2022-23 ரபி பருவத்தில் (அக்டோபர் 1, 2022 முதல் மார்ச் 31, 2023 ஆம் ஆண்டு வரை) பாஸ்பேட் மற்றும் பொட்டாசியம் உரங்களுக்கு நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாஷ் மற்றும் சல்ஃபர் போன்ற ஊட்டச்சத்துகளை கிலோ கிராமுக்கு மானிய விலையில் வழங்க வேண்டும் என்ற உரத்துறையின் பரிந்துரைக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி நைட்ரஜனுக்கு ரூ.98.02-வும், பாஸ்பரசுக்கு ரூ.66.93-வும், பொட்டாஷூக்கு ரூ.23.65வும். சல்ஃபருக்கு ரூ.6.12-வும் கிலோவுக்கு மானியமாக வழங்கப்படும்.
இதன் மூலம் இக்காலக்கட்டத்தில் மொத்தம் ரூ.51,875 கோடி அளவிற்கு மானியம் அளிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.