2021 நவம்பர் 1, அன்று கிளாஸ்கோவில் நடைபெற்ற சிஓபி26 உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக, இங்கிலாந்து பிரதமர் திரு.போரிஸ் ஜான்சன் எம்.பி.யை பிரதமர் திரு நரேந்திர மோடி, சந்தித்தார்.
2. சிஓபி26 மாநாட்டை வெற்றிகரமாக ஏற்பாடு செய்ததற்காகவும், காலநிலை மாற்றத்தைத் தணித்தல், ஏற்றுக்கொள்ளுதல் ஆகியவற்றுக்கான உலகளாவிய நடவடிக்கையை முன்னெடுப்பதில் அவரது தனிப்பட்ட தலைமைத்துவத்திற்காகவும் இங்கிலாந்து பிரதமர் ஜான்சனுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி, வாழ்த்து தெரிவித்தார். காலநிலை நிதி, தொழில்நுட்பம், புத்தாக்கம், இயற்கை ஹைட்ரஜன் புதுப்பிக்கவல்ல எரிசக்தி, ஐஎஸ்ஏ, சிடிஆர்ஐ கீழ் கூட்டு முயற்சிகள் உள்ளிட்ட தொழில்நுட்பங்களில் பிரிட்டனுடன் நெருக்கமாக பணியாற்றுவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
3. குறிப்பாக வர்த்தகம் மற்றும் பொருளாதாரம், மக்களுடன் இருந்து மக்கள், சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் பந்தோபஸ்து துறைகளில் பகுதிகளில் 2030-க்கான முன்னுரிமைத் திட்டங்கள் செயல்படுத்துவதை இரு பிரதமர்களும் ஆய்வு செய்தனர். சுதந்திர வர்த்தக உடன்படிக்கை பேச்சுவார்த்தைகளை தொடங்குவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் உட்பட மேம்படுத்தப்பட்ட வர்த்தக கூட்டாண்மையை வழங்குவதில் உள்ள முன்னேற்றம் குறித்து அவர்கள் திருப்தி தெரிவித்தனர்.
4. ஆப்கானிஸ்தான், பயங்கரவாத எதிர்ப்பு, இந்தோ-பசிபிக், விநியோகத் தொடர் விரிவாக்கம் மற்றும் கொவிட்டுக்குப் பிந்தைய உலகளாவிய பொருளாதார மீட்பு ஆகயிவற்றில் உள்ள பிராந்திய மற்றும் உலகளாவிய சவால்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.
5. பிரதமர் ஜான்சனை விரைவில் இந்தியாவில் வரவேற்க விரும்புவதாக பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார்.