பாரதிய ஜனதா கட்சி, இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் கட்சியாகும், மேலும் இது நாடு முழுவதும் தனது இருப்பை நிலை நிறுத்திருள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசசு விவசாயிகள், ஏழைகள், ஒடுக்கட்டப்பட்டவர்கள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் புதிய நடுத்தர வகுப்பினரின் லட்சியங்களைப் பூர்த்தி செய்யும் உள்ளடக்கிய மற்றும் வளர்ச்சி சார்ந்த ஆளுகை சகாப்தத்தை அறிமுகப்படுத்தியது.
2024 பொதுத் தேர்தலில், பா.ஜ.க மூன்றாவது முறையாக சாதனை வெற்றியைப் பெற்றது. திரு மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்றார். பொருளாதார சீர்திருத்தங்கள், டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் நலத்திட்டங்கள் ஆகியவற்றில் கட்சியின் கவனம், அதன் வெற்றிக்கு பங்களித்தது.
2024-இல் குடியரசுத்தலைவர் மாளிகையில் திரு நரேந்திர மோடி பிரதமராகப் பதவி ஏற்றுக் கொள்கிறார்
இதற்கு முன்னதாக, கடந்த 2019 மற்றும் 2014-ஆம் ஆண்டுகளில் பிரதமர் மோடி, பிரதமராகப் பதவி ஏற்றுக்கொண்டார். 2014 மக்களவை தேர்தலின் போது, மூன்று தசாப்தங்களில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற முதல் கட்சி என்ற பெருமையை பா.ஜ.க பெற்றது. இந்த சாதனையைப் படைக்கும் முதலாவது காங்கிரஸ் அல்லாத கட்சியும் இதுதான்.
2014-இல் குடியரசுத்தலைவர் மாளிகையில் திரு நரேந்திர மோடி பிரதமராகப் பதவி ஏற்றுக் கொள்கிறார்
1980களில் திரு அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையின் கீழ் கட்சி பிறந்த காலத்திலிருந்தே பா.ஜ.கவின் வரலாறு தொடங்குகிறது. பா.ஜ.கவின் முன்னோடியான பாரதிய ஜன சங்கம், 1950, 60 மற்றும் 70 களில் இந்திய அரசியலில் தீவிரமாக இருந்தது, அதன் தலைவர் திரு ஷியாமா பிரசாத் முகர்ஜி, சுதந்திர இந்தியாவின் முதல் அமைச்சரவையில் பணியாற்றினார். 1977 முதல் 1979 வரை திரு மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா கட்சி அரசின் ஒருங்கிணைந்த பகுதியாக ஜனசங்கம் இருந்தது. இந்திய வரலாற்றில் காங்கிரஸ் அல்லாத முதல் அரசு இதுதான்.
புதுதில்லியில் பா.ஜ.க கூட்டம் ஒன்றில் திரு எல். கே. அத்வானி, திரு அடல் பிகாரி வாஜ்பாய் மற்றும் திரு முரளி மனோகர் ஜோஷி
நமது பண்டைய கலாச்சாரம் மற்றும் நெறிமுறைகளிலிருந்து உத்வேகம் பெறும் ஒரு வலுவான, தன்னம்பிக்கை நிறைந்த, உள்ளடக்கிய மற்றும் வளமான இந்தியாவை உருவாக்குவதில் பா.ஜ.க உறுதியாக உள்ளது. பண்டிட் தீன் தயாள் உபாத்யாயா முன்வைத்த 'ஒருங்கிணைந்த மனிதநேயம்' என்ற தத்துவத்தால் கட்சி ஆழமாக ஈர்க்கப்பட்டுள்ளது. இந்திய சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரிடமிருந்தும், குறிப்பாக இந்திய இளைஞர்களிடமிருந்து பா.ஜ.க தொடர்ந்து ஆதரவைப் பெற்று வருகிறது.
ஒப்பீட்டளவில் குறுகிய காலத்தில், இந்திய அரசியல் அமைப்பில் கணக்கிடக்கூடிய ஒரு குறிப்பிடத்தக்க சக்தியாக பா.ஜ.க மாறியது. 1989-ஆம் ஆண்டில் (அதன் தொடக்கத்திலிருந்து 9 ஆண்டுகள்), மக்களவையில் கட்சியின் எண்ணிக்கை 2 லிருந்து (1984 இல்) 86 இடங்களாக உயர்ந்தது, மேலும் பா.ஜ.க, காங்கிரஸ் எதிர்ப்பு இயக்கத்தின் மையத்தில் இருந்தது, இது 1989-1990 வரை இந்தியாவை ஆட்சி செய்த தேசிய முன்னணியை உருவாக்க வழிவகுத்தது. 1990-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல்களில் பா.ஜ.க பல மாநிலங்களில் அரசுகளை அமைத்ததால் இந்த எழுச்சி 1990 களில் தொடர்ந்தது. 1991-ஆம் ஆண்டில், இது மக்களவையில் பிரதான எதிர்க்கட்சியாக மாறியது, இளம் கட்சிக்கு இது ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும்.
