பிரதமர் திரு நரேந்திர மோடி பூட்டான் பயணம் மேற்கொள்வதற்கு முன் வெளியிட்ட அறிக்கையின் முழு விவரம்.
“2019 ஆகஸ்ட் 17-18 தேதிகளில் நான் பூட்டானுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறேன்.
இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற காலத்தின் தொடக்கத்தில் எனது பூட்டான் பயணம் என்பது நமது நம்பிக்கைக்குரிய அண்டை நாடும் நட்பு நாடுமான பூட்டானுடன் இந்தியாவின் உறவுகளில் அரசு எவ்வளவு ஈடுபாடு கொண்டிருக்கிறது என்பதன் உயர் முக்கியத்துவத்தைப் பிரதிபலிக்கிறது.
நமது பரவலான வளர்ச்சியின் பங்குதாரராகவும் பரஸ்பரம் பயன்தரும் புனல்மின் உற்பத்தியில் ஒத்துழைப்பாளராகவும், வலுவான வர்த்தகம் மற்றும் பொருளாதாரத் தொடர்புடையவராகவும் உள்ள பூட்டானுடனான இந்தியாவின் உறவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இவையெல்லாம் பாரம்பரியமிக்க உணர்வுப்பகிர்தல் மற்றும் மக்களோடு மக்கள் கொண்டுள்ள உறவுகளை மீண்டும் நிறுவுகின்றன.
முறைப்படி தூதரக உறவுகள் உருவாக்கப்பட்டதன் பொன்விழாவைக் கடந்த ஆண்டு இருநாடுகளும் இணைந்து கொண்டாடின.
இந்தியா-பூட்டான் ஒத்துழைப்பு என்பது இன்று சிறப்புக்குரிய குணாம்சத்தையும், சாராம்சத்தையும் பெற்றுள்ளது. ‘அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை’ என்ற இந்திய அரசின் கொள்கையில் முக்கியத் தூணாகவும் இது விளங்குகிறது.
இருதரப்பு உறவுகளின் ஒட்டுமொத்தத் தன்மையுடன் பூட்டானின் 4 ஆவது மன்னருடனும் பிரதமருடனும் பயனுள்ள விவாதங்களை நான் எதிர்நோக்கியிருக்கிறேன். பூட்டானின் பெருமைக்குரிய ராயல் பல்கலைக் கழகத்தில் அந்நாட்டின் இளம் மாணவர்களிடையே உரைநிகழ்த்துவதையும் நான் எதிர்பார்த்திருக்கிறேன்.
பூட்டானுடனான மதிப்புமிகு நட்புறவை எனது பயணம் மேம்படுத்தும் என்றும் இருநாடுகளின் எதிர்கால வளத்தையும், மக்களின் முன்னேற்றத்தையும் இது ஒருமுகப்படுத்தும் என்றும் நான் நம்புகிறேன்.”