அமெரிக்க அமைச்சர் திரு. மைக்கேல் பாம்பியோ மற்றும் அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜேம்ஸ் மாட்டிஸ் பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று புதுதில்லியில் சந்தித்து பேசினர்.
அவர்கள், அதிபர் டிரம்ப்பின் வாழ்த்துகளை பிரதமர் மோடியிடம் பகிர்ந்துக் கொண்டனர். அதிபர் டிரம்ப்புடனான தனது கலந்துரையாடல்களை நினைவுக் கூர்ந்த பிரதமர், அவருடைய வாழ்த்துகளை அதிபரிடம் கூறுமாறு அமைச்சர்களிடம் கேட்டுக் கொண்டார்.
இன்று சிறப்பாக நடைபெற்ற 2 பிளஸ் 2 பேச்சுவார்த்தை குறித்து பிரதமரிடம் அமெரிக்க அமைச்சர்கள் விவரித்தனர். முதன் முறையாக இரு நாடுகளுக்கு இடையே 2 பிளஸ் 2 பேச்சுவார்த்தையை ஏற்பாடு செய்ததை முன்னிட்டு அமெரிக்க அமைச்சர்களுக்கும். இந்திய வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சருக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்துக் கொண்டார்.