பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், பழங்குடியினர் பெரும்பான்மையாக வசிக்கும் கிராமங்கள் மற்றும் முன்னேற விரும்பும் மாவட்டங்களில் உள்ள பழங்குடியின குடும்பங்களுக்கு, முழுமையான பாதுகாப்பைப் பின்பற்றுவதன் மூலம், பழங்குடியின சமூகங்களின் சமூக-பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, 79,156 கோடி ரூபாய் மொத்த ஒதுக்கீட்டில் (மத்திய அரசு: 56,333 கோடி மற்றும் மாநில அரசு: 22,823 கோடி ரூபாய்) பிரதமரின் பழங்குடியினர் முன்மாதிரி கிராமத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

 

இது 2024-25 பட்ஜெட் உரையில் அறிவிக்கப்பட்டபடி 5 கோடிக்கும் அதிகமான பழங்குடி மக்களுக்கு பயனளிக்கும் சுமார் 63,000 கிராமங்களை உள்ளடக்கும். இது 30 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் உள்ள 549 மாவட்டங்கள் மற்றும் 2,740 வட்டாரங்களை உள்ளடக்கும்.

 

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் பழங்குடியின மக்கள் தொகை 10.45 கோடியாக உள்ளது. மேலும் 705-க்கும் மேற்பட்ட பழங்குடி சமூகங்கள் நாடு முழுவதும் பரவியுள்ளன, தொலைதூர மற்றும் அடைய கடினமான பகுதிகளில் வாழ்கின்றன. பிரதமரின் பழங்குடியினர் முன்மாதிரி கிராமத் திட்டமானது, மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் மூலம், சமூக உள்கட்டமைப்பு, சுகாதாரம், கல்வி, வாழ்வாதாரம் ஆகியவற்றில் உள்ள முக்கியமான இடைவெளிகளை ஒருங்கிணைத்தும், சென்றடைவதன் மூலமும், பழங்குடியினர் பகுதிகள் மற்றும் சமுதாயங்கள் சார்ந்த முழுமையான மற்றும் நீடித்த வளர்ச்சியை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது PMJANMAN (பிரதான் மந்திரி ஜன்ஜதி ஆதிவாசி நியாய மகா அபியான்)-ன் கற்றல் மற்றும் வெற்றி.

 

இந்த இயக்கம் 25 தலையீடுகளை உள்ளடக்கியது , அவை 17-வரிசை அமைச்சகங்களால் செயல்படுத்தப்படும். ஒவ்வொரு அமைச்சகமும் / துறையும் இது தொடர்பான திட்டங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் செயல்படுத்துவதற்கு பொறுப்பேற்கும். அடுத்த 5 ஆண்டுகளில் பழங்குடியினருக்கான மேம்பாட்டு செயல் திட்டத்தின் கீழ் (DAPST) அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதிகள் மூலம் பின்வரும் இலக்குகளை அடைய வேண்டும்:

 

இலக்கு-1: செயல்படுத்தும் உள்கட்டமைப்பை உருவாக்குதல்:

  1. பிற உரிமைகளுடன் தகுதியான குடும்பங்களுக்கு பாதுகாப்பான வீடுதகுதியான எஸ்டி குடும்பங்கள் PMAY (கிராமின்)-ன் கீழ் குழாய் வழி நீர் (ஜல் ஜீவன் மிஷன்) மற்றும் மின்சாரம் (RDSS) கிடைப்பதன் மூலம், பாதுகாக்கப்பட்ட வீடுகளுக்கான அணுகலைப் பெறுவார்கள். தகுதியுள்ள எஸ்டி குடும்பத்திற்கு ஆயுஷ்மான் பாரத் அட்டையும் (பி.எம்.ஜே.ஏ.ஒய்) அணுகல் இருக்கும்.
  2.  
  1. கிராமங்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்துதல்: பழங்குடியினர் பெரும்பான்மையாக வாழும் கிராமங்களுக்கு அனைத்து பருவ காலங்களுக்கும் ஏற்ற சாலை இணைப்புகளை உறுதி செய்தல், கைபேசி இணைப்பு (பாரத் நெட்) மற்றும் இணையதள வசதி, சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் கல்வியை (தேசிய சுகாதார இயக்கம், அனைவருக்கும் கல்வி மற்றும் ஊட்டச்சத்து இயக்கம்) மேம்படுத்துவதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை வழங்குதல்.

