பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, 2020, மார்ச் வரை ரூ.3000 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் வட-கிழக்கு தொழில் வளர்ச்சித் திட்டம் (என்.இ.ஐ.டீ.எஸ்.) 2017-ற்கு ஒப்புதல் அளித்தது. 2020, மார்ச்-ற்கு முன்பு மதிப்பீடு செய்யப்பட்ட பின்பாக, எஞ்சிய திட்டகாலத்திற்கு தேவைப்படும் நிதியை அரசு அளிக்கும். முன்பு இருந்த இரு திட்டங்களின் கீழான ஊக்கத்தொகைகளை இணைத்து அதிக நிதி ஒதுக்கீடுடன் என்.இ.ஐ.டீ.எஸ். விளங்கும்.

விபரங்கள்:

      வட கிழக்கு மாநிலங்களில் வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில், அரசு இத்திட்டத்தின் மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழிற்சாலை பிரிவிற்கு முதன்மையாக ஊக்கத்தொகையை அளிக்கும். மேலும், இத்திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் அரசு குறிப்பிட்ட ஊக்கத்தொகையை வழங்கும்.

இந்திய அரசின் பிற திட்டங்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கூறுகளினால் பயனடைந்த அனைத்து தகுதியான தொழிற்சாலைகளும், இத்திட்டத்தின் கீழான பிற கூறுகளின் பயன்களை பெற்றிடவும் பரிசீலிக்கப்படும்.

      இத்திட்டத்தின் கீழ், சிக்கிம் உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களில் புதிய தொழிற்சாலைகளை அமைப்பதற்கு கீழ்க்கண்டவாறு ஊக்கத்தொகைகள் அளிக்கப்படும் :

கடன் பெற அணுகுவதற்கான மத்திய மூலதன முதலீடு ஊக்கத்தொகை (சி.சி.ஐ.ஐ.ஏ.சி.)

அலகு ஒன்றிற்கு, அதிகபட்சமாக ரூ.5 கோடி என்ற அளவில் தளவாடம் & இயந்திர மூலதனத்தின் 30 சதவீதம்.

மத்திய வட்டி ஊக்கத் தொகை (சி.ஐ.ஐ.)

அலகு வர்த்தக உற்பத்தி துவங்கிய தேதி முதல் 5 ஆண்டுகளுக்கு, தகுதி வாய்ந்த வங்கிகள்/நிதி நிறுவனங்களால் வழங்கப்பட்ட செயல் மூலதன கடனில் 3 சதவீதம்

மத்திய விரிவான காப்பீடு ஊக்கத் தொகை (சி.சி.ஐ.ஐ.)

அலகு வர்த்தக உற்பத்தி துவங்கிய தேதி முதல் 5 ஆண்டுகளுக்கு, கட்டடம், தளவாடம் & இயந்திர காப்பீட்டிற்கான  காப்பீடுத் தொகையை 100% திரும்ப பெறுதல்.

சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) திரும்ப பெறுதல்

அலகு வர்த்தக உற்பத்தி துவங்கிய தேதி முதல் 5 ஆண்டுகளுக்கு, சி.ஜி.எஸ்.டி. மற்றும் ஐ.ஜி.எஸ்.டி.யின் மத்திய அரசின் பங்கு வரை திரும்ப பெறுதல்

வருமான வரி (ஐ.டி.) திரும்ப பெறுதல்

அலகு வர்த்தக உற்பத்தி துவங்கிய தேதி முதல் 5 ஆண்டுகளுக்கு, வருமான வரியில் மத்திய அரசின் பங்கை திரும்ப பெறுதல்.

போக்குவரத்து ஊக்கத் தொகை (டி.ஐ.)

ரயில் மூலம் முடிவுற்ற பொருட்களை அனுப்புவதற்கு ரயில்வே/ரயில்வே பொது நிறுவனம் அளிக்கும் மானியம் உட்பட போக்குவரத்து கட்டணத்தில் 20%.

இந்திய உள்நாட்டு நீர்வழி போக்குவரத்து முகமை மூலம் முடிவுற்ற பொருட்களை அனுப்புவதற்கான போக்குவரத்து கட்டணத்தில் 20%.

உற்பத்தி செய்யப்படும் இடத்தின் அருகில் உள்ள விமான நிலையத்திலிருந்து நாட்டில் உள்ள எந்த விமான நிலையத்திற்கும் அழுகக்கூடிய பொருட்களை (ஐ.ஏ.டி.ஏ. விவரித்துள்ளவாறு) வான்வழி மூலம் அனுப்புவதற்கான போக்குவரத்து கட்டணத்தில் 33 சதவீதம். 

வேலைவாய்ப்பு ஊக்கத் தொகை (இ.ஐ.)

பிரதம மந்திரி ரோஜ்கார் ப்ரோத்ஷாஹான் திட்டத்தின் (பி.எம்.ஆர்.பி.ஒய்.) கீழ் பணியாளர் ஓய்வூதியத் திட்டத்திற்கு (இ.பி.எஸ்.) பணியளிப்பவரின் பங்கான 8.33% அரசு ஏற்றுக் கொண்டுள்ளதுடன் கூடுதலாக பணியாளர் வைப்பு நிதிக்கு (இ.பி.எப்.) பணியளிப்பவரின் பங்கான 3.67 சதவீத அரசே செலுத்தும்.

 

          அனைத்து கூறுகளின் ஊக்கத்தொகையின் ஒட்டுமொத்த அளவு, அலகு ஒன்றிற்கு ரூ.200 கோடியாக இருக்கும்.

          புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இத்திட்டம் வடகிழக்கு பகுதியில் தொழிற்சாலைமயமாவதை ஊக்குவிப்பதுடன், வேலைவாய்ப்பு மற்றும் வருவாயை அதிகரிக்கச் செய்யும்.

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Mutual fund industry on a high, asset surges Rs 17 trillion in 2024

Media Coverage

Mutual fund industry on a high, asset surges Rs 17 trillion in 2024
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை டிசம்பர் 25, 2024
December 25, 2024

PM Modi’s Governance Reimagined Towards Viksit Bharat: From Digital to Healthcare