இந்திய எல்லையை விட்டு வெளியேறிவிட்டாலும் இந்தியா மீதான அன்பு அவர்களுக்கு அப்படியே உள்ளது. இந்திய புலம்பெயர் சமூகம் உலக அளவில் முக்கியமான, வெற்றிகரமான சமூகம், தாங்கள் சென்ற நாட்டின் உள்ளூர் கலாச்சாரத்தோடு அழகாக ஒருங்கிணைந்தும், அந்நாட்டின் முன்னேற்றில் பங்கெடுத்தும் வாழ்கின்றவர்கள். எனினும் அவர்களின் இதயம் இன்னும் இந்தியாவுக்காக துடித்தபடியே இருப்பதால் எப்போதெல்லாம் தேவையோ அப்போதெல்லாம் இந்தியாவுக்கு உதவியும் வருகிறார்கள்.
பிரதமர் மோடியை இந்தியாவில் மாற்றத்தைக் கொண்டுவரும் தூதுவர் என புலம்பெயர் சமூகம் நம்புவதால், அவர்களிடையே பிரதமருக்கு எப்போதும் அலாதியான மதிப்பு உண்டு. ஒவ்வொரு வெளிநாட்டு பயணத்தின்போதும் புலம்பெயர் சமூகத்தை சந்திக்க அவர் தவறுவதே இல்லை. நியூயார்கின் மேடிசன் ஸ்குயர், சிட்னி அல்ஃபோன்ஸ் அரினா, செஷெல்ஸ், மொரிசியஸ், ஷாங்காய் என எங்கு சென்றாலும் ஒரு உலகப்புகழ் பெற்ற இசைக்கலைஞருக்கு கிடைக்கும் வரவேற்பைப் போன்ற நட்சத்திர வரவேற்பு அவருக்கு கிடைக்கிறது,
நிறைய கனவுகளைத் தாங்கிவரும் பிரதமரின் பேச்சு, இந்தியாவில் நிகழ்ந்துகொண்டிருக்கும் மாற்றங்களைப் பற்றியதாகவே இருக்கும். மக்களின் வாழ்வை இந்திய அரசு எப்படியெல்லாம் மாற்றுகிறது எனக் குறிப்பிடும் பிரதமர், இந்திய வளர்ச்சியில் புலம்பெயர் சமூகத்தின் பங்கை குறிப்பிடவும் தவறுவதில்லை.
PIOவையும் CIOவையும் இணைத்த நடவடிக்கை புலம்பெயர் சமூகத்தால் பெரிதும் கொண்டாடப்படுகிறது, பல இடங்களில் விசாவுக்காக கெடுபிடிகள் தளர்ந்ததைதும், நடைமுறைகள் எளிதாக்கப்பட்டதையும் அவர்கள் மிகவும் வரவேற்கிறார்கள்.
சமூக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கு அப்பாற்பட்டு, விமான நிலையங்களிலும், அவர் பங்கேற்கும் மற்ற நிகழ்ச்சிகளிலும் புலம்பெயர் இந்தியர்கள் பிரதமர் மோடிக்கு பலத்த வரவேற்பளிக்கிறார்கள். ”மோடி மோடி மோடி” என்ற பலத்த கோஷம் வெளிநாட்டு நிகழ்ச்சிகள் எல்லாவற்றிலும் கேட்கிறது. ஃபிரான்சில் உள்ள முதலாம் உலகப்போர் நினைவிடம் ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில், மக்கள் அப்படி கோசம் எழுப்ப வேண்டாம் என்றும், “வாழ்க வீரர்களின் தியாகம்,” என கோசமெழுப்புங்கள் என்றார் மோடி.
புலம்பெயர் இந்தியர்களின் அளப்பரிய பங்கை உணர்ந்த பிரதமர், இந்தியாவின் வளர்ச்சியில் தொடர்ந்து பங்காற்றுமாறு அவர்களிடம் வேண்டிக்கொண்டார்.