வளர்ச்சியடைந்த பாரத லட்சியப் பயண பயனாளிகளுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப் பேரவை, உள்ளூர் அளவிலான பிரதிநிதிகளுடன் நாடு முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான வளர்ச்சியடைந்த பாரத லட்சியப் பயண பயனாளிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
சத்தீஸ்கரின் காங்கேரைச் சேர்ந்த விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த திருமதி பூமிகா பூராயா, பிரதமருடன் உரையாடியபோது, தனது கிராமத்தில் உள்ள 29 வன வருவாய் திட்டக் குழுக்களில் ஒன்றில் செயலாளராக பணியாற்றுவதாகவும், வனத்திலிருந்து செல்வம் திட்டம், இலவச சமையல் எரிவாயு இணைப்புகள், நீர்வளத் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட அட்டை, குடும்ப அட்டை, பிரதமரின் விவசாயிகள் வருவாய் ஆதரவு திட்டம் உள்ளிட்ட பல்வேறு அரசு திட்டங்களின் நன்மைகளைப் பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
திருமதி பூமிகா அனைத்து அரசுத் திட்டங்களின் பெயர்களையும் நினைவில் வைத்திருப்பதை அடுத்து பிரதமரின் கவனத்தை பெற்றார். மக்களுக்காக பணியாற்ற இது அரசு நடவடிக்கைகளை அதிக அளவில் வலுப்படுத்துகிறது என்று பிரதமர் கூறினார். சரியான நேரத்தில் ரேஷன் பொருட்கள் கிடைப்பது குறித்தும் பிரதமர் மோடி கேட்டறிந்தார். திருமதி பூமிகாவிடம் அரசுத் திட்டங்கள் பற்றிய தகவல்கள், அவரது குடும்பம் மற்றும் பெற்றோர் குறித்து கேட்டறிந்தார். தற்போது கல்லூரியில் படிக்கும் தனது தம்பி உட்பட இரு குழந்தைகளுக்கும் கல்வி வழங்குவதில் அவரது பெற்றோரின் பங்களிப்பை பாராட்டிய திரு மோடி, குழந்தைகளின் கல்வியில் கிராமத்தின் மற்ற குடியிருப்பாளர்கள் முதலீடு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மஹ்வா லட்டு மற்றும் நெல்லிக்காய் ஊறுகாய்களை உற்பத்தி செய்யும் தனது சுய உதவி வன வருவாய் திட்ட குழுமம் குறித்தும் அவர் பிரதமரிடம் தெரிவித்தார், அவை ஒரு கிலோ
ரூ.700-க்கு விற்கப்படுவதாக கூறினார். அனைத்து நன்மைகளும் பயனாளிகளுக்கு எந்த இடையூறும் இல்லாமல் கிடைத்துள்ளதாக திருப்தி தெரிவித்த பிரதமர் திரு மோடி, போதைக்கு பொதுவாக பயன்படுத்தப்படும் மஹ்வாவை சரியான முறையில் பயன்படுத்துவதில் அவரது முயற்சிகளையும் பாராட்டினார். "பழங்குடிப் பகுதிகளில் வாழும் குடிமக்களின் மேம்பாட்டிற்கு அரசு உறுதிபூண்டுள்ளது" என்று கூறிய பிரதமர், வன வருவாய் திட்ட குழுவினர் உருவாக்கிய நேர்மறையான முடிவுகளுக்கு திருமதி பூமிகாவை பாராட்டினார். பகவான் பிர்சா முண்டாவின் பிறந்த நாளில் தொடங்கப்பட்ட அதிகம் பாதிக்கப்படக் கூடிய பழங்குடியின மக்களுக்கான திட்டம் பற்றி அவர் தெரிவித்தார், இது பழங்குடி மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.