பிரதமர் திரு. நரேந்திர மோடி மகாராஷ்டிராவின் சோலாப்பூருக்கு நாளை பயணம் மேற்கொள்ளவுள்ளார். அங்கு அவர் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை துவக்கிவைத்து, பிற வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
சாலைப் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்தும் வகையில், என்.ஹெச்-211–ன் (புதிய என்.ஹெச்-52) சோலாப்பூர்-துல்ஜாப்பூர்- ஒஸ்மானாபாதின் நான்கு வழி சாலையை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார். மகாராஷ்டிராவின் மாரத்வாலா பகுதியுடன் சோலாப்பூரின் போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில் இந்த நான்கு வழி சோலாப்பூர்-ஒஸ்மானாபாத் நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
Route Layout of Four Laning of Solapur-Tuljapur-Osmanabad section
பிரதமர் வீட்டுவசதி திட்டத்தின்கீழ், பிரதமர் 30,000 வீடுகள் கட்ட அடிக்கல் நாட்டவுள்ளார். குப்பை சேகரிப்போர், ரிக்சா ஓட்டுநர், ஜவுளித் தொழிலாளர்கள், பீடித் தொழிலாளர்கள், போன்ற வீடில்லா ஏழை மக்களுக்கு இது உதவும். இத்திட்டத்தின் ஒட்டுமொத்த செலவு ரூ. 1811.33 கோடி ஆகும். இதில் 750 கோடியை மத்திய மற்றும் மாநில அரசுகள் நிதியுதவியாக வழங்கும்.
தனது தூய்மை இந்தியா கனவை பின்பற்றும் வகையில், பிரதமர் சோலாப்பூரில் பூமிக்கு கீழ் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் அகற்றும் கட்டமைப்பு மற்றும் மூன்று கழிவுநீர் சுத்திகரிப்பு கூடங்களை நாட்டுக்கு அர்ப்பணிப்பார். இது நகரத்தின் கழிவுநீர் வசதியை அதிகரித்து தூய்மையை மேம்படுத்துகிறது. தற்போதுள்ள முறை மாற்றியமைக்கப்பட்டு, சாக்கடை குழாய்களை இணைக்கும் திட்டம் அம்ருத் இயக்கத்தின்கீழ் அமலாக்கம் செய்யப்படும்.
சோலாப்பூர் அதிநவீன நகரம் திட்டத்தின் மண்டலம் சார்ந்த வளர்ச்சியின்கீழ், , உஜானி அணையிலிருந்து சோலாப்பூர் நகரத்திற்கு குடிநீர் விநியோகத்தை அதிகரிக்கப்பது, அம்ருத் இயக்கத்தின்கீழ், பூமிக்கு அடியில் கழிவுநீர் முறை திட்டம், ஆகியவற்றை ஒருங்கிணைத்து விநியோகம் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு முறை” திட்டத்தின் அடிக்கலை பிரதமர் நாட்டுவார். அதிநவீன நகர இயக்கத்தின்கீழ், இத்திட்டத்திற்காக ரூ.244 கோடி வழங்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி குடிமக்களுக்கு உதவும் வகையில் இந்தத் திட்டம் சேவைத் துறையில் பெரும் வளர்ச்சியை ஏற்படுத்தி, பொதுமக்களின் சுகாதாரத்தையும் மேம்படுத்தும்.
இதன்பிறகு பிரதமர் பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றவுள்ளார். இது இந்நகரத்திற்கு பிரதமரின் இரண்டாவது பயணமாகும். இதற்கு முன்பு ஆகஸ்ட் 16, 2014 அன்று இந்நகரத்திற்கு பயணம் மேற்கொண்ட பிரதமர், என்.ஹெச்-9 கர்நாடகா எல்லை / சோலாப்பூர் – மகாராஷ்டிரா நான்கு வழித் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி, 765 கிலோவாட் திறன்கொண்ட சோலாப்பூர்-ராய்ச்சூர் மின்னணு பரிமாற்ற வழித்தடத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.