பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் பிரதிநிதிகள் மற்றும் பா.ஜ.க. தலைவர்கள் பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று புது தில்லியில் சந்தித்தனர்.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய ஆணையத்துக்கு அரசியலமைப்பு அந்தஸ்து அளித்ததற்காக பிரதிநிதி உறுப்பினர்கள் பிரதமருக்கு பாராட்டு தெரிவித்தனர். இந்த வரலாற்று நடவடிக்கை பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சமூகத்தினரை வலுபடுத்த உதவும் என்று கூறினர்.
பிரதிநிகளின் பாராட்டுகள் மற்றும் ஆதரவிற்காக அவர்களுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சமூகத்தினரின் உயர்விற்காக குறிப்பாக சமூகத்தின் அடித்தட்டில் உள்ள மக்களுக்காக தொடர்ந்து பணிபுரியுமாறு பிரதமர் பிரதிநிதிகளை கேட்டுக்கொண்டார். மேலும், இந்த சமொகத்தினரிடையே அவர்களுக்கான உரிமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு பிரதமர் கேட்டுக்கொண்டார்.
மத்திய அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான் மற்றும் மத்திய இணை அமைச்சர் (தனி பொறுப்பு) திரு. சந்தோஷ் குமார் கங்குவார் ஆகியோரும் இந்த சந்திப்பின்போது உடன் இருந்தனர்.