பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில், ரயில்வே அமைச்சகத்தின் மொத்தம் ரூ.7,927 கோடி (தோராயமாக) மதிப்பீட்டிலான மூன்று திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
திட்டங்கள்:
i. ஜல்கான் - மன்மாட் 4-வது ரயில் பாதை (160 கி.மீ)
ii. பூசாவல் - கந்த்வா 3 & 4-வது ரயில் பாதை (131 கி.மீ)
iii. பிரயாக்ராஜ் (இராதத்கஞ்ச்) - மாணிக்பூர் 3-வது ரயில் பாதை (84 கி.மீ)
முன்மொழியப்பட்ட பல்வழித் திட்டங்கள் செயல்பாடுகளை எளிதாக்கும் மற்றும் நெரிசலைக் குறைக்கும், மும்பை மற்றும் பிரயாக்ராஜ் இடையே பரபரப்பான பிரிவுகளில் மிகவும் தேவையான உள்கட்டமைப்பு வளர்ச்சியை வழங்கும்.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் புதிய இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப இந்தத் திட்டங்கள் உள்ளன. இது பிராந்தியத்தில் உள்ள மக்களின் வேலைவாய்ப்பு / சுய வேலை வாய்ப்புகளை அதிகரித்து, அவர்களை "தன்னிறைவு பெற்றவர்களாக" மாற்றும். இந்தத் திட்டங்கள், பிரதமரின் விரைவு சக்தி தேசிய பெருந்திட்டத்தின் விளைவாக உருவானவை. இவை ஒருங்கிணைந்த திட்டமிடல் மூலம் சாத்தியமாகியுள்ளன. மக்கள், சரக்குகள் மற்றும் சேவைகளின் இயக்கத்திற்கு தடையற்ற இணைப்பை இந்த திட்டங்கள் வழங்கும்.
மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களில் உள்ள ஏழு மாவட்டங்களை உள்ளடக்கிய இந்த மூன்று திட்டங்கள், தற்போதுள்ள இந்திய ரயில்வேயின் கட்டமைப்பை சுமார் 639 கி.மீ. அளவுக்கு அதிகரிக்கும். முன்மொழியப்பட்ட பல்வழித் திட்டங்கள் சுமார் 1,319 கிராமங்கள் மற்றும் சுமார் 38 லட்சம் மக்கள் தொகைக்கு சேவை செய்வதுடன், இரண்டு முன்னேற விரும்பும் மாவட்டங்களுக்கும் (கந்த்வா மற்றும் சித்ரகூட்) இணைப்பை மேம்படுத்தும்.
முன்மொழியப்பட்ட திட்டங்கள், மும்பை-பிரயாக்ராஜ்-வாரணாசி வழித்தடத்தில் கூடுதல் பயணிகள் ரயில்களை இயக்க உதவுவதன் மூலம் இணைப்பை மேம்படுத்தும், நாசிக் (திரியம்பகேஷ்வர்), காண்ட்வா (ஓம்காரேஷ்வர்) மற்றும் வாரணாசி (காசி விஸ்வநாத்) ஆகிய இடங்களில் உள்ள ஜோதிர்லிங்கங்க கோவில்களுக்கும், பிரயாக்ராஜ், சித்ரகூட், கயா மற்றும் ஷீரடியில் உள்ள மத வழிபாட்டு தலங்களுக்கும் பயணிக்கும். கூடுதலாக, யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய தளங்களான கஜுராஹோ, அஜந்தா மற்றும் எல்லோரா குகைகள், தேவ்கிரி கோட்டை, ஆசிர்கர் கோட்டை, ரேவா கோட்டை, யவால் வனவிலங்கு சரணாலயம், கியோட்டி நீர்வீழ்ச்சி மற்றும் பூர்வா நீர்வீழ்ச்சி போன்ற பல்வேறு இடங்களுக்கான பயணத் தொடர்பை மேம்படுத்துவதன் மூலம் சுற்றுலாவை அதிகரிக்கும்.
இவை, வேளாண் பொருட்கள், உரம், நிலக்கரி, எஃகு, சிமெண்ட், கொள்கலன்கள் போன்ற பொருட்களைக் கொண்டு செல்வதற்கான முக்கிய வழித்தடங்களாகும். திறன் விரிவாக்கப் பணிகளின் விளைவாக ஆண்டுக்கு 51 மில்லியன் டன்கள் அளவுக்கு கூடுதல் சரக்குப் போக்குவரத்து ஏற்படும். ரயில்வே சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும், எரிசக்தித் திறன்மிக்க போக்குவரத்து முறையாகவும் இருப்பதால், பருவநிலை இலக்குகளை அடைவதற்கும், கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதற்கும் (271 கோடி கிலோ) உதவும்.
Better infrastructure is about connecting dreams and accelerating progress.
— Narendra Modi (@narendramodi) November 26, 2024
The Cabinet approval to three major rail projects will benefit Maharashtra, Madhya Pradesh and Uttar Pradesh. It will boost development along the busy sections between Mumbai and Prayagraj.…