பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைகு கூட்டத்தில், CITIIS 2.0 என்னும் நகரங்களைப் புதுமைப்படுத்தவும், ஒருங்கிணைக்கவும், நிலைநிறுத்தவும் மேற்கொள்ளப்படும் நகர முதலீடுகள் 2.0 திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. CITIIS 2.0 என்பது பிரெஞ்சு மேம்பாட்டு நிறுவனம் (ஏஎப்டி) , மறுகட்டமைப்புக்கான கடன் நிறுவனம் ( கேஎப்டபிள்யு), ஐரோப்பிய ஒன்றியம் (இயு), தேசிய நகர்ப்புற விவகார நிறுவனம் (என்ஐயுஏ) ஆகியவற்றுடன் இணைந்து வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தால், உருவாக்கப்பட்ட ஒரு திட்டமாகும். இந்த்த் திட்டம் நான்கு ஆண்டுகளுக்கு, அதாவது 2023 முதல் 2027 வரை செயல்படுத்தப்படும்.
நகர அளவில் ஒருங்கிணைந்த கழிவு மேலாண்மை, மாநில அளவில் பருவநிலை சார்ந்த சீர்திருத்த நடவடிக்கைகள், தேசிய அளவில் நிறுவனங்களை வலுப்படுத்துதல் மற்றும் அறிவைப் பரப்புதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம் சுழற்சில் பொருளாதாரத்தை மேம்படுத்தும் போட்டித் திட்டங்களுக்கு இந்தத் திட்டம் ஆதரவளிக்கும்.
CITIIS 2.0க்கான நிதியில் ரூ.1760 கோடி கடன் (200 மில்லியன் யூரோ), (ஏஎப்டி, கேஎப்டபிள்யு ஆகியவை தலா 100 மில்லியன் யூரோ), ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும் ரூ.106 கோடி( 12 மில்லியன் யூரோ) தொழில்நுட்ப உதவி மானியம் ஆகியவை அடங்கும்.
CITIIS 1.0 இன் அனுபவம், வெற்றிகளை மேம்படுத்துவதையும் அளவிடுவதையும் CITIIS 2.0 நோக்கமாகக் கொண்டுள்ளது. CITIIS 1.0 வின் மொத்தச் செலவு ரூ 933 கோடி (106 மில்லியன் யூரோ).