நாங்கள், தெற்காசிய நாடுகளின் சங்கத்தின் (ஆசியான்) உறுப்பு நாடுகளின் தலைவர்கள், “பகிரப்பட்ட மாண்புகள், பொதுவான விதி” என்ற தலைப்பின் கீழ் ஆசியான்-இந்தியா பேச்சுவார்த்தை உறவுகளின் 25 வது ஆண்டு விழாவை நினைவுகூறும் வகையில் 2018, ஜனவரி, 25 அன்று இந்தியா, புதுதில்லியில் நடைபெற்ற ஆசியான்-இந்திய நினைவுநாள் மாநாட்டில் கூடியுள்ளோம்;
ஐக்கிய நாடுகள் சாசனம், தெற்காசியாவில் அமைதி மற்றும் கூட்டுறவிற்கான ஒப்பந்தம் (டி.ஏ.சி.), இருதரப்பிற்கும் பயனளிக்கும் உறவுகளுக்கான கொள்கைகளுக்கான கிழக்கு ஆசிய மாநாட்டு பிரகடனம் மற்றும் 2012, டிசம்பர், 20 அன்று ஆசியான்-இந்தியா பேச்சுவார்த்தை உறவுகளின் 20வது ஆண்டு நிறைவை குறிக்கும் வகையில் நடைபெற்ற ஆசியான்-இந்தியா நினைவு மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தொலைதூரபார்வை அறிக்கை ஆகியவற்றில் பேணப்பட்டுள்ள கொள்கைகள், நோக்கங்கள், பகிரப்பட்ட மாண்புகள் மற்றும் நடைமுறைகளின்படி ஆசியான்-இந்தியா பேச்சுவார்த்தை உறவுகளுக்கு வழிகாட்டுவது; மற்றும் ஆசியான் சாசனத்திற்கு ஆதரவளிப்பதற்கான எங்களது உறுதிப்பாட்டை மீள உறுதிசெய்கிறோம்
பல நூற்றாண்டுகளுக்கு மேலாக தென்கிழக்கு ஆசியா மற்றும் இந்தியா இடையே குறுக்கு-கலாச்சார பரிமாற்றங்கள் மற்றும் நாகரிக உறவுகள் ஆகியவை, அதிகரித்து வரும் இணைக்கப்பட்ட உலகில் ஆசியான் மற்றும் இந்தியா இடையேயான கூட்டுறவிற்கு வலுவான அடித்தளமாக உள்ளது என்பதை கருத்தில் கொள்கிறோம்;
அரசியல்-பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் சமூக-கலாச்சாரம் என்ற மூன்று ஆசியான் சமுதாய தூண்களின் மீதும் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசியான்-இந்தியா பேச்சுவார்த்தை உறவுகள் அடைந்துள்ள சாதனை பாராட்டுதல்களுடன் அங்கீகரிக்கிறோம்;
அமைதி, முன்னேற்றம் மற்றும் பகிரப்பட்ட வளத்திற்கான ஆசியான்-இந்தியா கூட்டை(2016-2010) செயல்படுத்துவதற்கான செயல் திட்டம் மற்றும் ஆசியான்-இந்தியா செயல் திட்டத்தை செயல்படுத்துவதற்கான 2016-2018-க்கான முன்னுரிமைப் பட்டியல் ஆகியவற்றில் அடைந்துள்ள முன்னேற்றத்தை திருப்தியுடன் கருத்தில் கொள்கிறோம்;
ஆசியான் 2025; கூட்டாக முன்னோக்கி செல்லுதல், ஆசியான் இணைப்பிற்கான முன்னோடி திட்டம் (எம்.பி.ஏ.சி.) 2025 மற்றும் ஆசியான் ஒருங்கிணைப்பிற்கான முனைப்பு பணித் திட்டம் III-ஐ செயல்படுத்துவதற்கான உதவி உள்ளிட்டவைகளுடன், உருவாகி வரும் பிராந்திய கட்டமைப்பிற்கு ஆசியானுக்கு இந்தியாவின் உதவி மற்றும் பிராந்திய அமைதி, பாதுகாப்பு மற்றும் வளம் மற்றும் ஆசியான் ஒருங்கிணைப்பு மற்றும் ஆசியான் சமுதாய கட்டமைப்பு செயல்முறைக்கான அதன் தொடர் பங்களிப்பை பாராட்டுகிறோம்:
