இந்திய எல்லையை விட்டு வெளியேறிவிட்டாலும் இந்தியா மீதான அன்பு அவர்களுக்கு அப்படியே உள்ளது. இந்திய புலம்பெயர் சமூகம் உலக அளவில் முக்கியமான, வெற்றிகரமான சமூகம்,  தாங்கள் சென்ற நாட்டின் உள்ளூர் கலாச்சாரத்தோடு அழகாக ஒருங்கிணைந்தும், அந்நாட்டின் முன்னேற்றில் பங்கெடுத்தும் வாழ்கின்றவர்கள்.  எனினும் அவர்களின் இதயம் இன்னும் இந்தியாவுக்காக துடித்தபடியே இருப்பதால் எப்போதெல்லாம் தேவையோ அப்போதெல்லாம் இந்தியாவுக்கு உதவியும் வருகிறார்கள்.


பிரதமர் மோடியை இந்தியாவில் மாற்றத்தைக் கொண்டுவரும் தூதுவர் என புலம்பெயர் சமூகம் நம்புவதால், அவர்களிடையே பிரதமருக்கு எப்போதும் அலாதியான மதிப்பு உண்டு.  ஒவ்வொரு வெளிநாட்டு பயணத்தின்போதும் புலம்பெயர் சமூகத்தை சந்திக்க அவர் தவறுவதே இல்லை.  நியூயார்கின் மேடிசன் ஸ்குயர், சிட்னி அல்ஃபோன்ஸ் அரினா, செஷெல்ஸ், மொரிசியஸ், ஷாங்காய் என எங்கு சென்றாலும் ஒரு உலகப்புகழ் பெற்ற இசைக்கலைஞருக்கு கிடைக்கும் வரவேற்பைப் போன்ற நட்சத்திர வரவேற்பு அவருக்கு கிடைக்கிறது,   


நிறைய கனவுகளைத் தாங்கிவரும் பிரதமரின் பேச்சு, இந்தியாவில் நிகழ்ந்துகொண்டிருக்கும் மாற்றங்களைப் பற்றியதாகவே இருக்கும்.  மக்களின் வாழ்வை இந்திய அரசு எப்படியெல்லாம் மாற்றுகிறது எனக் குறிப்பிடும் பிரதமர், இந்திய வளர்ச்சியில் புலம்பெயர் சமூகத்தின் பங்கை குறிப்பிடவும் தவறுவதில்லை.

PIOவையும் CIOவையும் இணைத்த நடவடிக்கை புலம்பெயர் சமூகத்தால் பெரிதும் கொண்டாடப்படுகிறது,  பல இடங்களில் விசாவுக்காக கெடுபிடிகள் தளர்ந்ததைதும், நடைமுறைகள் எளிதாக்கப்பட்டதையும் அவர்கள் மிகவும் வரவேற்கிறார்கள்.


சமூக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கு அப்பாற்பட்டு, விமான நிலையங்களிலும், அவர் பங்கேற்கும் மற்ற நிகழ்ச்சிகளிலும் புலம்பெயர் இந்தியர்கள் பிரதமர் மோடிக்கு பலத்த வரவேற்பளிக்கிறார்கள். ”மோடி மோடி மோடி” என்ற பலத்த கோஷம் வெளிநாட்டு நிகழ்ச்சிகள் எல்லாவற்றிலும் கேட்கிறது.  ஃபிரான்சில் உள்ள முதலாம் உலகப்போர் நினைவிடம் ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில், மக்கள் அப்படி கோசம் எழுப்ப வேண்டாம் என்றும், “வாழ்க வீரர்களின் தியாகம்,” என கோசமெழுப்புங்கள் என்றார் மோடி. 


புலம்பெயர் இந்தியர்களின் அளப்பரிய பங்கை உணர்ந்த பிரதமர், இந்தியாவின் வளர்ச்சியில் தொடர்ந்து பங்காற்றுமாறு அவர்களிடம் வேண்டிக்கொண்டார்.

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
India’s organic food products export reaches $448 Mn, set to surpass last year’s figures

Media Coverage

India’s organic food products export reaches $448 Mn, set to surpass last year’s figures
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...

செளத் ஏசியன் கோப்பரேஷன் வலுவான தாக்கத்தை பெற்ற தினமான 5 மே 2017 அன்று வரலாற்றில் பதிவானது. அன்றைய தினம் தான், இந்தியா இரண்டு வருடங்களுக்கு முன்பு உறுதி செய்த அர்ப்பணிப்பை, செளத் ஏசியா சாட்டிலைட் வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.

செளத் ஏசியா சாட்டிலைட் உடன், செளத் ஏசியன் தேசங்கள் தங்கள் ஒத்துழைப்பை விண்வெளியிலும் நீட்டித்தன!

வரலாற்றின் உருவாக்கத்தை காண, இந்தியா, அஃப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூடான், மாலத்தீவு, நேபாள் மற்றும் ஸ்ரீ லங்கா நாடுகளை சேர்ந்த தலைவர்கள், வீடியோ கான்ஃபரன்ஸிங் வழியாக நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசும் போது, பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி செளத் ஆசியன் சாட்டிலைட் ஆற்றலின் முழு செயல்திறனை அடையமுடியும் என்றார்.

சாட்டிலைட் உடைய மேலான ஆளுமை, கிராமப்புறங்களில், திறனுள்ள தகவல் தொடர்பு, மேலான வங்கி சேவை மற்றும் கல்வியை வழங்குவதை உறுதி செய்யும். மேலான சிகிச்சைக்கு, துல்லியமான பருவ நிலை கணிப்பு மற்றும் மக்களை தொலைதூர மருத்துவத்துடன் இணைப்பது போன்றவற்றிற்கு உதவும்.

நாம் கைகளை இணைத்து, பரஸ்பரம் அறிவு, தொழில்நுட்பம் மற்றும் வளர்ச்சியை, பகிர்ந்து கொண்டால், நாம் மேம்பாடு மற்றும் செழிப்பை வேகமெடுக்க வைக்க முடியும்,’ என்று ஸ்ரீ மோடி குறிப்பிட்டார்