பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, கங்கை ஆற்றின் குறுக்கே (தற்போதுள்ள திகா-சோனேபூர் ரயில்-சாலைப் பாலத்தின் மேற்குப் பகுதிக்கு இணையாக) புதிதாக 4,556 மீட்டர் நீளமுள்ள, 6 வழி உயர்மட்ட / கூடுதல் அளவு கேபிள் பாலம் கட்டுவதற்கும், பீகார் மாநிலத்தில் பாட்னா மற்றும் சரண் (என்.எச்-139 டபிள்யூ) மாவட்டங்களில் இருபுறமும் அதன் அணுகு பாதைகளை அமைப்பதற்கும் ஒப்புதல் அளித்தது.
இத்திட்டத்திற்கான மொத்த செலவு ரூ.3,064.45 கோடியாகும், இதில் ரூ.2,233.81 கோடி சிவில் கட்டுமான செலவும் அடங்கும்.
இந்தப் பாலம் போக்குவரத்தை விரைவாகவும் எளிதாகவும் மாற்றுவதுடன், மாநிலத்தின், குறிப்பாக வடக்கு பீகாரில் ஒட்டுமொத்த வளர்ச்சி ஏற்படும்.
திகா (பாட்னா மற்றும் கங்கை ஆற்றின் தென் கரையில் அமைந்துள்ளது) மற்றும் சோனேபூர் (சரண் மாவட்டத்தில் கங்கை ஆற்றின் வடக்கு கரை) ஆகியவை தற்போது இலகுரக வாகனங்களின் இயக்கத்திற்காக ரயில் மற்றும் சாலை பாலத்தால் இணைக்கப்பட்டுள்ளன. எனவே, தற்போதைய சாலையை சரக்கு போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இது ஒரு பெரிய பொருளாதார தடையாகும். திகா மற்றும் சோனேபூருக்கு இடையில் இந்தப் பாலத்தைக் கட்டுவதன் மூலம் இந்தத் தடை நீக்கப்படும். இதன் மூலம் பிராந்தியத்தின் பொருளாதாரத் திறன் உயரும்.
The Cabinet has approved the construction of a new 6-lane bridge across River Ganga, connecting Digha and Sonepur in Bihar. This project will boost connectivity, spur economic growth and benefit lakhs of people across Bihar. https://t.co/MiivGjPXBK https://t.co/bsizx6bjkK
— Narendra Modi (@narendramodi) December 27, 2023