பொதுத்தரவு அலுவலகங்களின் மூலம் பொது வை–ஃபை வலைப் பின்னல்களை அமைப்பதற்கான தொலைத்தொடர்புத் துறையின் திட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் மூலம், எந்தவித உரிமக் கட்டணமும் இல்லாமல் பொது இடங்களில் அகண்ட அலைவரிசை வை–ஃபை வசதிகளை நாடு முழுவதும் உள்ள பொதுத்தரவு அலுவலகங்களின் வாயிலாக வழங்க முடியும்.
நாட்டில் பொது வை–ஃபை வலைப் பின்னல்களின் வளர்ச்சியை இத்திட்டம் ஊக்கப்படுத்தும். இதனால் அகண்ட அலைவரிசை இணைய வசதியின் வீச்சு அதிகமாகி, வருமானமும், வேலைவாய்ப்புகளும் பெருகி மக்களுக்கு நன்மைகள் கிடைக்கும்.
PM-WANI.PM-WANI என்று அழைக்கப்படும் இந்த பொது வை–ஃபை வலைப் பின்னல்கள், பல்வேறு அமைப்புகளால் செயல்படுத்தப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்