இலக்கு-2: பொருளாதார அதிகாரமளித்தலை ஊக்குவித்தல்:

(iii) திறன் மேம்பாடுதொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் மேம்பட்ட வாழ்வாதாரம் (சுய வேலைவாய்ப்பு- பயிற்சிக்கான அணுகலை வழங்குதல் (திறன் இந்தியா இயக்கம் / JSS) மற்றும் ஒவ்வொரு ஆண்டும் 10 / 12 ஆம் வகுப்புகளுக்குப் பிறகு எஸ்டி சிறுவர் / சிறுமியர் நீண்ட கால திறன் படிப்புகளுக்கான அணுகலை உறுதி செய்தல். மேலும், பழங்குடியினர் பல்நோக்கு சந்தை மையங்கள், சுற்றுலா இல்லங்கள் மற்றும் விவசாயம், கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வள உதவி பட்டா பெற்றவர்களுக்கு சந்தை உதவி

இலக்கு-3: நல்ல கல்விக்கான அணுகலை உலகமயமாக்குதல்:

(iv) கல்வி - பள்ளி மற்றும் உயர்கல்வியில் GER-ஐ தேசிய அளவில் உயர்த்துதல் மற்றும் தரமான கல்வியை மலிவான மற்றும் பழங்குடி மாணவர்களுக்கு அணுகக்கூடியதாக மாற்றுதல் (அனைவருக்கும் கல்வி இயக்கம்) பள்ளிகளில் மாவட்ட / வட்டார அளவில் பழங்குடியினர் விடுதிகளை அமைத்தல்.

இலக்கு-4: ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் கண்ணியமான முதுமை:

  1. சுகாதாரம் – பழங்குடியின குடும்பங்களுக்கு தரமான சுகாதார வசதிகள் எளிதில் கிடைப்பதை உறுதி செய்தல், சிசு இறப்பு விகிதம், பேறுகால தாய்மார்களின் இறப்பு விகிதம் மற்றும் சமவெளிப் பகுதிகளில் 10 கி.மீ. தொலைவிலும், மலைப்பகுதிகளில் 5 கி.மீ. தொலைவிலும் துணை மையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலம் தடுப்பூசி போடுதல் (தேசிய சுகாதார குழுமம்).

 

  • திட்டத்தின் கீழ் உள்ள பழங்குடி கிராமங்கள், பிரதமர் கதி சக்தி இணையதளத்தில், அதன் திட்ட குறிப்பிட்ட தேவைகளுக்காக சம்பந்தப்பட்ட துறையால் அடையாளம் காணப்பட்ட இடைவெளிகளுடன் வரைபடமாக்கப்படும் . பௌதீக மற்றும் நிதி முன்னேற்றம் கண்காணிக்கப்பட்டு, சிறப்பாக செயல்படும் மாவட்டங்களுக்கு விருது வழங்கப்படும்.

 

#100பழங்குடியினர் பல்நோக்கு சந்தைப்படுத்தல் மையங்கள், ஆசிரமப் பள்ளிகள், விடுதிகள், அரசு/மாநில பழங்குடியினர் உறைவிடப் பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், அரிவாள் செல் நோய்க்கான திறன் மையம் (SCD) மற்றும் ஆலோசனை ஆதரவு, FRA & CFR மேலாண்மை தலையீடுகளுக்கான ஆதரவு, FRA செல்களை அமைத்தல் மற்றும் சிறந்த செயல்திறன் கொண்ட பழங்குடி மாவட்டங்களுக்கு ஊக்கத்தொகையுடன் திட்ட மேலாண்மை நிதி.

