பல்வேறு மாநிலங்கள் கூட்டுறவு சங்கங்கள் சட்டம் 2002-ன் கீழ் தேசிய அளவிலான பல்வேறு மாநில கூட்டுறவு விதைச் சங்கம் அமைப்பதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தரமான விதைகளின் விநியோகம், சந்தைப் படுத்துதல், சேமித்தல், கட்டுதல், பெயரிடுதல், செயல்படுத்துதல், கொள்முதல் மற்றும் உற்பத்திக்கான முதன்மை அமைப்பாக இச்சங்கம் விளங்கும். உள்நாட்டு இயற்கை விதைகளை மேம்படுத்துவதற்கும், பாதுகாப்பதற்குமான நிறுவனமாக இது இருக்கும். வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம், இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமம், தேசிய விதை கழகம் உள்ளிட்டவை ஆதரவுடன் நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்கள் மூலம் இது செயல்படும்.
விதை மாற்று விகிதம் மற்றும் மாறுபாட்ட மாற்று விகிதம் ஆகியவற்றை இது ஊக்குவிப்பதுடன், மகசூல் இடைவெளிகளைக் குறைத்து உற்பத்தித்திறனை அதிகரிக்க உதவும்.