Viability gap funding support upto Rs. 19,041 crores approved for implementation of BharatNet under PPP Model in 16 States
Approval also given for extending BharatNet connectivity to cover all remaining States/UTs in the country.

16 மாநில கிராமங்களில் பாரத் நெட்  திட்டத்தை அமல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்  அளித்துள்ளது.

மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைப்பெற்றது. இதில் பல திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டன.

16 மாநிலங்களில் உள்ள கிராமங்களில், பொதுத்துறை மற்றும் தனியார் பங்களிப்பின் மூலம் மாற்றியைமக்கப்பட்ட பாரத் நெட் திட்ட உத்தியை அமல்படுத்த பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மக்கள் குடியிருக்கும் அனைத்து கிராமங்களிலும், பாரத் நெட் திட்டம் நீட்டிக்கப்படும்.  இந்த மாற்றியமைக்கப்பட்ட உத்தியில், சர்வதேச ஏலப் போட்டி மூலம் தேர்ந்தெடுக்கப்படும் நிறுவனங்கள் பாரத் நெட்  திட்டத்தை  செயல்படுத்தும்.  இதில் கண்ணாடியிழை கேபிள் மூலம் இணையதள இணைப்பு வழங்கப்படும்.  பொதுத்துறை மற்றும் தனியார் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படும் இத்திட்டத்துக்கு ரூ.19,041 கோடி மானியத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், ஹிமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம், அசாம், மேகாலயா, மணிப்பூர், மிசோரம், திரிபுரா, நாகலாந்து மற்றும் அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 3.61 லட்சம் கிராமங்களில் இணையதள இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மீதமுள்ள மாநிலங்களில் உள்ள கிராமங்களிலும் பாரத் நெட் திட்டத்தை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

கடன் உத்திரவாத திட்டம்:

கொரோனா 2ம் அலை காரணமாக பாதிக்கப்பட்ட சுகாதாரம் மற்றும் மருத்துவ துறைகளுக்கு கடன் உத்திரவாத திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதில் புதிய திட்டங்கள் மற்றும் விரிவாக்க திட்டங்களுக்கு ரூ.50,000 கோடி வரை நிதி உத்திரவாதம் வழங்கப்படும்.

மேலும், அவசரகால கடன் உத்திரவாத திட்டத்தின் கீழ், ரூ.1,50,000 கோடி வரை கூடுதல் நிதியளிக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.  இத்திட்டம், 2022, மார்ச் 31ம் தேதி வரை அனுமதிக்கப்பட்ட தகுதியான கடன்கள் அல்லது ரூ.50,000 கோடி வரை அனுமதிக்கப்பட்ட கடன்கள், இதில் எது முன்போ  அதற்கு இந்த திட்டம் பொருந்தும்.

அவசரகால கடன் உத்திரவாத திட்டம் தொடரும் திட்டம் ஆகும். இது 30.09.2021 வரை வழங்கப்பட்ட உத்திரவாத அவசரகால கடன் திட்டம் அல்லது இத்திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் கோடி, இதில் எது முன்போ அதற்கு இத்திட்டம் பொருந்தும்.

இந்த திட்டங்கள், நாட்டில் சுகாதார கட்டமைப்பை மேம்படுத்தும், அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.

தற்சார்பு இந்தியா வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பதிவுக்கான கடைசி தேதி நீட்டிப்பு:

தற்சார்பு இந்தியா வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் (ABRY) பயன்களை பெறும் பயனாளிகள் பதிவு செய்வதற்கான  கடைசி தேதியை 2021 ஜூன் 30ம் தேதியிலிருந்து, 2022 மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த நீட்டிப்பு மூலம், முறைசார்ந்த  தொழில் துறையில்  71.8 லட்சம் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 79,577 நிறுவனங்கள் மூலம் 21.42 லட்சம் பயனாளிகளுக்கு 18.06.2021-ம் தேதி வரை ரூ.902 கோடி வழங்கப்பட்டுள்ளது. பதிவுக் காலம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதால், இத்திட்டத்தின் செலவு ரூ.22,098 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

வேலை அளிக்கும் நிறுவனங்களின் நிதிச்சுமையை குறைக்க இபிஎப்ஓ மூலம் இத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது.

புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு அனுமதி:  

* இந்தியா மற்றும் காம்பியா  குடியரசு இடையே, பணியாளர் நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்களை புதுப்பிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட  மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதில் மத்திய பணியாளர் அமைச்சகத்தின் நிர்வாக சீர்திருத்த துறை மற்றும் காம்பியா குடியரசு நாட்டின் பொதுச் சேவை ஆணையம் கையெழுத்திடுகிறது.

இந்த ஒப்பந்தம் இரு நாடுகளின் பணியாளர் நிர்வாகத்தை புரிந்து கொள்ளவும், நிர்வாக முறையை மேம்படுத்தவும் உதவும்.

* சுகாதாரத்துறை ஆராய்ச்சியில் இந்தியா மற்றும் மியான்மர் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், மியான்மர் சுகாதாரத்துறை அமைச்சகம் ஆகியவை இந்த ஒப்பந்தத்தில் கடந்த பிப்ரவரி மாதம் கையெழுத்திட்டன. இரு நாடுகள் இடையே சுகாதார ஆராய்ச்சி உறவை மேம்படுத்துவதுதான் இந்த ஒப்பந்தத்தின் நோக்கம்.

* சுகாதார ஆராய்ச்சி துறையில் இந்தியா மற்றும் நேபாளம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், நேபாள சுகாதார ஆராய்ச்சி கவுன்சில் ஆகியவை கடந்தாண்டு நவம்பர் 17ம் தேதி மற்றும் இந்தாண்டு ஜனவரி 4ம் தேதி கையெழுத்திட்டன. கூட்டு ஆராய்ச்சி நடவடிக்கைகளில் இணைந்து செயல்படுவதுதான் இந்த ஒப்பந்தத்தின் நோக்கம். இரு நாடுகளில் நிலவும் சுகாதார பிரச்சினைகள், ஆயுர்வேதம்/பாரம்பரிய மருத்துவம் மற்றும் மூலிகைகள், தொற்று அற்ற நோய்கள் ஆகியவை குறித்த ஆராய்ச்சியில் இரு நாடுகளும் கூட்டாக செயல்படும்.

 

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Snacks, Laughter And More, PM Modi's Candid Moments With Indian Workers In Kuwait

Media Coverage

Snacks, Laughter And More, PM Modi's Candid Moments With Indian Workers In Kuwait
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை டிசம்பர் 22, 2024
December 22, 2024

PM Modi in Kuwait: First Indian PM to Visit in Decades

Citizens Appreciation for PM Modi’s Holistic Transformation of India