பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் 2023-24 நிதியாண்டு முதல் 2026-27 நிதியாண்டு வரையிலான அடுத்த நான்கு ஆண்டுகளில் மீன்வளத் துறையை முறைப்படுத்துவதற்கும், மீன்வளக் குறு மற்றும் சிறு நிறுவனங்களுக்கு ஆதரவளிப்பதற்கும் பிரதமரின் மத்ஸ்ய சம்படா திட்டத்தின் கீழ் மத்திய அரசின் துணைத் திட்டமான "பிரதமரின் மத்ஸ்ய கிசான் சம்ரிதி சா" திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
செலவினம்:
இந்தத் துணைத் திட்டம், மத்திய துறை துணைத் திட்டமாக, 6,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். இதில் 50 சதவீதம், அதாவது 3,000 கோடி ரூபாய் உலக வங்கி மற்றும் ஏ.எஃப்.டி நிதி உட்பட பொது நிதி, மீதமுள்ள 50 சதவீதம், அதாவது 3,000 கோடி ரூபாய் பயனாளிகள் / தனியார் துறையிடமிருந்து எதிர்பார்க்கப்படும் முதலீடாக இருக்கும். இது அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2023-24 நிதியாண்டு முதல் 2026-27 நிதியாண்டு வரை 4 (நான்கு) ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படும்.
பயனாளிகள்:
மீனவர்கள், மீன் (நீர்வாழ் உயிரின வளர்ப்பு) விவசாயிகள், மீன்பிடி தொழிலாளர்கள், மீன் விற்பனையாளர்கள் அல்லது மீன்பிடிப் பெருந்தொடரில் நேரடியாக ஈடுபட்டுள்ள நபர்கள்.
இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட தனியுரிமை நிறுவனங்கள், கூட்டாண்மை நிறுவனங்கள், சங்கங்கள், வரையறுக்கப்பட்ட பொறுப்புக் கூட்டாண்மை (எல்.எல்.பி), கூட்டுறவுகள், கூட்டமைப்புகள், சுய உதவிக் குழுக்கள், மீன் உற்பத்தியாளர் அமைப்புகள் (எஃப்.எஃப்.பி.ஓ), மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்பு மதிப்புத் தொடர்களில் ஈடுபட்டுள்ள புத்தொழில் நிறுவனங்கள் போன்ற கிராம அளவிலான அமைப்புகள்.
வேலைவாய்ப்பை உருவாக்கும் திறன் உட்பட முக்கிய தாக்கம்:
40 லட்சம் சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களுக்கு வேலை அடிப்படையிலான அடையாளங்களை வழங்க தேசிய மீன்வள டிஜிட்டல் தளத்தை உருவாக்குதல்.
மீன்வளத் துறையை படிப்படியாக முறைப்படுத்துதல் மற்றும் நிறுவனக் கடன்கள் பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரித்தல். இந்த முன்முயற்சியால் 6.4 லட்சம் குறுந்தொழில் நிறுவனங்களுக்கும், 5,500 மீன்வள கூட்டுறவு அமைப்புகளுக்கும் நிறுவனக் கடன் கிடைக்க உதவும்.
இந்தத் திட்டம் மதிப்புத் தொடர் செயல்திறனை மேம்படுத்தி 55,000 குறு மற்றும் சிறு நிறுவனங்களுக்கு ஆதரவளிப்பதன் மூலம் பாதுகாப்பான, தரமான மீன்களை உறுதி செய்வதில் கவனம் செலுத்துகிறது,
சுற்றுச்சூழல் மற்றும் நிலைத்தன்மை முயற்சிகளை ஊக்குவித்தல்
வணிகம் செய்வதை எளிதாக்குதல் மற்றும் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்துதல்.
உள்நாட்டுச் சந்தையில் மீன் மற்றும் மீன் உற்பத்திகளின் தரத்தை மேம்படுத்துதல்
உள்நாட்டுச் சந்தைகளை வலுப்படுத்துதல்
வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் வியாபார வாய்ப்புகளை உருவாக்குதல்
வேலைகள் மற்றும் பாதுகாப்பான பணியிடத்தை உருவாக்குவதன் மூலம் பெண்களுக்கு அதிகாரமளித்தல்
1.7 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், 75,000 மகளிருக்கு வேலைவாய்ப்பு அளிக்கவும், குறு மற்றும் சிறு தொழில் மதிப்புத் தொடரில் தொடர்ந்து 5.4 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.