பழங்குடியினர் பகுதிகளின் குறிப்பிட்ட தேவைகள் மற்றும் தேவைகளின் அடிப்படையிலும், மாநிலங்கள் மற்றும் இதர பங்களிப்பாளர்களுடன் கலந்தாலோசித்த பிறகும், பழங்குடியினர் மற்றும் வனங்களில் வசிக்கும் சமுதாயத்தினரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், வருவாயை பெருக்கவும் இந்த இயக்கம் சில புதுமையான திட்டங்களை வகுத்துள்ளது. 

பழங்குடியினர் இல்லத்தில் தங்குதல்:  பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் உள்ள சுற்றுலா வளங்களை முழுமையாக்கும் வகையிலும், பழங்குடியினருக்கு மாற்று வாழ்வாதாரத்தை வழங்கவும், சுற்றுலா அமைச்சகம் மூலம், ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ் 1000 பேர் வீட்டில் தங்கும் வசதி செய்து தரப்படும்.  சுற்றுலா வசதி உள்ள பழங்குடியின கிராமங்களில், ஒரு கிராமத்தில் 5-10 ஹோம்ஸ்டேக்கள் கட்டுவதற்கு நிதி வழங்கப்படும்.  ஒவ்வொரு குடும்பமும் இரண்டு புதிய அறைகள் கட்ட ரூ.5.00 இலட்சம் பெறத் தகுதியுடையவர்கள். தற்போதுள்ள அறைகளை புதுப்பிக்க ரூ.3.00 லட்சம் வரையிலும், கிராம சமுதாய தேவைகளுக்கு ரூ.5 லட்சம் வரையிலும் வழங்கப்படும்.

நிலையான வாழ்வாதார வன உரிமை வைத்திருப்பவர்கள் (FRA):  வனப்பகுதிகளில் வசிக்கும் 22 இலட்சம் வன உரிமை பட்டாதாரர்கள் மீது இந்த இயக்கம் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகம்,  வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம், கால்நடை பராமரிப்புத் துறை, மீன்வளத் துறை மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து பல்வேறு திட்டங்களின் பயன்கள் ஒருங்கிணைக்கப்பட்டு வழங்கப்படும். வன உரிமைகளை அங்கீகரித்தல் மற்றும் பாதுகாத்தல், பழங்குடியின சமூகங்களுக்கு அதிகாரம் அளித்தல் மற்றும் வனங்களை பராமரித்தல் மற்றும் அரசின் திட்டங்களின் மூலம் அவர்களுக்கு நிலையான வாழ்வாதாரத்தை வழங்குதல் ஆகியவற்றை விரைவுபடுத்துவதை, இந்த தலையீடுகள் நோக்கமாகக் கொண்டுள்ளன. நிலுவையில் உள்ள வன உரிமை கோரல்கள் விரைவுபடுத்தப்படுவதை ஊக்குவிக்கவும், பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகம் மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் மூலம் வட்டார, மாவட்ட மற்றும் மாநில அளவில், அனைத்து பங்குதாரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் பயிற்சி அளிக்கப்படும்.

அரசு உண்டு உறைவிடப் பள்ளிகள் மற்றும் விடுதிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல்:  பழங்குடியினர் உறைவிடப் பள்ளிகள் மற்றும் விடுதிகள் தொலைதூர பழங்குடியினர் பகுதிகளை இலக்காகக் கொண்டுள்ளதுடன் உள்ளூர் கல்வி வளங்களை மேம்படுத்துவதையும், சேர்க்கை மற்றும் தக்கவைப்பதை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன. பிரதமர்-ஸ்ரீ பள்ளிகளைப் போல மேம்படுத்துவதற்காக, ஆசிரமப் பள்ளிகள் / விடுதிகள் / பழங்குடியினர் பள்ளிகள் / அரசு உறைவிடப் பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது .

