பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ரூ.2817 கோடி மதிப்பிலான டிஜிட்டல் வேளாண் இயக்கத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
டிஜிட்டல் வேளாண் இயக்கம் விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும். இந்த இயக்கத்திற்கு மொத்தம் ரூ.2,817 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசின் பங்கு 1940 கோடியாகும். இந்த இயக்கத்தில் கீழ்க்கண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மண் பரப்பு
டிஜிட்டல் பயிர் மதிப்பீடு
டிஜிட்டல் மகசூல் மாடலிங்
பயிர் கடனுக்கான இணைப்பு
செயற்கை நுண்ணறிவு மற்றும் பெருந்தரவு போன்ற நவீன தொழில்நுட்பங்கள்
வாங்குபவர்களுடன் இணைப்பு
மொபைல் போன்களில் புதிய அறிவைக் கொண்டு வருதல் ஆகியவை இதில் அடங்கும்.