உலகில் முக்கிய உற்பத்தியாளர்களின் உற்பத்திகளை பார்வையிடுவதற்காக உலகெங்கிலும் இருந்து பலர் பங்கேற்கும், ஜெர்மனியில் நடக்கும் ஹேனோவர் மெசி உலகப்புகழ் பெற்ற தொழில் கண்காட்சியாகும். இக்கண்காட்சியில் பங்கெற்பாளராக 2015ல் இந்தியாவும் இணைந்து கொண்டது.
இந்தியப் பிரதமர் மோடி மற்றும் ஜெர்மனியின் முக்கிய அமைச்சரும் இணைந்து இக்கண்காட்சியை துவக்கி வைத்தனர். இந்தியாவின் மென் ஆற்றலும், வளமான சாத்தியக்கூறுகளும் கண்காட்சியில் முன்னிறுத்தப்பட்டது. ‘மேக் இன் இந்தியா’ அரங்கம் மிக சிறப்பான முறையில் அமைக்கப்பட்டதோடு, நம் இனப்பண்புகளையும், இந்தியா ஏன் முதலீடு செய்வதற்கு ஏற்ற நாடு என்பதையும் எடுத்துக்காட்டுவதாகவும் இருந்தது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் தங்கள் அரங்கங்களை அமைத்திருந்தார்கள். இந்த அரங்கங்கள் எல்லோரது பாராட்டுக்களையும் பெற்றது,
தனது உரையில் தனது முதல் ஆண்டு ஆட்சியிலேயே பாஜக தலைமையில் இயங்கும் தேசிய ஜனநாயக கூட்டணி ஹேனோவர் மெசி கண்காட்சியில் இந்தியா ஒரு பங்குதாரராக பங்கேற்பது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார். இந்தியாவில் தொழில் செய்வதை எளிமையாக்க தேஜகூ அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளையும், வரி செலுத்தும் முறைகளும், சூழலும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வண்ணம் மாற்றப்பட்டிருப்பதையும் பிரதமர் குறிப்பிட்டார்.
தனது இருதரப்பு பயணங்களின் போது, உலகத்தலைவர்கள் அனைவரும் மோடியிடம் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின்மீது தங்களுக்கு அபார நம்பிக்கை இருப்பதாக தெரிவித்தனர். இத்தலைவர்களில் மலேசிய பிரதமர் நஜிப் ரஜாக், சிங்கப்பூர் பிரதமர் லீ சியன், ஆஸ்திரேலிய பிரதமர் அபோட், ஜப்பானிய பிரதமர் அபே, ஃபிரான்ஸ் ஜனாதிபதி ஹாலண்ட், கனடா பிரதமர் ஹார்பர் ஆகியோர் அடக்கம்.
கடந்த ஒரு ஆண்டில் இந்தியாவைப் பற்றிய சூழலையே நேர்மறையாக மாற்றுவதற்காகவும், இந்தியாவில் உற்பத்தி செய்யவும், முதலீடு செய்யவும் பிரதமர் எடுக்கும் முயற்சிகள் நல்ல பலனை தந்துள்ளன. உலகத்தின் பார்வை இந்தியா மீதும், இங்குள்ள வாய்ப்புகளின் மீதும் பதிந்துள்ளது.