புது தில்லியில் கட்சிக் கூட்டம் ஒன்றில் பா.ஜ.க தலைவர்கள்
1996 கோடையில், திரு அடல் பிகாரி வாஜ்பாய் நாட்டின் பிரதமராகப் பதவியேற்றார், முழுமையான காங்கிரஸ் அல்லாத பின்னணி கொண்ட முதல் பிரதமர் என்ற சாதனையைப் படைத்தார். 1998 மற்றும் 1999 தேர்தல்களில் மக்களின் ஆதரவைப் பெற்ற பா.ஜ.க, திரு வாஜ்பாயின் தலைமையின் கீழ் 1998-2004 வரை ஆறு ஆண்டுகள் நாட்டை ஆட்சி செய்தது. திரு. வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, இந்தியாவை வளர்ச்சியின் புதிய உச்சத்திற்கு எடுத்துச் சென்ற மேம்பாட்டுத் திட்டங்களுக்காக இன்றும் நினைவுகூரப்படுகிறது
திரு அடல் பிகாரி வாஜ்பாய், புதுதில்லியில் பிரதமராகப் பதவி ஏற்றுக் கொள்கிறார்
திரு நரேந்திர மோடி 1987-ஆம் ஆண்டில் பிரதான அரசியலில் இறங்கினார் மற்றும் ஒரு வருடத்தில் குஜராத் பா.ஜ.கவின் பொதுச் செயலாளரானார். 1987-ஆம் ஆண்டின் நியாய யாத்திரை மற்றும் 1989-இல் லோக் சக்தி யாத்திரை ஆகியவற்றின் பின்னணியில் அவரது நிறுவன திறன்கள் இருந்தன. இந்த முயற்சிகள் குஜராத்தில் பா.ஜ.க அதிகாரத்திற்கு வருவதில் ஒரு முக்கிய பாத்திரம் வகித்தன. முதலில் 1990 இல் ஒரு குறுகிய காலத்திற்கு இருந்தது, பின்னர் 1995 முதல் இன்றுவரை இருந்து வருகிறது. 1995-ஆம் ஆண்டில் பா.ஜ.கவின் தேசிய செயலாளராக ஆன திரு மோடிக்கு, 1998-ஆம் ஆண்டில், கட்சி அமைப்பில் ஒரு முக்கிய பதவியான பொதுச் செயலாளர் (அமைப்பு) பொறுப்பு வழங்கப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 2001 இல், குஜராத் முதல்வராகக் கடமையாற்றும் பொறுப்பை கட்சி அவரிடம் ஒப்படைத்தது. 2002, 2007 மற்றும் 2012-ஆம் ஆண்டுகளில் மீண்டும் முதல்வராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பாஜகவைப் பற்றி மேலும் அறிய, கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்
பாரதிய ஜனதா கட்சியின் X கணக்கு
ஸ்ரீ எல்.கே. அத்வானி-ஜியின் இணையதளம்
ஸ்ரீ ராஜ்நாத் சிங்கின் இணையதளம்
ஸ்ரீ நிதின் கட்கரியின் இணையதளம்
பாஜக முதல்வர்கள்
அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா காண்டுவின் X கணக்கு
உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் X கணக்கு
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் இணையதளம்
மணிப்பூர் முதல்வர் என். பிரேன் சிங்கின் இணையதளம்
மணிப்பூர் முதல்வர் என். பிரேன் சிங்கின் X கணக்கு
கோவா முதல்வர் ஸ்ரீ பிரமோத் சாவந்தின் X கணக்கு
அசாம் முதல்வர் ஸ்ரீ ஹிமந்த பிஸ்வா சர்மாவின் X கணக்கு
உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியின் எக்ஸ் கணக்கு
குஜராத் முதல்வர் பூபேந்திர படேலின் இணையதளம்
திரிபுரா முதல்வர் மாணிக் சாஹாவின் X கணக்கு
சத்தீஸ்கர் முதலமைச்சர் விஷ்ணு தியோ சாயியின் X கணக்கு
மத்திய பிரதேசம் முதல்வர் டாக்டர் மோகன் யாதவின் X கணக்கு
ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் ஷர்மாவின் X கணக்கு
ஹரியானா முதல்வர் நயாப் சைனியின் இணையதளம்
ஹரியானா முதல்வர் நயாப் சைனியின் X கணக்கு