உலகில் முக்கிய உற்பத்தியாளர்களின் உற்பத்திகளை பார்வையிடுவதற்காக உலகெங்கிலும் இருந்து பலர் பங்கேற்கும், ஜெர்மனியில் நடக்கும் ஹேனோவர் மெசி உலகப்புகழ் பெற்ற தொழில் கண்காட்சியாகும்.  இக்கண்காட்சியில் பங்கெற்பாளராக 2015ல் இந்தியாவும் இணைந்து கொண்டது.


இந்தியப் பிரதமர் மோடி மற்றும் ஜெர்மனியின் முக்கிய அமைச்சரும் இணைந்து இக்கண்காட்சியை துவக்கி வைத்தனர்.  இந்தியாவின் மென் ஆற்றலும், வளமான சாத்தியக்கூறுகளும் கண்காட்சியில் முன்னிறுத்தப்பட்டது. ‘மேக் இன் இந்தியா’ அரங்கம் மிக சிறப்பான முறையில் அமைக்கப்பட்டதோடு, நம் இனப்பண்புகளையும், இந்தியா ஏன் முதலீடு செய்வதற்கு ஏற்ற நாடு என்பதையும் எடுத்துக்காட்டுவதாகவும் இருந்தது.  இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் தங்கள் அரங்கங்களை அமைத்திருந்தார்கள்.  இந்த அரங்கங்கள் எல்லோரது பாராட்டுக்களையும் பெற்றது,


தனது உரையில் தனது முதல் ஆண்டு ஆட்சியிலேயே பாஜக தலைமையில் இயங்கும் தேசிய ஜனநாயக கூட்டணி ஹேனோவர் மெசி கண்காட்சியில் இந்தியா ஒரு பங்குதாரராக பங்கேற்பது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார்.  இந்தியாவில் தொழில் செய்வதை எளிமையாக்க தேஜகூ அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளையும், வரி செலுத்தும் முறைகளும், சூழலும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வண்ணம் மாற்றப்பட்டிருப்பதையும் பிரதமர் குறிப்பிட்டார்.  

தனது இருதரப்பு பயணங்களின் போது, உலகத்தலைவர்கள் அனைவரும் மோடியிடம் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின்மீது தங்களுக்கு அபார நம்பிக்கை இருப்பதாக தெரிவித்தனர்.  இத்தலைவர்களில் மலேசிய பிரதமர் நஜிப் ரஜாக், சிங்கப்பூர் பிரதமர் லீ சியன், ஆஸ்திரேலிய பிரதமர் அபோட், ஜப்பானிய பிரதமர் அபே, ஃபிரான்ஸ் ஜனாதிபதி ஹாலண்ட், கனடா பிரதமர் ஹார்பர் ஆகியோர் அடக்கம்.  

கடந்த ஒரு ஆண்டில் இந்தியாவைப் பற்றிய சூழலையே நேர்மறையாக மாற்றுவதற்காகவும், இந்தியாவில் உற்பத்தி செய்யவும், முதலீடு செய்யவும் பிரதமர் எடுக்கும் முயற்சிகள் நல்ல பலனை தந்துள்ளன.  உலகத்தின் பார்வை இந்தியா மீதும், இங்குள்ள வாய்ப்புகளின் மீதும் பதிந்துள்ளது.  

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
India shipped record 4.5 million personal computers in Q3CY24: IDC

Media Coverage

India shipped record 4.5 million personal computers in Q3CY24: IDC
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...

செளத் ஏசியன் கோப்பரேஷன் வலுவான தாக்கத்தை பெற்ற தினமான 5 மே 2017 அன்று வரலாற்றில் பதிவானது. அன்றைய தினம் தான், இந்தியா இரண்டு வருடங்களுக்கு முன்பு உறுதி செய்த அர்ப்பணிப்பை, செளத் ஏசியா சாட்டிலைட் வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.

செளத் ஏசியா சாட்டிலைட் உடன், செளத் ஏசியன் தேசங்கள் தங்கள் ஒத்துழைப்பை விண்வெளியிலும் நீட்டித்தன!

வரலாற்றின் உருவாக்கத்தை காண, இந்தியா, அஃப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூடான், மாலத்தீவு, நேபாள் மற்றும் ஸ்ரீ லங்கா நாடுகளை சேர்ந்த தலைவர்கள், வீடியோ கான்ஃபரன்ஸிங் வழியாக நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசும் போது, பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி செளத் ஆசியன் சாட்டிலைட் ஆற்றலின் முழு செயல்திறனை அடையமுடியும் என்றார்.

சாட்டிலைட் உடைய மேலான ஆளுமை, கிராமப்புறங்களில், திறனுள்ள தகவல் தொடர்பு, மேலான வங்கி சேவை மற்றும் கல்வியை வழங்குவதை உறுதி செய்யும். மேலான சிகிச்சைக்கு, துல்லியமான பருவ நிலை கணிப்பு மற்றும் மக்களை தொலைதூர மருத்துவத்துடன் இணைப்பது போன்றவற்றிற்கு உதவும்.

நாம் கைகளை இணைத்து, பரஸ்பரம் அறிவு, தொழில்நுட்பம் மற்றும் வளர்ச்சியை, பகிர்ந்து கொண்டால், நாம் மேம்பாடு மற்றும் செழிப்பை வேகமெடுக்க வைக்க முடியும்,’ என்று ஸ்ரீ மோடி குறிப்பிட்டார்