இந்திய பிரதமர் திரு. நரேந்திரே மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஜி.எஸ்.டி. நிர்வாக அமைப்பு மற்றும் அதற்கான செயலகம் அமைக்க கீழ்காணும் விஷயங்களின் அடிப்படையில் ஒப்புதல் தெரிவித்துள்ளது.
(1) அரசியலமைப்புச் சட்டம் 279 A பிரிவில் செய்யப்பட்ட திருத்தத்தின் கீழ் ஜி.எஸ்.டி. குழு அமைப்பது
(2) புது தில்லியில் அலுவலகத்தோடு அதற்கான செயலகம் அமைப்பது
(3) இதற்கென செயலர் (நிதி) ஒருவரை தேர்தல் இல்லாமல் தேர்ந்தெப்பது
(4) மத்திய கலால் மற்றும் சுங்கத்துறையின் தலைவரை இந்தக் குழு தொடர்பான அனைத்து நடவடிக்கைகளிலும் இணைத்துக் கொள்வது
(5) கூடுதல் செயலருக்கான பதவி ஒன்றையும், நான்கு ஆணையர் பதவிகளையும் (இணை செயலர் அளவில்) இந்தக் குழுவுக்காக உருவாக்குவது
ஜி.எஸ்.டி. குழுவின் உருவாக்கம் மற்றும் நடைமுறை செயல்பாட்டுக்கான அனைத்து செலவுகளையும் மத்திய அரசு ஏற்கும் என்றும் அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டது. மத்திய மற்றும் மாநில அரசுகளில் பணியாற்றும் அலுவலர்கள் இதற்காகப் பணியமர்த்தப்படுவார்கள்.
இதுவரை இதற்குத் தேவையான நடவடிக்கைகள் திட்டமிட்டபடி செயல்படுத்தப்பட்டுள்ளன.
இந்தக் குழுவின் முதல் சந்திப்பை 22 மற்றும் 23 செப். 2016ல் புது தில்லியில் கூட்ட நிதியமைச்சர் முடிவு செய்துள்ளார்.
பின்னணி:
சரக்கு மற்றும் சேவை வரிக்கான அரசியலமைப்பு சட்டமசோதா 2016 (122வது திருத்தம்) குடியரசுத் தலைவரால் செப். 8, 2016 அன்று கையெழுத்திடப்பட்டு 101வது அரசியலமைப்புச் சட்ட்மாக நிறைவேற்றப்பட்டது. சட்டப்பிரிவுக் கூறு 279A (1)ன் படி இந்தச் சட்டம் அறிவிக்கப்பட்ட 60 நாட்களுக்குள் குடியரசுத்தலைவரால் ஜி.எஸ்.டி. நிர்வாகக்குழு ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும். இதற்கான அறிவிப்பு செப். 10, 2016ல் வெளியிடப்பட்டு செப்.12, 2016ல் இருந்து நடைமுறைக்கு வந்தது.
279A பிரிவின்படி மத்திய மாநில அரசுகளின் கூட்டமைப்பால் உருவாக்கப்பட்ட இந்தக் குழுவில் கீழ்க்காண்பவர்கள் உறுப்பினர்களாக இருப்பார்கள்.
1) மத்திய நிதியமைச்சர் – தலைவர்
2) மாநில நிதியமைச்சர் – உறுப்பினர்
3) மாநில வரி தொடர்பான அமைச்சர்
அல்லது மாநில அரசு நியமிக்கும்
ஏதோ ஒரு அமைச்சர். – உறுப்பினர்
279A (4)ன் படி சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பான முக்கிய விவகாரங்களில் இந்தக் குழு பரிந்துரை செய்யும். இவற்றுள் சரக்கு மற்றும் சேவை வரியில் இருந்து சில பொருட்களை நீக்குவது, மாதிரி சரக்கு மற்றும் சேவை வரி சட்டங்கள், உற்பத்தி இடம் தொடர்பான கொள்கைகள், வரம்பு மதிப்புகள், கட்டணங்கள், பேரிடரின் போது வளங்களை அதிகரிக்கத் தேவையான சிறப்புக் கட்டணங்கள், சில மாநிலங்களுக்குத் தேவையான சிறப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட அனைத்தையும் இந்தக் குழு முடிவு செய்யும்.