சந்திரயான்-3 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இந்திய விஞ்ஞானிகளின் இடையறாத அர்ப்பணிப்பைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
இஸ்ரோவின் ட்விட்டர் பதிவை பகிர்ந்து பிரதமர் கூறியிருப்பதாவது:
“இந்தியாவின் விண்வெளி சாகசத்தில் புதிய அத்தியாயத்தை சந்திரயான்-3 படைத்துள்ளது அது உயரப் பறந்து ஒவ்வொரு இந்தியரின் லட்சியங்களையும், கனவுகளையும் உயர்த்தியுள்ளது. இந்த மகத்தான சாதனை நமது விஞ்ஞானிகளின் இடையறாத அர்ப்பணிப்புக்கு சான்றாகும். அவர்களது உணர்வுக்கும், மதிநுட்பத்துக்கும் நான் தலைவணங்குகிறேன்”.
Chandrayaan-3 scripts a new chapter in India's space odyssey. It soars high, elevating the dreams and ambitions of every Indian. This momentous achievement is a testament to our scientists' relentless dedication. I salute their spirit and ingenuity! https://t.co/gko6fnOUaK
— Narendra Modi (@narendramodi) July 14, 2023