அதிக திறன் வாய்ந்த சூரிய மின் தகடுகளின் ஜிகா வாட் அளவிலான உற்பத்தி திறனை அடைவதற்கான தேசிய அதிக திறன் கொண்ட சூரிய மின்தகடுகள் திட்டத்தில் ரூ 19,500 கோடி செலவிலான உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்புத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையின் பரிந்துரைக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் மூலம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் இறக்குமதியை சார்ந்து இருப்பது குறையும். தற்சார்பு இந்தியா இயக்கத்தின் முன்னெடுப்புகளை வலுப்படுத்தி, வேலைவாய்ப்பை உருவாக்கும்.
சூரிய மின் தகடுகள் உற்பத்தியாளர்கள் வெளிப்படையான முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். உள்நாட்டு சந்தையிலிருந்து அதிக திறன் வாய்ந்த சூரிய மின் தகடுகள் விற்பனைக்காக சூரிய மின்தகடுகள் உற்பத்தி ஆலைகள் தொடங்கப்பட்ட பிறகு, 5 ஆண்டுகளுக்கு உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்பு திட்டம் அளிக்கப்படும்.
இந்த திட்டத்தின் மூலம் ரூபாய் 94 ஆயிரம் கோடி அளவிற்கு நேரடி முதலீடு கிடைக்கும். 1,95,000 பேருக்கு நேரடியாகவும், 7,80,000 பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.