த ஆண்டில் மூன்றாவது முறையாக இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள துணைப் பிரதமர் ரோகோசினை பிரதமர் திரு. நரேந்திர மோடி வரவேற்றார். இந்த ஆண்டில் இருதரப்பு உயர்மட்ட பரிமாற்றங்கள் அதிகரித்திருப்பது குறித்து பிரதமர் மனநிறைவை வெளிப்படுத்தினார். வருடாந்திர இரு தரப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக புனித பீட்டர்ஸ்பர்க் நகருக்கு கடந்த ஜூன் மாதத்தில், தான் பயணம் மேற்கொண்டதை பிரதமர் மகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தார்.
பிரதமரும், துணைப் பிரதமர் ரோகோசினும், இருதரப்பு உறவுகள் தொடர்ந்து விரிவடைந்து வருவது குறித்தும், பல வகைகளில் நீடிப்பது குறித்தும் ஆலோசனை நடத்தினர். குறிப்பாக, எரிசக்தி துறையில் ஒத்துழைப்பு இருப்பதையும், உயர்தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர விரும்புவதையும் குறிப்பிட்டனர்.
பிரதமர் திரு.நரேந்திர மோடிக்கு அதிபர் புதினின் வாழ்த்துகளை திரு. டிமிட்ரி ரோகோசின் தெரிவித்தார். இதனை பிரதமர் மனமுவந்து ஏற்றுக் கொண்டார்.