ஆசியான்-இந்தியா இளைஞர் மாநாடு, ஆசியான்-இந்தியா இளைஞர் விருதுகள் மற்றும் இளைஞர் தலைமைபண்புத் திட்டம், மற்றும் ஆசியான்-இந்தியா இசைத் திருவிழா ஆகியவற்றை நடத்தியதன் மூலம் இளைஞர்கள் உள்ளிட்ட நமது சமுதாயங்களுக்கு ஆசியான்-இந்தியா மூலோபாய கூட்டை கொண்டு வரும் வகையில் 2017 முழுவதும் மற்றும் 2018 தொடக்கத்திலும் ஆசியான் உறுப்பு நாடுகள் மற்றும் இந்தியாவில் நடத்தப்பட்ட பல்வேறு நினைவுகூறும் நடவடிக்கைகளை பாராட்டுகிறோம்;
இதன் மூலம் கீழ்க்கண்டவற்றை ஏற்கிறோம்:
- நமது பிராந்தியங்களில் அமைதியான, நல்லிணக்கமான, கவனிப்பான மற்றும் பகிரும் சமுதாயத்தை உருவாக்குவதற்காக, தொடர்புடைய நிறுவன செயல்முறைகளை மேலும் வலுப்படுத்துதல் மற்றும் அரசு நிறுவனங்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வியாபார வட்டங்கள், விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள், ஊடகம், இளைஞர்கள் மற்றும் இதர பங்கேற்பார்களிடையேயான இணைப்பை விரிவாக்குதல் மூலம் இருதரப்பிற்கும் பயனளிக்கும் வகையில் ஒட்டுமொத்த அரசியல்-பாதுகாப்பு, பொருளாதாரம், சமூக-கலாச்சாரம் மற்றும் வளர்ச்சி கூட்டுறவிற்கு ஆசியான்-இந்தியா மூலோபாய கூட்டை மேலும் வலுப்படுத்துதல் மற்றும் ஆழப்படுத்துதல்.
- அமைதி, முன்னேற்றம் மற்றும் பகிரப்பட்ட வளத்திற்கான (2016-2020) ஆசியான்-இந்தியா கூட்டை செயல்படுத்துவதற்கான செயல்திட்டத்தை முழுமையாகவும், திறமையாகவும் மற்றும் குறித்த காலத்திற்குள் செயல்படுத்துவதற்காகவும் தீவிர முயற்சிகள் மற்றும் கூட்டுறவை தொடருதல்.
- ஆசியான்-இந்தியா மாநாடு, கிழக்கு ஆசிய மாநாடு (இ.ஏ.எஸ்.), இந்தியாவுடனான அமைச்சர்கள் மாநாடு (பி.எம்.சி.+1), ஆசியான் பிராந்திய மன்றம் (ஏ.ஆர்.எப்.), ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்களின் கூட்டம் (ஏ.டீ.எம்.எம்.) மற்றும் பிற ஆசியான்-இந்தியா அமைச்சரவை/துறை செயல்முறைகள் போன்ற ஆசியான்-தலைமையிலான செயல்முறைகள் மற்றும் ஆசியான்-இந்தியா பேச்சுவார்த்தை கூட்டு ஆகியவற்றின் தற்போதைய கட்டமைப்பிற்கு உட்பட்டு உயர் மட்டஅளவிலான பங்கேற்பு மற்றும் கூட்டுறவை மேலும் அதிகரித்தல்.
- ஆசியான் சமுதாய பார்வை 2025 நனவாக்கும் வகையில், ஆசியான் ஒருங்கிணைப்பு மற்றும் ஆசியான் சமுதாய கட்டமைப்பு செயல்முறைகளுக்கான ஆதரவு மற்றும் பங்களிப்பு தொடருதல்.
அரசியல் மற்றும் பாதுகாப்பு கூட்டுறவு
- பரஸ்பர கவனத்திற்குள்ளாகும் பொதுவான பிராந்திய மற்றும் சர்வதேச பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து நெருங்கி பணியாற்றுதல் மற்றும் இந்தியாவுடனான பி.எம்.சி+1, ஏர்.ஆர்.எப்., இ.ஏ.எஸ்., ஏ.டீ.எம்.எம்-பிளஸ், மற்றும் பன்னாட்டு குற்றங்களுக்கான ஆசியான் மூத்த அலுவலர்களின் கூட்டம் (எஸ்.ஓ.எம்.டி.சி)+இந்திய ஆலோசனைகள் போன்ற தற்போதுள்ள ஆசியான்-தலைமையிலான வரையறைகள் மற்றும் செயல்முறைகள் மூலம் திறந்த, வெளிப்படையான, உள்ளடக்கிய மற்றும் விதிகளின் அடிப்படையிலான பிராந்திய கட்டமைப்பை உறுதி செய்வதற்கான எங்களது உறுதியை மீள உறுதிசெய்தல்.
