பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து முன்னாள் குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டது.
ஒரே நேரத்தில் தேர்தல்: உயர்மட்டக் குழுவின் பரிந்துரைகள்
1. 1951 முதல் 1967 வரை ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன.
2. சட்ட ஆணையம்: 170 வது அறிக்கை (1999): ஐந்து ஆண்டுகளில் மக்களவை மற்றும் அனைத்து சட்டமன்றங்களுக்கும் ஒரே தேர்தல்.
3. நாடாளுமன்றக் குழுவின் 79-வது அறிக்கை (2015): ஒரே நேரத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்துவதற்கான வழிமுறைகளை பரிந்துரைத்தல்.
4. திரு. ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழு, அரசியல் கட்சிகள், நிபுணர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் விரிவாக ஆலோசனை நடத்தியது.
5. இந்த அறிக்கை ஆன்லைனில் கிடைக்கிறது:https://onoe.gov.in
6. நாட்டில் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவதற்கு பரவலான ஆதரவு இருப்பதாக விரிவான பின்னூட்டங்கள் காட்டுகின்றன.
பரிந்துரைகள் மற்றும் முன்னோக்கிச் செல்லும் வழி
- இரண்டு கட்டங்களாக செயல்படுத்தவும்.
- முதல் கட்டமாக மக்களவை மற்றும் சட்டப் பேரவைத் தேர்தலை ஒரே நேரத்தில் நடத்த வேண்டும்.
- இரண்டாம் கட்டமாக: பொதுத் தேர்தல் நடந்த 100 நாட்களுக்குள் உள்ளாட்சித் தேர்தலை (பஞ்சாயத்து மற்றும் நகராட்சிகள்) நடத்த வேண்டும்.
- அனைத்து தேர்தல்களுக்கும் பொதுவான வாக்காளர் பட்டியல்.
- நாடு முழுவதும் விரிவான விவாதங்களுக்கு வழிவகுக்கும்.
- செயல்படுத்தும் குழுவை அமைக்க வேண்டும்.
The Cabinet has accepted the recommendations of the High-Level Committee on Simultaneous Elections. I compliment our former President, Shri Ram Nath Kovind Ji for spearheading this effort and consulting a wide range of stakeholders.
— Narendra Modi (@narendramodi) September 18, 2024
This is an important step towards making our…