பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், பாஸ்பேட், பொட்டாசியம் உரங்களுக்கு 2024-ம் ஆண்டு ரபி பருவத்தில் (01.10.2024 முதல் 31.03.2025 வரை) ஊட்டச்சத்து அடிப்படையிலான மானிய விகிதங்களை நிர்ணயிப்பதற்கான ரசாயனம் - உரத் துறை அமைச்சகத்தின் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
2024 ஆம் ஆண்டு ரபி பருவத்திற்கான உத்தேச நிதித் தேவை தோராயமாக ரூ.24,475.53 கோடியாக இருக்கும்.
நன்மைகள்:
விவசாயிகளுக்கு மானிய விலையில், கட்டுப்படியாகும், நியாயமான விலையில் உரங்கள் கிடைப்பது உறுதி செய்யப்படும்.
சர்வதேச உரங்கள், இடுபொருட்களின் விலையில் ஏற்பட்டுள்ள நிலையைக் கருத்தில் கொண்டு பி அண்ட் கே எனப்படும் பாஸ்பேட், பொட்டாசியம் உரங்களுக்கான மானியம் சீரமைக்கப்படும்.
செயல்படுத்தல் உத்தி, இலக்குகள்:
பி அண்ட் கே உரங்களுக்கான மானியம் இந்த ரபி பருவத்துக்கு அங்கீகரிக்கப்பட்ட விகிதங்களின் அடிப்படையில் வழங்கப்படும். இது இந்த உரங்கள் விவசாயிகளுக்கு மலிவு விலையில் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யும்.
हमारे किसान भाई-बहनों को निरंतर सस्ती दरों पर खाद की आपूर्ति जारी रहे, इसके लिए हमने 2024 के रबी सीजन के लिए पोषक तत्व आधारित सब्सिडी की दरों को स्वीकृति प्रदान की है। इस कदम से देशभर के अन्नदाताओं की खेती की लागत भी कम होगी।https://t.co/NRwHn2p68d
— Narendra Modi (@narendramodi) September 18, 2024