- பிராந்தியத்தில் அமைதி, நிலைத்தன்மை, கடல்சார் பாதுகாப்பு, கப்பல் மற்றும் விமான போக்குவரத்திற்கான சுதந்திரம் மற்றும் கடலின் இதர சட்டப்படியான பயன்கள் மற்றும் சட்டப்படியான வணிகம் ஆகியவற்றை பராமரித்தல் மற்றும் ஊக்குவித்தல் மற்றும் கடல் சட்டத்திற்கான 1982 ஐக்கிய நாடுகள் மாநாடு (யு.என்.சி.எல்.ஓ.எஸ்.) உள்ளிட்ட உலகம் முழுவதிலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச சட்டத்தின் கொள்கைகள் மற்றும் சர்வதேச பொது விமானபோக்குவரத்து அமைப்பு (ஐ.சி.ஏ.ஓ.) மற்றும் சர்வதேச கடல்சார் அமைப்பு (ஐ.எம்.ஓ.) ஆகியவற்றின் தொடர்புடைய நிலைகள் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைகளுக்கேற்ப பிரச்சினைகளுக்கு அமைதியான முறையில் தீர்வு காண ஊக்குவித்தல் ஆகியவற்றின் முக்கியத்துவதை மீள உறுதிசெய்தல். இது தொடர்பாக தென் சீன கடலில் தரப்பினர் நடத்தைக்கான பிரகடனத்தை (டீ.ஓ.சி.) முழுமையாகவும், திறமையாகவும் செயல்படுத்திட நாங்கள் ஆதரவு அளிப்பதுடன், தெற்கு சீன கடலில் நடத்தை விதிகளை (சி.ஓ.சி.) விரைவில் முடிவு செய்திட எதிர்நோக்கியுள்ளோம்.
- கடல்சார் பிரச்சினைகளில் பொதுவான சவால்களுக்கு தீர்வு காண விரிவாக்கப்பட்ட ஆசியான் கடல்சார் மன்றம் (இ.ஏ.எம்.எப்.) உள்ளிட்ட தொடர்புடைய தற்போதைய செயல்முறைகள் மூலம் கடல்சார் கூட்டுறவை வலுப்பெறச் செய்தல்.
- கடலில் விபத்துக்கள் மற்றும் சம்பவங்கள் நடப்பதை தடுக்க கூட்டாக பணியாற்றுதல் மற்றும் ஐ.சி.ஏ.ஓ. மற்றும் ஐ.எம்.ஓ. உள்ளிட்ட தற்போதுள்ள செயல்முறைகள் மற்றும் நடைமுறைகளுக்கு ஏற்ப கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு பணியில் ஆசியான் மற்றும் இந்தியா இடையே திறமையான கூட்டுறவை ஊக்குவித்தல் மற்றும் கடல்சார் பிரச்சினைகளுக்கான ஆராய்ச்சி நிறுவனங்களிடையேயான அதிகரித்துவரும் பங்கேற்பை ஊக்குவித்தல் மற்றும் கடல்சார் கல்வி, ஆராய்ச்சி, வளர்ச்சி மற்றும் கண்டுபிடிப்பை ஊக்குவித்தல்.
- பயங்கரவாதத்திற்கு எதிரான ஆசியான் எஸ்.ஓ.எம்.டி.சி.+இந்தியா கலந்தாலோசனை மற்றும் ஏ.டீ.எம்.எம்.-பிளஸ் வல்லுநர்கள் பணிக்குழு போன்ற தற்போதுள்ள ஆசியான் தலைமையிலான செயல்முறைகள் மற்றும் சர்வதேச பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும் கூட்டுறவிற்கான 2003 ஆசியான்-இந்தியா கூட்டு பிரகடனம், 2015-ல் வன்முறை தீவிரவாதத்தை எதிர்கொள்வதற்கான இ.ஏ.எஸ். அறிக்கை பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாத விளக்கம் மற்றும் பிரச்சாரச் சிந்தனை சவால்களை எதிர்கொள்வதற்கான இ.ஏ.எஸ். அறிக்கை, 2017-ல் ஏற்றுக்கொள்ளப்பட்ட பணமோசடி மற்றும் பயங்கரவாத்திற்கான நிதிக்கு எதிரான இ.ஏ.எஸ். தலைவர்களின் பிரகடனம் மற்றும் பயங்கரவாதம் மற்றும் பன்னாட்டு குற்றத்திற்கு எதிரான ஏ.ஆர்.எப். பணித் திட்டத்தின் கீழ் தகவல் பரிமாறுதல், சட்ட அமலாக்குவதலில் கூட்டுறவு மற்றும் திறன்வளர்ப்பு மூலம் பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்கள், வன்முறை தீவிரவாதம் மற்றும் மததீவிரவாதத்தை (radicalization) எதிர்கொள்வதற்கான கூட்டுறவை ஆழப்படுத்துதல். இது தவிர, மக்கள் கடத்தலில் ஈடுபடுதல், நபர்கள் கடத்தல், சட்டவிரோத போதைமருத்து கடத்தல், சைபர்குற்றம் மற்றும் கப்பல்களுக்கு எதிராக கடற்கொள்ளை மற்றும் ஆயுதக்கொள்ளை போன்ற இதர பன்னாட்டு குற்றங்களுக்கு எதிரான கூட்டுறவு மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்துதல்.
