நிதி நிலை அறிக்கை புதிய இந்தியாவிற்கான நிதி நிலை அறிக்கை என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
2019-20 ஆம் நிதியாண்டுக்கான இடைகால நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின்பு, தொடர்ந்து தனது கருத்துகளை டுவிட்டு செய்த பிரதமர், 12 கோடி விவசாயிகள் அவர்களின் குடும்பத்தினர், வருமான வரி செலுத்தும் 3 கோடி நடுத்தர வர்க்கத்தினர்கள், 30-40 கோடி தொழிலாளர்கள் புதிய இந்தியாவிற்கான நிதி நிலை அறிக்கைக்கு நன்றி தெரிவிப்பார்கள் என்று கூறினார்.
தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் வளர்ச்சிக்கான முன்முயற்சிகள் பல்வேறு மக்களின் வாழ்க்கைக்கு உதவும் வகையில் உள்ளது. இது நிதி நிலை அறிக்கையிலும் பிரதிபலித்துள்ளது. விவசாயிகள் முதல் நடுத்தர மக்கள் வரை, வருமான வரி விலக்கு முதல் உள்கட்டமைப்பு வரை, வீட்டு வசதி முதல் சுகாதாரம் வரை, புதிய இந்தியாவின் அதிவேக வளர்ச்சியினால் அனைவரும் பயன்பெற உள்ளனர் என்று பிரதமர் தெரிவித்தார். ஏழ்மை பிடியிலிருந்து பல மக்கள் விடுபட்டுள்ளதை காணும்போது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. நமது புதிய நடுத்தர மக்கள் எண்ணிக்கையும் அவர்களின் கனவுகளும் வளர்ந்து வருகிறது. வரி விலக்குக்காக நடுத்தர மக்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர், நாட்டின் வளர்ச்சிக்காக பெருமளவில் பங்களித்த நடுத்தர மக்களுக்கு நான் தலைவணங்குகிறேன் என்று கூறினார்.
நிதிநிலை அறிக்கைகள் வாயிலாக பல ஆண்டுகளாக விவசாயிகளுக்காக பல்வேறு முன்முயற்சிகள் கொண்டுவரப்பட்டாலும் இத்திட்டத்தின் பலன்களை விவசாயிகள் அடையவில்லை என்று கூறினார். 5 ஏக்கருக்கும் கீழ் நிலம் கொண்ட விவசாயிகளுக்கு பிரதமரின் விவசாய நிதி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருப்பது விவசாயிகளின் நலனில் வரலாற்று சிறப்பு மிக்க நடவடிக்கையாக அமையும்.
அமைப்புசாராத்துறையை பாதுகாப்பதற்கான தேவையின் முக்கியத்துவம் குறித்து பேசிய அவர், பிரதமரின் ஷ்ரம் யோகி மன்தன் யோஜனா பெருமளவில் உதவும் என்று கூறினார். இத்துறையின் நலன் காப்பது மிகவும் அவசியமாகும். அதனை புதிய இந்தியாவுக்கான இந்த நிதி நிலை அறிக்கை செய்துள்ளது. ஆயுஷ்மான் பாரத் திட்டம் மற்றும் பன்முக பாதுகாப்புத் திட்டங்களும் மக்களின் வாழ்க்கையைத் தொடும் என்று பிரதமர் தெரிவித்தார்.
நாட்டின் வளர்ச்சியின் பயன்கள், சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் கிடைக்க செய்வதை உறுதி செய்வது அவசியமாகும். இந்த நிதி நிலை அறிக்கை ஏழைகளுக்கு அதிகாரமளித்து, விவசாயிகளுக்கு உத்வேகம் அளித்து, பொருளாதார வளர்ச்சியில் திருப்புமுனையை உண்டாக்கும் என்று பிரதமர் கூறினார்.