பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, குஜராத் மாநிலம் லோதலில் தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகத்தை மேம்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டம் இரண்டு கட்டங்களாக நிறைவேற்றப்படும்.
தன்னார்வ ஆதாரங்கள்/பங்களிப்புகள் வழியாக நிதி திரட்டுவதன் மூலமும், நிதி திரட்டிய பின்னர் அவற்றை செயல்படுத்துவதன் மூலமும், பெருந்திட்டத்தின் படி, கட்டம் 1 பி மற்றும் கட்டம் 2 க்கு அமைச்சரவை கொள்கை அளவிலான ஒப்புதலை வழங்கியது.
கட்டம் 1 பி-யின் கீழ் கலங்கரை விளக்க அருங்காட்சியகம் கட்டுவதற்கு கலங்கரை விளக்கங்கள் இயக்குநரகம் நிதியுதவி அளிக்கும்.
குஜராத்தின் லோதலில் தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகத் திட்டத்தை செயல்படுத்துதல், மேம்படுத்துதல், நிர்வகித்தல் மற்றும் இயக்குதல் ஆகியவற்றிற்காக சங்கங்கள் பதிவுச் சட்டம், 1860-ன் கீழ் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் தலைமையிலான நிர்வாகக் குழுவால் நிர்வகிக்கப்படும் எதிர்காலக் கட்டங்களின் வளர்ச்சிக்காக, ஒரு தனிச் சங்கம் அமைக்கப்படும்.
திட்டத்தின் 1A கட்டப் பணிகள் 60% அளவுக்கு முடிவடைந்துள்ளது. இதனை 2025 ஆம் ஆண்டுக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் இரண்டாம் கட்டம், பொதுத்துறை மற்றும் தனியார் துறை கூட்டு முயற்சி மூலம் உருவாக்கப்பட்டு, உலகத்தரம் வாய்ந்த பாரம்பரிய அருங்காட்சியகமாக நிறுவப்படும்.
வேலைவாய்ப்பை உருவாக்கும் திறன் உட்பட முக்கிய தாக்கம்:
இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் போது, சுமார் 22,000 வேலைகள் உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதில் 15,000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பும், 7,000 பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் கிடைக்கும்.
இந்தத்திட்டம் செயல்படுத்தப்படுவதன் மூலம் வளர்ச்சி ஊக்குவிக்கப்பட்டு, உள்ளூர் சமூகங்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பார்வையாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் அறிஞர்கள், அரசு அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், கலாச்சார அமைப்புகள், சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்பு குழுக்களுக்கு பெரிதும் உதவும்.
பின்னணி:
இந்தியாவின் 4,500 ஆண்டுகள் பழமையான கடல்சார் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் பிரதமரின் தொலைநோக்குப் பார்வையின்படி, துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி அமைச்சகம் லோதலில் உலகத் தரம் வாய்ந்த தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகத்தை அமைத்து வருகிறது.
இந்த பெருந்திட்டம் புகழ்பெற்ற கட்டிடக்கலை நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் கட்டுமானம் டாடா ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
NMHC பல்வேறு கட்டங்களாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது, அதில்:
- கட்டம் 1A-யில் 6 காட்சியகங்களை கொண்ட அருங்காட்சியகம் இருக்கும்.
- கட்டம் 1B இல் மேலும் 8 காட்சியகங்களுடன் அருங்காட்சியகம், உலகின் மிக உயரமான கலங்கரை விளக்க அருங்காட்சியகம், சுமார் 1500 கார்கள் நிறுத்தும் வகையிலான பார்க்கிங் வசதி, உணவு மண்டபம், மருத்துவ மையம் போன்றவை இருக்கும்.
- இரண்டாம் கட்டத்தில் கடலோர மாநிலங்கள் அரங்குகள், விருந்தோம்பல் மண்டலம் (கடல்சார் கருப்பொருள் சுற்றுச்சூழல் ரிசார்ட் மற்றும் அருங்காட்சியகங்களுடன்), நிகழ்நேர லோதல் நகர பொழுதுபோக்கு, கடல்சார் நிறுவனம் மற்றும் விடுதி, 4 தீம் அடிப்படையிலான பூங்காக்கள் ஆகியவை இருக்கும்.