- அமைதி, பாதுகாப்பு, சட்டத்தின் ஆட்சியை நிலைப்பெறச் செய்தல், நிலையான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமமான முன்னேற்றம் மற்றும் சமூக நல்லிணக்கதை ஊக்குவிப்பதற்கான உலகளாவிய மிதவாதிகள் இயக்கத்திற்கான லங்காவி பிரகடனத்தை செயல்படுத்துதலில் ஆதரவு.
- எல்லைத் தாண்டும் பயங்கரவாதிகள் மற்றும் வெளிநாட்டு பயங்கரவாதிகளின் இயக்கம் மற்றும் பயங்கரவாத குழுக்கள் சமூக ஊடகம் உள்ளிட்ட இணையத்தை தவறாக பயன்படுத்துவதை எதிர்கொள்ளல்; மற்றும் பயங்கரவாத குழுக்களில் உறுப்பினராக சேருவதை தடுத்தல்; பயங்கரவாத குழுக்கள் மற்றும் சரணாலயங்களின் எதிரான முயற்சிகளுக்கு ஆதரவு; மற்றும் எந்த நிலத்திலும் எவ்வகையிலும் பயங்கரவாத செயல்களுக்கு நியாயமளிக்கக்கூடாது என வலியுறுத்துவதுடன் பயங்கரவாதத்திற்கு எதிராகவும், அது பரவுவதை தடுக்கவும் மேலும் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பயங்கரவாதிகள், பயங்கரவாத குழுக்கள் மற்றும் இணைப்புகளை தடுத்தல் மற்றும் எதிர்கொள்ளுதலுக்காக பயங்கரவாதத்திற்கு எதிரான விரிவான அணுகுமுறையை ஊக்குவித்தல் மற்றும் உறுதியை மீள உறுதிப்படுத்துதல்.
- பயங்கரவாதத்தை எதிர்கொள்வது தொடர்பான ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் தொடர்பான தீர்மானங்களை கடைபிடிப்பதை உறுதி செய்வதற்காக சர்வதேச சமூகத்துடன் இணைந்து பணியாற்றுதல் மற்றும் ஐக்கிய நாடுகளில் சர்வதேச தீவிரவாதம் குறித்த விரிவான மாநாட்டு பேச்சுவார்த்தை முயற்சிகளை கருத்தில் கொள்ளுதல்.
- ஆசியான் இணைய பாதுகாப்பு கூட்டுறவு மூலோபாயம், தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பங்கள் (ஐ.சி.டி.க்கள்) பாதுகாப்பு மற்றும் பயன்பாடு குறித்த ஏ.ஆர்.எப். பணித் திட்டம் மற்றும் ஐ.சி.டி.க்கள் பாதுகாப்பு மற்றும் பயன்பாடு குறித்த ஏ.ஆர்.எப். இடை-அமர்வுக் கூட்டப் பணி செயல்பாடுகளுக்கு ஆதரவு உள்ளிட்ட இணைய-பாதுகாப்பு, திறன் வளர்ப்பு மற்றும் கொள்கை ஒத்துழைப்பில் ஆசியான் மற்றும் இந்தியா இடையேயான கூட்டுறவை வலுப்படுத்துதல் மற்றும் இதர ஆசியான் துறைகளின் உறுப்புகள் மேற்கொண்டுள்ள பிராந்திய இணைய திறன் வளர்ப்பு கண்டுபிடிப்புகளை மேலும் வலுப்படுத்துதல் மற்றும் 2018-ல் நடைபெறவுள்ள முதல் ஆசியான்-இந்தியா இணைய பேச்சுவார்த்தையில் 2015 ஆசியான்-இந்தியா இணைய-பாதுகாப்பு மாநாட்டு விவாதங்களின் மீது கட்டமைத்தல்.
பொருளாதார கூட்டுறவு
- ஆசியான்-இந்தியா கட்டுப்பாடற்ற வணிக பகுதியை முழுவதுமாக பயன்படுத்துதல் மற்றும் சிறப்பாக செயல்படுத்துதல் உள்ளிட்ட ஆசியான்-இந்தியா பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்துதல் மற்றும் நவீன, விரிவான, உயர்தரமிக்க, பரஸ்பரம் பயனளிக்கக்கூடிய பிராந்திய விரிவான பொருளாதார கூட்டை (ஆர்.சி.இ.பி.) விரைவான முடிவு செய்திட 2018-ல் முயற்சிகளை தீவிரப்படுத்துதல்.
