சிங்கப்பூரின் மூத்த அமைச்சரும் சமூகக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு.தர்மன் சண்முகரத்னம் இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.
திரு.சண்முகரத்னத்தை இந்தியாவுக்கு வரவேற்ற பிரதமர் அவருக்குத் தமது இனிய புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு அவர் மூலம் சிங்கப்பூர் பிரதமர் திரு. லீ சியன் லூங்கிற்கும் வாழ்த்து தெரிவித்தார்.
இருதரப்பு உறவுகள் துரிதமாக வளர்ந்து வருவது குறித்து பிரதமரும், திரு.சண்முகரத்னமும் திருப்தி தெரிவித்தனர். அடிப்படைக் கட்டமைப்பு, திறன் மேம்பாடு, இந்தியா – சிங்கப்பூர் ஒருங்கிணைந்த பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் (சிஇசிஏ), டிஜிட்டல் பொருளாதாரம் உள்ளிட்ட பரஸ்பர நலன்சார்ந்த பொருளாதார ஒத்துழைப்பு குறித்த பல விஷயங்களை அவர்கள் விவாதித்தனர்.
அடிப்படைக் கட்டமைப்பு, சுற்றுலா, டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறைகள், புதிய கண்டுபிடிப்பு, நிர்வாகம் ஆகிய துறைகளில் இந்தியா – சிங்கப்பூர் இடையே கூடுதலாக ஒத்துழைப்பை வலுப்படுத்தும் தமது விருப்பத்தையும் பிரதமர் வெளிப்படுத்தினார்.