பிரதமர் திரு நரேந்திரமோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், சுகாதாரக் கட்டமைப்பு வசதிகளுக்கு பெரும் ஊக்கமளிக்கும் வகையில், தேசிய சுகாதார இயக்கத்தை 01.04.2017 முதல் 31.03.2020 வரை தொடர ஒப்புதல் அளிக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு மத்திய அரசின் பங்களிப்பாக, ரூ.85,217 கோடிக்கான நிதி ஒதுக்கீட்டிற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
பிரதமரின் ஜம்மு கஷ்மீர் 2015 வளர்ச்சித் தொகுப்பைத் தொடரவும், அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்மூலம், மாவட்ட மருத்துவமனைகள், மாவட்ட துணை மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங்களுக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை, ஐந்து ஆண்டு காலத்தில் ஏற்படுத்துவதற்கு, 2017 ஏப்ரல்-1 முதல் 2020 மார்ச் 31-வரை ரூ. 625.20 கோடி செலவில், முற்றிலும் மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்துவதற்கு நிதி ஒதுக்கவும் அனுமதி அளிக்கப்பட்டது.
திட்டத்தின் சிறப்பம்சங்கள்:
- தேசிய சுகாதார இயக்கம், சர்வதேச சுகாதார சேவைக்கான முதன்மைக் கருவியாக இருக்கும்.
- இதன் குறிக்கோள் / இலக்கு, தேசிய சுகாதார இயக்கம் 2017 மற்றும் நீடித்த வளர்ச்சிக்கான இலக்கு-3 வுடன் இணைந்ததாக இருக்கும்.
- ஆயிரமாவது ஆண்டு வளர்ச்சி இலக்கை இந்தியா அடைய, தேசிய சுகாதார இயக்கம் உதவிகரமாக அமைந்ததுடன், சர்வதேச சுகாதார சேவைக்கான இலக்கு உட்பட நீடித்த வளர்ச்சிக்கான இலக்கு-3-ஐ எட்டுவதற்கான முக்கிய கருவியாகவும் இருக்கும்.
- தேசிய சுகாதார இயக்கம், அரசு சுகாதார சேவை அமைப்புகளை தொடர்ந்து வலுப்படுத்த, குறிப்பாக முன்னுரிமை மாவட்டங்களுக்கு தொடர்ந்து பயனளிப்பதாக இருக்கும்.
- சாதாரண தொற்றா நோய்கள், முதியோர் சுகாதார சேவை, வலி நிவாரண சேவை மற்றும் மறுவாழ்வு சேவைகள் உள்ளிட்ட குறிப்பிட்ட சில சேவைகளை விரிவான தொடக்க சுகாதார சேவைகளுக்கு மாற்ற, இத்திட்டம் உதவிகரமாக இருக்கும். இந்த சேவைகள், ஆரம்ப சுகாதார மையங்களை, சுகாதார மற்றும் நலவாழ்வு மையங்களாக மாற்ற வகைசெய்யும்.
- தொற்றா நோய்களைக் கண்டறிந்து, சிகிச்சை அளிப்பது உள்ளிட்ட தடுப்பு, மேம்பாடு மற்றும் மறுவாழ்வு சேவைகளை சுகாதார மற்றும் நலவாழ்வு மையங்கள் வழங்கும். இந்த மையங்கள், சமுதாய சுகாதார மையங்கள் மற்றும் மாவட்ட மருத்துவமனைகளுடன் இணைக்கப்படுவதோடு, இருவழி மேற்கோள் மற்றும் துண்டாக்குவதை குறைப்பதற்கான தொடர் வழிமுறைகளை வழங்கி, தொடர் சேவைகளை மேம்படுத்தவும் உதவும். சாதாரண தொற்றா நோய்களுக்கான உலகளாவிய நோய் கண்டுபிடிப்பு உள்ளிட்ட 12 சேவைகள் இந்த தொகுப்பில் இடம்பெறும்.
