பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், தில்லி மெட்ரோவின் நான்காம் கட்டத் திட்டத்தின் இரண்டு புதிய வழித்தடங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இவை தேசியத் தலைநகரில் மெட்ரோ இணைப்பை மேலும் மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டு வழித்தடங்கள்;
1) இந்தர்லோக் - இந்திரபிரஸ்தா 12.377 கி.மீ
2) லஜ்பத் நகர் - சாகேத் ஜி பிளாக் 8.385 கி.மீ
திட்ட செலவு, நிதி:
தில்லி மெட்ரோவின் நான்காம் கட்டத் திட்டத்தின் இந்த இரண்டு வழித்தடங்களின் மொத்த திட்ட மதிப்பு ரூ.8,399 கோடியாகும். இதற்கான நிதியை மத்திய அரசு, தில்லி அரசு மற்றும் சர்வதேச நிதி முகமைகள் அளிக்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2014128