மேதகு பிரதமர் ஷின்சோ ஆபே அவர்களே,
மரியாதைக்குரிய விருந்தினர்களே,
சீமான்களே, சீமாட்டிகளே,
கோன்பான் வா!
(இனிய இரவு வணக்கம்)
பிரதமர் என்ற முறையில் ஜப்பானுக்கு இரண்டாவது முறை வருகை புரியும் எனக்கு இந்த வரவேற்பு மிகுந்த கவுரவத்தை அளிக்கிறது. ஜப்பானியரின் அர்ப்பணிப்பு, துடிதுடிப்பான இயக்கம், வீரியம், உயிர்ப்பான திறன், சாதனைகள் ஆகியவற்றை இந்திய மக்கள் நீண்டகாலமாகப் போற்றி வருகின்றனர். ஜப்பானின் அனுபவத்திலிருந்து கற்றுக் கொள்ளவும் பின்பற்றவும் ஏராளமானவை உண்டு. இந்தியாவும் ஜப்பானும் நீண்டகால, அனுபவிக்கத் தக்க, நெருங்கிய, நட்புக்குரிய உறவைக் கொண்டுள்ளன.
இந்து மதத்திலும், பவுத்த மதத்திலும் இரு நாடுகளும் ஆழமான உறவுகளையும்
இந்துமத, புத்தமத எண்ணவோட்டங்களில் வேரூன்றியுள்ள உறவுத் தொடர்களை இந்திய ஜப்பானிய சமூகங்கள் பகிர்ந்துகொள்கின்றன.
பொருளாதார வளர்ச்சிக்கும் நாகரீகப் பண்பாட்டைக் காப்பதற்கும் இடையில் சமநிலையைப் பராமரிப்பதன் அவசியத்தை நாம் மதிக்கிறோம். திறந்த மனப்பான்மை, ஜனநாயகம், சட்டத்தை மதிப்பது ஆகியவற்றின் பொதுவான விழுமியங்களின் மூலம் நமது உறவுகள் வலுப்படுத்தப்படுகின்றன. இன்று, பொருளாதார வலு, மூலோபய விஷயங்களின் வளர்ச்சியின் மூலம் நமது சிறப்பு உபாயங்களும், உலகளாவிய கூட்டுப் பங்காண்மையும் அடையாளப்படுத்தப்படுகின்றன.
நெருங்கிய கூட்டாளிகள் என்ற வகையில், நமது இரு நாட்டு சமூகங்களுக்கு மட்டுமின்றி, மண்டலத்திற்கும், ஏன், உலகத்திற்குமே ஆதாயம் கிடைக்கும் வகையில், நாம் நிறைய செயல்களை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. நம் இரு நாடுகளின் கூட்டுப் பங்கின் மூலம் நமது மண்டலத்தில் பேச்சுவார்த்தைகளில் நன்னெறிகளையும் நல்ல அண்டைத் தன்மையையும் மேம்படுகின்றன.
இன்றைய காலத்தில், நாம் எதிர்கொள்ளும் வாய்ப்புகளுக்கும் சவால்களுக்கும் ஈடுகொடுப்பதற்கு நமது திறமைகள் இணைந்து செயல்படலாம். அதிகரித்து வரும் தீவிரவாத, பயங்கரவாத அச்சுறுத்தல்களை உலக நாடுகளுடன் இணைந்து முறியடிக்கலாம், முறியடிக்க வேண்டும்.
நண்பர்களே,
பொருளாதார வளம், கட்டுமான மேம்பாடு, திறன் மேம்பாடு, தொழில்நுட்ப முன்னேற்றம் ஆகியவற்றில் இந்தியாவுடன் இந்தியாவுடன் ஜப்பான் மதிப்புமிக்க கூட்டாளியாக எப்போதும் பயணம் செய்து வருகிறது. நமது நோக்கமும், ஒத்துழைப்பு அளவும் பல்வேறு துறைகளில் விரிவடைகின்றன.
நமது பொருளாதார உறவு தொடர்ந்து வளமாக இருந்து வருகிறது. வர்த்தக உறவு தொடர்ந்து வளர்ந்து வருகிறது. ஜப்பானிலிருந்து இந்தியாவில் முதலீடு செய்வதும் அதிகரித்துவருகிறது. முதன்மையான மேம்பாட்டு முன்முயற்சிகளில் பங்கேற்பதன் மூலம் ஜப்பான் நிறுவனங்கள் நிறைய பயனை அடையலாம்.
பதிலுக்கு தொழில்நுட்பத்திலும் புதுமை ஆக்கத்திலும் இணையற்ற நிலையில் உள்ள ஜப்பானிடமிருந்து இந்தியா பயன் பெறலாம். இந்தியாவின் மாநிலங்களுக்கும் ஜப்பானின் பல்வேறு தலைமையகங்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பும் தொடர்பும் அதிகரித்துவருவது வரவேற்கத் தக்க அம்சமாகும். உலகளாவிய பார்வையில், ஜப்பானுக்கு நாம் அளிக்கும் முக்கியத்துவத்தைப் பிரதிபலிக்கிறது. நல்லெண்ணம் மற்றும் பரஸ்பர போற்றுதல் ஆகியவை மூலம் நமது நாடுகளின் ஒத்துழைப்பு வளர்க்கப்படுகிறது. இவையெல்லாம் மாண்புமிகு ஆபேயின் வலுவான, திறமையான தலைமையில் இவை சாத்தியமாகின்றன. கடந்த இரண்டுஆண்டுகளில் அவருடன் நான் எட்டுமுறை சந்திப்பு மேற்கொண்டுள்ளேன்.
உச்சி மாநாடுகளில் கொண்டுவரப்பட்ட பல முடிவுகளைக் கொண்டாடும் நிலையில், எனக்கும் எனது குழுவினருக்கும் அளித்த இதமான வரவேற்பு, ஏற்பாடுகளுக்காக மேதகு பிரதமர் ஆபேவுக்கும் ஜப்பான் அரசுக்கும் மிகுந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
நம் இரு நாடுகளின் இலக்குகளும் ஒன்றோடு ஒன்று இணைந்துள்ளன என்பதில் சந்தேகமில்லை.
இந்திய – பசிபிக் கடலில் ஜப்பான் நாட்டுக் கடலோர மடியில் தவழும் கடல் நீர், அலையலையாக வந்து இந்தியக் கடலோரத்தைத் தாக்குகிறது. அமைதி, வளம், வளர்ச்சிக்காக நம் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவோம்.
சீமான்களே, சீமாட்டிகளே!
ஒரு சுவையான செய்தியைச் சொல்லட்டுமா?
ஜப்பான் நாட்டின் பேரரசர், பேரரசி ஆகியோருக்கு நீண்ட ஆயுள், உடல் நலம் அமையவும், பிரதமர் ஷின்சோ ஆபேவின் வெற்றி, நட்புள்ளம் கொண்ட ஜப்பானிய மக்கள், இன்றைய இரவில் கூடியிருக்கும் ஒவ்வொருவருக்கும்.
இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையில் நீண்டகாலம் இருக்கும் நட்புக்கும்
சியர்ஸ் !
(கன்பாய்!)