துவாரகா விரைவுச்சாலைக்கு ஊக்கமளிக்கும் விதமாக குருகிராமில் ஹூடா சிட்டி சென்டரிலிருந்து சைபர் சிட்டி வரையிலான மெட்ரோ ரயில் போக்குவரத்துக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 28.50 கிலோ மீட்டர் தூரமுள்ள இந்த வழித்தடத்தில் 27 ரயில் நிலையங்கள் அமைய உள்ளன.
இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான மொத்த செலவு ரூ.5,452 கோடியாக இருக்கும். இந்தத் திட்டத்தை 4 ஆண்டுகளில் நிறைவு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசும், மாநில அரசும் 50:50 என்ற விகிதத்தில் செலவை ஏற்கும். ஹரியானா மாநில எம்ஆர்டிசி நிறுவனம் இந்தத் திட்டத்தை செயல்படுத்தும்.
பழைய குருகிராமில் இதுவரை மெட்ரோ ரயில் போக்குவரத்து இல்லை. தற்போதைய திட்டம் பழைய குருகிராமுடன் புதிய குருகிராமை இணைப்பது சிறப்பம்சமாகும். இந்த வழித்தடம் மற்ற ரயில்வே வழித்தடத்தை இணைக்கும். அடுத்த கட்டத்தில் இது இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை இணைப்பதற்கு வழிவகுக்கும். மேலும் இந்தப் பகுதியில் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1930450