- கடல் சட்டத்திற்கான ஐக்கிய நாடுகள் மரபு (யு.என்.சி.எல்.ஓ.எஸ்.) உள்ளிட்ட சர்வதேச சட்டத்தின்படி இந்திய மற்றும் பசிபிக் பெருங்கடல்களில் கடற் ஆதாரங்களை பாதுகாத்தல் மற்றும் நிலையாக பயன்படுத்துவதில் கூட்டுறவு மற்றும் இத்தகைய ஆதாரங்களில், சட்டவிரோத, கூறப்படாத மற்றும் வரையில்லாத மீன்பிடிப்பு, கடற் சுற்றுச்சூழ அமைப்புகள் இழப்பு மற்றும் மாசுகட்டுப்பாட்டின் மோசமான தாக்கங்கள், கடல் திரவமயமாதல், கடற் கழிவுகள் மற்றும் கடற் சுற்றுச்சூழலை ஆக்கிரமிக்கும் உயிரினங்கள் போன்ற அச்சுறுதல்களுக்கு தீர்வு காணுதல். இது தொடர்பாக, நீல பொருளாதாரத் துறையிலான கூட்டுறவை விரிவாக்குதல் மற்றும் இது தொடர்பாக கூட்டுறவிற்கான கட்டமைப்பை உருவாக்குவதற்கான இந்தியாவின் முன்மொழிவை கருத்தில் கொள்ளுதல்.
- வான்போக்குவரத்து துறையில், 2008, நவம்பர், 6 அன்று மணிலாவில் நடைபெற்ற 14வது ஆசியான் போக்குவரத்து அமைச்சர்கள் கூட்டத்தில் ஆசியான்-இந்தியா வான்போக்குவரத்து கூட்டுறவு கட்டமைப்பின் கீழ் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிராந்திய வான் சேவைகள் ஏற்பாடுகளுக்கான ஆசியான்-இந்தியா பணிக்குழுவின் வான் சேவைகள் கலந்தாலோசனைகளை கூட்டுதல் மற்றும் ஆசியான் மற்றும் இந்தியா இடையே தொழில்நுட்ப, பொருளாதார மற்றும் கட்டுப்பாடு பிரச்சினைகள் குறித்த வான் போக்குவரத்து கூட்டுறவை ஏற்படுத்துதல் உள்ளிட்டவைகளில் கூட்டுறவை ஆழப்படுத்துதல். சுற்றுலா, வணிகத்தை ஊக்குவிக்கும் வகையில் ஆசியான்-இந்தியா வான் தொடர்புகளை நெருக்கமாக ஏற்படுத்துதல் மற்றும் ஆசியான் மற்றும் இந்தியா இடையேயான அதிகளவிலான இணைப்பை மேம்படுத்துதல்,
- ஆசியான் மற்றும் இந்தியா இடையேயான கடல்வழி போக்குவரத்து கூட்டுறவை ஊக்குவித்தல் மற்றும் கடல்துறைமுகங்கள் வளர்ச்சி, கடல்சார் பொருட்கள் போக்குவரத்து இணைப்பு, மற்றும் கடல்சார் சேவைகளில் அதிகமான திறமையான தொடர்புகளை உருவாக்குவதற்காக தகுதியான தனியார் துறை பங்கேற்பை ஊக்குவித்தல்; மற்றும் இந்த முன்னுரிமைத் துறைகளில் ஆசியான் மற்றும் இந்தியா இடையேயான தொடர் கலந்துரையாடல்களை ஊக்குவித்தல்.
18.வான் மற்றம் கடல்வழி போக்குவரத்து துறைகளில் கூட்டுறவை வலுப்படுத்துதல் மற்றும் ஆசியான்-இந்தியா வான்போக்குவரத்து ஒப்பந்தம் (ஏ.ஐ.-ஏ.டி.ஏ.) மற்றும் ஆசியான்-இந்தியா கடல்சார் போக்குவரத்து ஒப்பந்தம் (ஏ.ஐ.-எம்.டி.ஏ.) ஆகியவற்றை விரைவாக இறுதி செய்திட முன்னோக்குதல்.
