வெளிநாடுவாழ் இந்தியர் தினத்தை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள “செலவு குறைவான சூரிய சக்திக்கான திறன் வளர்ச்சியில் இந்தியாவின் பங்கு” என்பது குறித்த நிபுணர்கள் குழுவினர் பிரதமர் திரு.நரேந்திர மோடியை இன்று (24.08.2018) சந்தித்தனர்.
இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள பிரபல நிபுணர்கள், கல்வியாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள், தொழிலதிபர்கள், தொழில் முனைவோர் உள்ளிட்டோர் இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளனர். சூரிய சக்தியின் பயன் அளவு, மின் தொகுப்புக்கு அப்பாலும், நுண் தொகுப்பிலுமான தீர்வுகள் சூரிய சக்தி சேமிப்பு, அடுத்த தலைமுறைக்கான சூரிய சக்தி தொழில்நுட்பங்கள், புதுப்பிக்கவல்ல எரிசக்தித் துறைக்கான புதிய கண்டுபிடிப்பிற்கு நிதி தேவைகள் போன்ற பிரிவுகளில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற விவாதங்களின் முடிவுகளை அவர்கள் எடுத்துரைத்தனர்.
நடைமுறை சாத்தியமான பரிந்துரைகளை வரவேற்ற பிரதமர், இந்த நிபுணர்களின் கருத்துக்களை முன்னெடுத்துச் செல்லுமாறும், கொள்கை உருவாக்கத்தில் பொருத்தமான முடிவுகளை இணைத்துக் கொள்ளுமாறும் வெளியுறவு அமைச்சகம் மற்றும் புதிய, புதுப்பிக்கவல்ல எரிசக்தி அமைச்சகத்திற்கு உத்தரவிட்டார்.