ஆரம்ப பொது பங்கு(ஐபிஓ) விற்பனை மூலம், ஏற்றுமதி கடன் உறுதி கார்ப்பரேஷன் லிமிடெட் என்ற பொதுத் துறை நிறுவனத்தை செபி விதிமுறைகளின் கீழ், பங்குச் சந்தையில் பட்டியலிட, பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இசிஜிசி நிறுவனம், மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனம். ஏற்றுமதி கடன் காப்பீடு மற்றும் ஏற்றுமதி தொடர்பான சேவைகளை மேம்படுத்தும் நோக்கில் இந்நிறுவனத்தை மத்திய அரசு ஏற்படுத்தியது. 2025-26ம் ஆண்டுக்குள் இந்நிறுவனம் தனது கடன் வழங்கும் அளவை ரூ.1. லட்சம் கோடியிலிருந்து ரூ.2.03 லட்சம் கோடியாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
இசிஜிசி நிறுவனத்தின் பங்கு விற்பனை மூலம் அதன் உண்மையான மதிப்பு வெளிப்படும் மற்றும் பங்குகளை பொது மக்கள் வாங்குவதன் மூலம் மக்களின் உரிமை ஊக்குவிக்கப்படும்.
இந்த பங்கு விற்பனை மூலம் இசிஜிசி நிறுவனம், புதிய முதலீட்டை பெற்று, தனது கடன் வழங்கும் மதிப்பை அதிகரிக்க முடியும்.
இந்த பங்கு விற்பனை நடவடிக்கைகள், சமூக திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும்.