- ஆசியான் இணைப்பு 2025க்கான முன்னோடி திட்டம் மற்றும் ஆசியான் ஐ.சி.டி. முன்னோடித் திட்டம் 2020-க்கு ஏற்றவகையில், முறையே, சில ஆசியான் உறுப்பு நாடுகளில் மென்பொருள் வளர்ச்சி மற்றும் பயிற்சி மையத்தை (சி.இ.எஸ்.டீ.டி.) ஏற்படுத்துதல் மூலம் ஐ.சி.டி. கொள்கைகள், திறன்வளர்ப்பை அதிகரித்தல், டிஜிட்டல் இணைப்புகள், உள்கட்டமைப்பு மற்றும் சேவைகளை மேம்படுத்துதல், ஐ.சி.டி. மனிதவள ஆதாரங்களை வளர்த்தல் ஆகியவற்றை உயர்த்திட ஐ.சி.டி.யில் கூட்டுறவை வலுவாக்குதல், ஐ.சி.டி. தொடங்குதல்களை ஊக்குவித்தல், மற்றும் ஏற்றுக்கொள்வதற்கான வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை கண்டறிதல்;
- தொழில்நுட்ப பரிமாற்றம், பகிருதல், ஏற்றுக்கொள்ளுதல், பகிர்மான வழிகள், நிதி வசதிகள், கண்டுபிடிப்புகளுக்கான அணுகுமுறைகள் மற்றும் உலகளாவிய மற்றும் பிராந்திய மதிப்பு இணைப்புகளை ஒருங்கிணைப்பதற்கான வாய்ப்புகள் மற்றும் திட்ட வளர்ச்சி நிதி மற்றும் உடனடி தாக்க திட்ட நிதி, எங்கு தொடர்புள்ளதோ, அதன் பயன்பாடு, உள்ளிட்டவை மூலம் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் நிலையான வளர்ச்சியை மேலும் ஊக்குவித்தல்.
- விவசாயம் மற்றும் எரிசக்தி துறைகளில் கூட்டுறவை வலுப்படுத்துதல் மூலம் நமது பிராந்தியத்தில் நீண்ட கால உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான கூட்டுறவின் அதிகரிப்பை தொடர்தல்; எங்கு செயல்படுத்த முடியுமோ, சர்வதேச சூரிய எரிசக்தி கூட்டணி (ஐ.எஸ்.ஏ.) உள்ளிட்ட சர்வதேச தளங்கள் மூலம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை ஊக்குவிக்க இணைந்து பணியாற்றுதல்
- ஆசியான்-இந்தியா கண்டுபிடிப்புத் தளம், ஆசியான்-இந்தியா ஆராய்ச்சி & பயிற்சி உதவித் திட்டம் மற்றும் ஆசியான்-இந்தியா கூட்டு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித் திட்டம் மூலம் நனோ-தொழில்நுட்பம், பொருட்கள் அறிவியல் மற்றும் உயிரிதொழில்நுட்பம் உள்ளிட்ட இதர துறைகளில் 2016-2015 அறிவியில், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பிற்கான (ஏ.பி.ஏ.எஸ்.டி.ஐ.) ஆசியான் செயல்திட்டம் மூலம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் (எஸ்&டி) துறை உறவுகளை வலுப்படுத்துவதை தொடருதல்; அறிவியில் & தொழில்நுட்ப திறன்வளர்ப்பை அதிகரித்தல்.
- செயற்கைக்கோள்களை அனுப்புதல், அவற்றை டெலிமெட்ரி கண்காணிப்பு மூலம் கண்காணித்தல் மற்றும் கட்டளை நிலையங்கள் மற்றும் நிலம், கடல், தட்பவெட்பம் மற்றும் பிராந்தியத்தின் சமமான வளர்ச்சிக்கான டிஜிட்டல் ஆதாரங்களை நிலையாக கண்டறிவதற்காக செயற்கைகோள் படங்களை பயன்படுத்துதல், மற்றும் வளர்ந்து வரும் விண்வெளி தொழில்நுட்பங்களான சிறு செயற்கைகோள்கள், செயற்கைகோள்களுக்கிடையேயான தொடர்புகள், செயற்கைகோள் உந்துதல், மற்றும் விண்வெணி புள்ளிவிவரங்கள் பகுப்பாய்வு உள்ளிட்ட ஆசியான்-இந்தியா விண்வெளி கூட்டுறவுத் திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் விண்வெளியை அமைதியான முறையில் கண்டறிதலுக்கான கூட்டுறவை தொடருதல்.
- தனியார் துறை பங்கேற்பு ஊக்குவித்தலை தொடருதல் மற்றும் ஆசியான்-இந்தியா வியாபார மன்றம் உள்ளிட்ட வியாபாரத்திலிருந்து-வியாபாரம் வரையிலான உறவுகளை வலுப்படுத்துதல் மற்றும் பொருளாதார உறவுகளை மேலும் விரிவுபடுத்துதல் மற்றும் ஆழப்படுத்துதல் வகையில் ஆசியான் மற்றும் இந்திய பொருட்களின் முத்திரை வழிப்புணர்வு ஊக்குவிக்கும் வணிக நிகழ்ச்சிகளை ஊக்குவித்தல். ஆசியான்-இந்தியா வணிக மற்றும் முதலீட்டு மையம் ஏற்படுத்துதலை நாங்கள் முன்னோக்கியுள்ளோம்.
