பிரான்ஸ் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ஜீன்-ஒய்வ்ஸ் லெ டிரியன், பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.
ஜம்மு காஷ்மீரில் 2016 செப்டம்பர் 18 ஆம் தேதி உரி முகாமில் நடைபெற்ற எல்லைதாண்டிய தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு லெ டிரியன் இரங்கல் தெரிவித்தார். தீவிரவாதத்துக்கு எதிரான இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் உறுதியாக இருப்பதாக அவர் தெரிவித்தார். தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் இந்தியாவுக்கு ஆதரவாக பிரான்ஸ் இருக்கும் என்றும் அவர் கூறினார்.
இருதரப்பு பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பில் தற்போதைய நிலவரம் குறித்து பிரதமரிடம் லெ டிரியன் தகவல்களைத் தெரிவித்தார்.
முன்னதாக 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு அரசுகளுக்கு இடையிலான ஒப்பந்தம் கையெழுத்தானதற்கு பிரதமர் வரவேற்பு தெரிவித்தார். அந்த ஒப்பந்தத்தை விரைவாக, உரிய காலத்திற்குள் செயல்படுத்த வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார்.