அரிவாள் செல் நோயை கண்டறிவதற்கான நவீன வசதிகள்:   மகப்பேறுக்கு முந்தைய நோயறிதலுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளித்து, மலிவான மற்றும் எளிதில் அணுகக்கூடிய நோய் கண்டறிதல் மற்றும் மேலாண்மை வசதிகளை வழங்குதல் மற்றும் எதிர்கால பிறப்புகளைத் தடுப்பதன் மூலம், நோயின் தாக்கத்தை குறைக்க, திறன் மையம் (CoC) எய்ம்ஸ் மற்றும் அரிவாள் செல் நோய் அதிகமாக உள்ள மாநிலங்களில் உள்ள முன்னணி நிறுவனங்களிலும், இந்த நடைமுறைகளை செயல்படுத்துவதற்கான நிபுணத்துவம் உள்ள மாநிலங்களிலும் அமைக்கப்படும்.    சுகாதார அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களின்படி, மகப்பேறுக்கு முந்தைய நோயறிதலுக்கான வசதிகள், தொழில்நுட்பம், பணியாளர்கள் மற்றும் ஆராய்ச்சி திறன்களைக் கொண்ட திறன் மையம் (CoC) இருக்கும், மேலும் சமீபத்திய வசதிகளைக் கொண்டிருக்கும். மகப்பேறுக்கு முந்தைய நோயறிதலுக்கான தொழில்நுட்பம், பணியாளர்கள் மற்றும் ஆராய்ச்சி திறன்கள், ஒரு சிஓசிக்கு ரூ .6 கோடி செலவாகும்.

பழங்குடியினர் பல்நோக்கு சந்தைப்படுத்தல் மையம்:  பழங்குடியின உற்பத்திப் பொருட்களை திறம்பட சந்தைப்படுத்தவும், சந்தைப்படுத்தல் உள்கட்டமைப்பு, விழிப்புணர்வு, வணிக முத்திரையிடுதல், சிப்பமிடுதல் மற்றும் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தவும், பழங்குடியின உற்பத்தியாளர்கள் தங்கள் உற்பத்திப் பொருட்களுக்கு சரியான விலை பெறவும், பழங்குடியினரிடமிருந்து பழங்குடியினர் விளைபொருட்கள் / பொருட்களை சரியான விலையில் நுகர்வோர் வாங்கவும் 100 பழங்குடியினர் பல்நோக்கு சந்தைப்படுத்தல் மையங்கள் அமைக்கப்படும். மேலும், இந்த மையத்தை ஒரு ஒருங்கிணைப்பு மற்றும் மதிப்பு கூட்டல் தளமாக வடிவமைப்பது, அறுவடைக்கு பிந்தைய உற்பத்தி இழப்புகளைக் குறைக்கவும், தயாரிப்பு மதிப்பைத் தக்கவைக்கவும் உதவும்.

பிரதமரின் பழங்குடியினர் ஆதிவாசி நியாய மகா திட்டம் (PM-JANMAN) ன் கற்றல் மற்றும் வெற்றியின் அடிப்படையில் இது திட்டமிடப்பட்டுள்ளது, இது எளிதில் பாதிப்புக்கு ஆளாகக் கூடிய பழங்குடி மக்களை மையமாகக் கொண்டு ரூ .24104 கோடி பட்ஜெட்டில் 15 நவம்பர், 2023 அன்று ஜன்ஜாதியா கௌரவ் திவாஸ் பிரதமரால் தொடங்கப்பட்டது.

பிரதமரின் பழங்குடியினர் முன்மாதிரி கிராமம்,  கூட்டுறவு கூட்டாட்சி, மக்களின் நலனுக்கான அரசின் அணுகுமுறை, ஒருமித்த மற்றும் சென்றடைதல் ஆகியவற்றின் மூலம் ஒரு தனித்துவமான எடுத்துக்காட்டு.  

 

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Ayushman driving big gains in cancer treatment: Lancet

Media Coverage

Ayushman driving big gains in cancer treatment: Lancet
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Governor of Tamil Nadu meets Prime Minister
December 24, 2024

Governor of Tamil Nadu, Shri R. N. Ravi, met Prime Minister, Shri Narendra Modi today in New Delhi.

The Prime Minister's Office posted on X:

"Governor of Tamil Nadu, Shri R. N. Ravi, met PM @narendramodi.”