பீகார் மாநிலத்தில் உள்ள தர்பங்காவில் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம்(எய்ம்ஸ்) அமைக்க பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமரின் ‘ஸ்வஸ்த்யா சுரக்ஷா’ திட்டத்தின் கீழ் இது நிறுவப்படவுள்ளது. இந்த எய்ம்ஸ் மையத்துக்கு ரூ.2,37,500/- மாத சம்பளத்தில் இயக்குனர் பதவியை உருவாக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ரூ.1264 கோடி செலவில் கட்டப்படும் இந்த எய்ம்ஸ் மருத்துவ ஆராய்ச்சி கழகம், மத்திய அரசு ஒப்புதல் அளித்த தேதியிலிருந்து 4 ஆண்டுகளுக்குள் கட்டி முடிக்கப்படவுள்ளது.
முக்கிய அம்சங்கள்:
* புதிய எய்ம்ஸில் 100 எம்.பி.பி.எஸ் இடங்கள் மற்றும் 60 பி.எஸ்.சி(நர்சிங்) இடங்கள் இருக்கும்.
* 15-20 பல்நோக்கு மருத்துவ துறைகள் இருக்கும்.
* 750 படுக்கை வசதிகள் இருக்கும்
* ஒரு நாளைக்கு வெளி நோயாளிகள் 2 ஆயிரம் பேரும், உள் நோயாளிகள் மாதத்துக்கு 1000 பேரும் சிகிச்சை பெறலாம்.
* முதுநிலை மருத்துவ படிப்புகளும் தொடங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1654424