சமூக-கலாச்சார கூட்டுறவு
- உறுதியான மற்றும் உறுதியற்ற கலாச்சார பாரம்பரியத்துடன் தொடர்புடைய கொள்கை-உருவாக்குபவர்கள், மற்றும் மேலாளர்களிடம் அறிவு பரிமாற்றங்களுக்கான தளங்களை அளித்தல் மூலம் ஆசியான் மற்றும் இந்தியா இடையேயான நாகரிக மற்றும் வரலாற்று உறவுகளை ஊக்குவிப்பதற்காக ஒத்துழைத்தல்; மெகாங் ஆறு நெடுகிலும் உள்ள கல்வெட்டுகளை படங்களாக்கும் இந்தியாவின் முன்மொழிவு உள்ளிட்ட ஆசியான்-இந்தியா கலாச்சார மற்றும் வரலாற்று தொடர்பினை பிரதிபலிக்கும் கலாச்சார மற்றும் வரலாற்று சின்னங்கள் மற்றும் கட்டடங்களை பாதுகாத்தல் மற்றும் மீட்டெடுக்கும் முயற்சிகளை தீவிரப்படுத்துதல் மற்றும் ஆசியான்-இந்தியா கலாச்சார மற்றும் நாகரிக தொடர்புகள் குறித்த மாநாடுகள் மற்றும் நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்தல்.
- ஆசியான் 2015-க்கு பின்பான சுகாதார கூட்டப்பொருள் தொடர்பான துறைகளில், குறிப்பாக சுகாதார அமைப்பு துறையை வலுப்படுத்துதல் மற்றும் கவனிப்பிற்கான அணுகல் மற்றும் பாரம்பரிய மற்றும் நிரப்பு மருந்துகள் உள்ளிட்ட பாதுகாப்பான மற்றும் நல்ல தரமான மருத்துவ பொருட்கள் மற்றும் குறைவான விலையில் தரமான மருந்துகள் உள்ளிட்ட சுகாதார கூட்டுறவை ஊக்குவித்தல்.
- கலாச்சார சுற்றுலாவை ஊக்குவிப்பதன் மூலம் வலுவான கலாச்சார இணைப்பை ஏற்படுத்துதல் மற்றும் தில்லி பேச்சுவார்த்தை, ஆசியான்-இந்தியா சிந்தனையாளர்கள் இணைப்பு (ஏ.ஐ.என்.டி.டி.), ஆசியான்-இந்தியா முக்கிய நபர்கள் சொற்பொழிவு வரிசை (ஏ.ஐ.இ.பி.எல்.எஸ்.), பட்டய பயிற்சி படிப்புகள், மற்றும் மாணவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், விவசாயிகள், ஊடகம் மற்றும் இதர இளைஞர் திட்டங்கள் போன்ற திட்டங்கள் மூலம் மக்களுடன்-மக்களுடான தொடர்புகளை மேலும் அதிகரித்தல்.
- ஆங்கில மொழி பயிற்சி, தொழில்முனைவோர் பயிற்சி மற்றும் தொழிற்கல்வி மையங்களை ஏற்படுத்துதல் மற்றும் இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார கூட்டுறவு (ஐ.டி.இ.சி.) உதவித்தொகைகள், ஆசியான்-இந்தியா நல்லெண்ண உதவித்தொகை, நளந்தா உதவித் தொகை போன்ற வருடாந்திர உதவித்தொகைகள் வழங்கல் மற்றும் ஆசியான்-இந்தியா பல்கலைக்கழங்களின் இணைப்பை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகளை கண்டறிதல்; மற்றும் ஆசியான் பல்கலைக்கழக இணைப்பு உள்ளிட்ட பிற பல்கலைக்கழகங்களிலிருந்து பல்கலைக்கழகளுக்கான பரிமாற்றங்களை ஊக்குவித்தல் மூலம் கல்வி மற்றும் இளைஞர் துறைகளில் கூட்டுறவை வலுப்படுத்துதல்.
- பிராந்தியத்திலும், பிராந்தியத்தை தாண்டியும் பேரழிவிற்கு ஆசியான் மதிப்பளித்தல் மற்றும் பிராந்திய பேரழிவு மேலாண்மையில் சிறந்த ஒத்துழைப்பிற்காக ஏ.எச்.ஏ. மையம் மற்றும் அதன் இந்திய சகாவுடன் நெருங்கிய கூட்டு ஏற்படுத்துதல் மற்றும் ஒரே ஆசியான், ஒரே பதில் என்ற ஆசியான் பிரகடனத்தை நனவாக்கும் வகையில் பேரழிவு மேலாண்மை குறித்த மனிதாபிமான உதவிக்கான ஆசியான் ஒருங்கிணைப்பு மைய (ஏ.எச்.ஏ. மையம்) பணிக்கு ஆதரவளித்தல்.