- தொடக்க சுகாதார சேவைகள் மற்றும் பொது சுகாதாரம் சார்ந்த போட்டிகளில் அனுபவமிக்க துணை மையங்கள் மட்டத்தில் இடைநிலை சுகாதாரப் பணியாளரை நியமித்தல்.
- ஆயுஷ் மருத்துவத்தை ஒருங்கிணைத்து, தீராத நோய்களை தடுப்பது மற்றும் சுகாதார சேவை மேம்பாடு உள்ளிட்ட நலப்பணிகளை மேற்கொள்ளுதல்.
- சுகாதார அறிகுறிகள் மற்றும் பிறரைத் தூண்டும் வகையிலான செயல்பாடுகள் உள்ளிட்ட இலக்குகளை நிர்ணயம் செய்தல்.
- அதிக முதலீட்டில் நல்ல விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய சுகாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ளுதல்.
- அனைத்து செங்குத்தான நோய் திட்டங்களை கிடைமட்ட அளவில் ஒருங்கிணைத்து, சுகாதார மற்றும் நலவாழ்வுக்கான ஒருங்கிணைந்த அணுகுமுறையை மேற்கொள்ளுதல்.
- சிறப்பாக உருவாக்கப்பட்ட மற்றும் மாறுபட்ட அணுகுமுறைகள் மற்றும் இடைமறித்தல் மூலம் இலக்குகளை அடைதல்.
- வருவாய்க்கு அதிகமான செலவுகளை குறைக்க, சிறப்புக் கவனம் செலுத்துவதுடன், தேசிய சுகாதார இயக்கத்தின் மூலம் மருந்துப் பொருட்கள், நோய்க் கண்டறிதல் சேவை, பிரதமரின் தேசிய நீரிழிவு தடுப்புத் திட்டம் உள்ளிட்ட சேவைகளை விரைவுபடுத்துதல்.
- சுகாதார சேவைகளுக்கான பல்துறை நடவடிக்கைகளுக்கான தளங்களை உருவாக்குதல்.
- முன்னணிப் பணியாளர்களிடையே ஒத்துழைப்பு மற்றும் ஊக்கத்தை அதிகரிக்க குழுக்கள் அளவிலான ஊக்கத்தொகை அளித்தல்.
- அரசு சுகாதார மையங்களுக்கு, தரச்சான்று பெறுதல், அரசு சுகாதார மையங்களின் சுகாதாரம் மற்றும் நோக்கங்களில் அதிக கவனம் செலுத்துதல். அரசு சுகாதார வசதிகளை பயன்படுத்துவதற்கு துல்லியமான இலக்கை நிர்ணயித்தல்.
- தடுப்பூசித் திட்டத்தை அனைத்து மாநிலங்களுக்கும் விரிவுபடுத்துதல்.
- ஆயுஷ்மன் பாரத் திட்டத்தின்கீழ், தேசிய சுகாதார பாதுகாப்பு இயக்கத்தை ஒருங்கிணைத்தல்.
விளைவுகள்:
இது கீழ்க்கண்ட முடிவு / விளைவுகளை ஏற்படுத்தும்.
- தேசிய சுகாதார இயக்கத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை இனிவரும் காலங்களில் அடைதல்.
- பச்சிளம் குழந்தை இறப்பு விகிதம், சிசு இறப்பு விகிதம், ஐந்து வயதிற்கும் குறைவான குழந்தை இறப்பு, பிரசவத்தின்போது ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் ஒட்டுமொத்த கருவுறுதல் வீதம் போன்ற அம்சங்களில் கவனம் செலுத்துதல்.
- தொற்று நோய்கள் பரவுகளை குறைப்பது.
- மருத்துவ வசதிகளுக்காக வருவாயைவிட அதிக செலவு செய்வதை குறைப்பது.
- தொற்றா நோய்களுக்கும், வழக்கான தடுப்பூசி சேவைகளை பயன்படுத்துவது.