- மகளிருக்கு அதிகாரமளித்தல், மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான உரிமைகளை ஊக்குவித்தல் மற்றும் பாதுகாத்தல், அவர்களுக்கு எதிரான அனைத்து வடிவங்களான வன்முறைகளை அழித்தல் மற்றும் ஆசியான்-இந்தியா செயல்திட்டம் (பி.ஓ.ஏ.) 2016-2020-க்கேற்ப பெண் தொழில்முனைவோர்களை ஊக்குவித்தல் மற்றும் இப்பிரச்சினைகள் தொடர்பான ஆசியான் கட்டமைப்புகள் மற்றும் செயல்முறைகளுக்கு ஆதரவளித்தல் குறித்து ஆசியான் மற்றும் இந்தியாவின் அரசு அதிகாரிகள் மற்றும் தொடர்புடைய பங்கேற்பார்களுடனான பேச்சுவார்த்தையை ஊக்குவித்தல்.
- ஏ.எஸ்.சி.சி. திட்டவரைபடம் 2025-ல் தெரிவிக்கப்பட்டுள்ள தொடர்பான மூலோபாய நடவடிக்கைகள், சுற்றுச்சூழலுக்கான ஆசியான் மூத்த அதிகாரிகளின் முன்னுரிமைகள் மற்றும் பருவகால மாற்றத்திற்கான ஆசியான் பணித் திட்டத்தின் செயல் திட்டம் 2016-2025 ஆகியவற்றை செயல்படுத்துவதற்கான ஆதரவை கண்டறிதல் உள்ளிட்ட சுற்றுச்சூழல் மேலாண்மை மற்றும் பருவகால மாற்றத்திற்கான கூட்டுறவை ஊக்குவித்தல்.
- பல்லுயிர் இழப்பு மற்றும் சுற்றுச்சூழல் சீர்குலைவிற்கு தீர்வு காணும் வகையிலும், பல்லுயிருக்கான ஆசியான் மைய (ஏ.பீ.சி.) பணிக்கு உதவுதல் உள்ளிட்ட அறிவு மற்றும் அனுபவம் பரிமாற்றம், கூட்டு ஆராய்ச்சி நடவடிக்கைகள் மற்றும் திறன்வளர் திட்டங்களை நடத்துதல் மூலம் பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் மேலாண்மைக்கான கூட்டுறவை அதிகரித்தல்.
- ஆசியான் சமூகத்தை ஒத்துழைப்பிற்கு உதவுதல் மற்றும் ஆசியான் சமுதாயப் பார்வை 2025 செயல்படுத்துதல் நோக்கத்திற்காக ஆசியான் நாடுகளின் பொது ஊழியர்களுக்கு பயிற்சி அளித்தல் உள்ளிட்ட பொது சேவை பிரச்சினைகளில் கூட்டணி உருவாக்கம், இணைப்பு மற்றும் கூட்டு ஆகியவற்றில் கூட்டுறவிற்கான வாய்ப்பினை கண்டறிதல்.
இணைப்பு
- செயல் உட்கட்டமைப்பு மற்றும் டிஜிட்டல் இணைப்பை ஊக்குவிப்பதற்கான இந்தியா அறிவித்துள்ள 1 பில்லியன் அமெரிக்க டாலர் கடனைக் கொண்டும், எம்.பி.ஏ.சி.2025 மற்றும் ஏ.ஐ.எம். 2020-க்கேற்ப செயல் மற்றும் டிஜிட்டல் இணைப்பை அதிகரிப்பதற்கான எங்களது உறுதியை மீள உறுதிசெய்தல்.
- இந்தியா-மியான்மர்-தாய்லாந்து முத்தரப்பு நெடுஞ்சாலைத் திட்டத்தை விரைவில் முடித்திட ஊக்குவித்தல் மற்றும் இந்த முத்தரப்பு நெடுஞ்சாலையை கம்போடியா, லாவோ பி.டீ.ஆர். மற்றும் வியட்நாமிற்கு விரிவுபடுத்துதல்.
வளர்ச்சிக்கான இடைவெளியை குறுகச் செய்வதற்கான கூட்டுறவு
- ஆசியான் உறுப்பு நாடுகளுக்குள்ளாக மற்றும் இடையே வளர்ச்சிக்கான இடைவெளியை குறைத்திட ஐ.ஏ.ஐ. பணித்திட்டம் III-ஐ செயல்படுத்துவதற்கான ஆசியானின் முயற்சிகளுக்கு இந்தியாவின் தொடர் ஆதரவிற்கு வரவேற்பு மற்றும் பாராட்டுதல்.
இந்தியா, புதுதில்லியில் இரண்டாயிரத்து பதினெட்டு, ஜனவரி இருபத்தைந்து அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது.